PAK vs BAN: பாகிஸ்தானை சொந்த மண்ணில் சம்பவம் செய்த வங்கதேசம்; 10 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றி
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேசம் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சரித்திர வெற்றியை பதிவு செய்துள்ளது.
Pak Vs Ban
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான முதல் போட்டி கடந்த 21ம் தேதி ராவல்பிண்டியில் தொடங்கி நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில் சாத் ஷகீல் 141 ரன்களும், விக்கர் கீப்பர் முகமது ரிஸ்வான் 171* ரன்கள் குவித்த நிலையில் 448 ரன்ளுக்கு பாகிஸ்தான் அணி டிக்ளேர் செய்தது. ரிஸ்வான் இரட்டை சதம் அடிப்பதற்கு 29 ரன்களே உள்ள நிலையில் பாகிஸ்தான் கேப்டன் டிக்ளேர் செய்தது விமர்சனத்திற்கு உள்ளானது.
Ban Vs Pak
எங்களை குறைத்து மதிப்பிட்டுவிட்டீர்கள் என்பதை செயலால் நிரூபித்த வங்கதேச அணி பேட்ஸ்மேன்கள் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை அவர்களின் சொந்த மண்ணிலேயே பதம் பார்த்தனர். கேப்டன் ஷத்மன் இஸ்லாம் 93 ரன்கள், மொனிமுல் 50 ரன்கள், முஷ்பிகுர் ரஹீன் 191 ரன்கள், லிட்டன் தாஸ் 56 ரன்கள், மெஹிதி ஹாசன் 77 ரன்கள் என மிரட்டிய வங்கதேச பேட்ஸ்மேன்கள் 565 ரன்களை குவித்தனர். இது பாகிஸ்தான் அணியை காட்டிலும் 117 ரன்கள் முன்னிலை என்பது குறிப்பிடத்தக்கது.
1st Test
117 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியாக 146 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வங்கதேசம் சார்பில் மெஹிதி ஹாசன் 4 விக்கெட்டுகளும், ஷாகிப் அல் ஹசன் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
30 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் கலம் இறங்கிய வங்கதேசம் அணி 6.3 விக்கெட்டுகளில் விக்கெட் இழப்பின்றி இலக்கை கடந்து வெற்றியை பதிவு செய்தது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக வங்கதேசம் பதிவு செய்யும் முதல் டெஸ்ட் வெற்றி இதுவாகும். அதிலும் பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணிலேயே 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதல் அணி என்ற இமாலய சாதனையையும் வங்கதேசம் படைத்துள்ளது.