- Home
- Sports
- Sports Cricket
- கொல்கத்தா தாதா, பெங்கால் டைகர் கங்குலியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் ரன்வீர் கபூர்?
கொல்கத்தா தாதா, பெங்கால் டைகர் கங்குலியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் ரன்வீர் கபூர்?
இந்திய அணியின் முன்னாள் வீரர் சௌரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு படமாக உள்ள நிலையில், கங்குலியாக, ரன்வீர் கபூர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

சௌரவ் கங்குலி வாழ்க்கை வரலாறு படம்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், கிரிக்கெட் வர்ணனையாளர், இந்திய கிரிக்கெட் நிர்வாகி மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் 35ஆவது தலைவர் என்று இருந்தவர் சௌரவ் கங்குலி.
சௌரவ் கங்குலி வாழ்க்கை வரலாறு
கடந்த 1972 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார். கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரையில் கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்தார்.
சௌரவ் கங்குலி வாழ்க்கை வரலாறு
தாதா, கொல்கத்தாவின் இளவரசன், இந்திய கிரிக்கெட்டின் மகாராஜா, பெங்கால் டைகர் என்று செல்லமாக அழைக்கப்பட்டவர். கடந்த 1992 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலமாக ஒரு நாள் தொடரில் அறிமுகமானார்.
சௌரவ் கங்குலி வாழ்க்கை வரலாறு
2007 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி கடைசி ஒரு நாள் போட்டியாக அமைந்தது.
சௌரவ் கங்குலி வாழ்க்கை வரலாறு
கடந்த 1996 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான கங்குலி 2008 ஆம் ஆண்டு நவம்பர் 6 ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடைசியாக டெஸ்ட் போட்டியில் பங்கேற்றார். டெஸ்ட் போட்டியில் அதிகபட்சமாக 239 ரன்களும், ஒரு நாள் போட்டியில் அதிகபட்சமாக 183 ரன்களும் குவித்துள்ளார்.
சௌரவ் கங்குலி வாழ்க்கை வரலாறு
113 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய கங்குலி 37 போட்டியில் வெற்றியும், 35 போட்டியில் தோல்வியும் கண்டுள்ளார். இதில், 41 போட்டி டிராவில் முடிந்துள்ளது. இதே போன்று 311 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள கங்குலி 149 போட்டிகளில் வெற்றியும், 145 போட்டிகளில் தோல்வியும் கண்டுள்ளார்.
சௌரவ் கங்குலி வாழ்க்கை வரலாறு
16 போட்டிகளுக்கு முடிவு இல்லை. ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது. 16 முறை டெஸ்ட் போட்டிகளில் சதமும், 35 அரைசதமும் அடித்துள்ளார். ஒரு நாள் போட்டியில் 22 சதங்கள் மற்றும் 72 அரை சதங்கள் அடித்துள்ளார்.
சௌரவ் கங்குலி வாழ்க்கை வரலாறு
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் கூல் கேப்டன் என்று அழைக்கப்படும் எம் எஸ் தோனி, இந்திய பெண்கள் அணியின் கேப்டனாக இருந்த மிதாலி ராஜ் ஆகியோரது வாழ்க்கை வரலாற்று படங்களைத் தொடர்ந்து, சௌரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகிறது.
சௌரவ் கங்குலி வாழ்க்கை வரலாறு
இந்தப் படத்திற்கான பணிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே முடிந்துவிட்டது. தனது வாழ்க்கை வரலாறு படத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் கபூர் தான் நடிக்க வேண்டும் என்று கங்குலி விருப்பம் தெரிவித்திருந்தார்.
சௌரவ் கங்குலி வாழ்க்கை வரலாறு
ரன்வீர் கபூரும் ஓகே சொன்னதைத் தொடர்ந்து, படத்திற்கான படப்பிடிப்பும் விரைவில் தொடங்க இருக்கிறது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானம் உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. கிட்டத்தட்ட ரூ.250 கோடி பட்ஜெட்டில் உருவாக இருக்கும் கங்குலியின் வாழ்க்கை வரலாறு படத்தில் எம் எஸ் தோனி சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.