- Home
- Sports
- Sports Cricket
- IND vs AUS: ஸ்பின்னர்களை வைத்து ஆஸீயை காலி செய்த ரோகித் சர்மா – 264 ரன்களுக்கு சுருண்ட ஆஸி!
IND vs AUS: ஸ்பின்னர்களை வைத்து ஆஸீயை காலி செய்த ரோகித் சர்மா – 264 ரன்களுக்கு சுருண்ட ஆஸி!
IND vs AUS Semi Final ICC Champions Trophy 2025 : இந்திய அணிக்கு எதிரான முதலாவது அரையிறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்கள் எடுத்தது.

IND vs AUS Semi Final ICC Champions Trophy 2025
IND vs AUS Semi Final ICC Champions Trophy 2025 : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி (ICC Champions Trophy 2025) அரையிறுதியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா நேருக்கு நேர் மோதுகின்றன. இதில், இன்றைய முதலாவது அரையிறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்கள் குவித்தது (India vs Australia Semi Final 2025).
IND vs AUS Semi Final ICC Champions Trophy 2025
ஆரம்பத்திலேயே ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரரான கூப்பர் கான்லி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஆனால், மற்றொரு தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் தன் பங்கிற்கு அதிரடியாக விளையாடி கொஞ்சம் நேரம் இந்திய பவுலர்களுக்கு ஆட்டம் காட்டினார். அடுத்தடுத்து 2 பவுண்டரி, சிக்சர், 2 பவுண்டரி என்று விளாசினார். கடைசியில் வருண் சக்கரவர்த்தி ஓவரில் 5 பவுண்டரி ஒரு சிக்ஸர் உள்பட 39 ரன்கள் எடுத்து சுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
IND vs AUS Semi Final ICC Champions Trophy 2025
அதன் பிறகு தான் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மார்னஷ் லபுஷேன் இருவரும் இணைந்து நிதானமாக விளையாடி ரன்கள் குவித்தனர். 3ஆவது விக்கெட்டிற்கு இந்த ஜோடி 56 ரன்கள் குவித்தது. லபுஷேன் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த ஜோஸ் இங்கிலிஸூம் பெரிதாக விளையாடவில்லை. 11 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து ஸ்மித் உடன் அலெக்ஸ் கேரி ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடவே ஒரு கட்டத்தில் ஸ்மித் அரைசதம் அடித்தார். அவர், 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
IND vs AUS Semi Final ICC Champions Trophy 2025
கிளென் மேக்ஸ்வெல் 7 ரன்களிலும், த்வார்ஷூய்ஸ் 19 ரன்னிலும், ஆடம் ஜம்பா 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசியில் அலெக்ஸ் கேரி அரைசதம் அடித்த நிலையில் 61 ரன்கள் எடுத்திருந்த போது ரன் அவுட்டானார். இதைத் தொடர்ந்து நாதன் எல்லீஸ் 10 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். இறுதியாக ஆஸ்திரேலியா 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்கள் எடுத்தது.
IND vs AUS Semi Final ICC Champions Trophy 2025
இன்றைய போட்டியின் சிறப்பம்சம்:
முகமது ஷமி 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். 10 ஓவர்கள் வீசி 48 ரன்கள் கொடுத்தார்.
வருண் சக்கரவர்த்தி சிறப்பாக பந்து வீசி 10 ஓவர்களில் 49 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்தார்.
ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகள் எடுத்துக் கொடுத்தார். 8 ஓவர்கள் பந்து வீசி ஒரு மெய்டன் உள்பட 40 ரன்கள் கொடுத்தார்.
அக்ஷர் படேல் ஒரு விக்கெட் எடுத்தார். 8 ஓவர்கள் பந்து வீசிய அவர் ஒரு மெய்டன் உள்பட 43 ரன்கள் கொடுத்தார்.
ஹர்திக் பாண்டியா 5.3 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் எடுத்தார். 40 ரன்கள் கொடுத்தார்.
IND vs AUS Semi Final ICC Champions Trophy 2025
திருப்பு முனையை ஏற்படுத்திய பந்து வீச்சாளர்:
வருண் சக்கரவர்த்தி – டிராவிஸ் ஹெட் விக்கெட்டை எடுத்தார்.
ரவீந்திர ஜடேஜா – மார்னஷ் லபுஷேன் விக்கெட்டை எடுத்தார்.
முகமது ஷமி – ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை கைப்பற்றினார்.
அக்ஷர் படேல் – கிளென் மேக்ஸ்வெல் விக்கெட்டை கைப்பற்றினார்.
அலெக்ஸ் கேரியின் ரன் அவுட்:
அலெக்ஸ் கேரியின் ரன் அவுட் தான் இன்றைய போட்டியில் முக்கியமாக திருப்பு முனையை ஏற்படுத்தியது. ஷ்ரேயாஸ் ஐயர் தான் அவரை ரன் அவுட் செய்தார்.
IND vs AUS Semi Final ICC Champions Trophy 2025
சிறப்பான கேட்ச்:
டிராவிஸ் ஹெட் கொடுத்த கேட்ச் வாய்ப்பை சுப்மன் கில் அபாரமாக பிடித்தார்.
இந்தியா பேட்டிங்:
கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு சுப்மன் கில் மற்றும் ரோகித் சர்மா இருவரும் தொடக்க வீர்ரகளாக களமிறங்கினர். இதில், சுப்மன் கில் வழக்கமாக CEAT பேட் கொண்டு விளையாடும் சுப்மன் கில் இன்றைய போட்டியில்MRF பேட் கொண்டு விளையாடினார். அவர் 8 ரன்களில் ஆட்டமிழக்க, ரோகித் சர்மா 28 ரன்களில் நடையை கட்டினார். தற்போது வரையில் இந்திய அணி 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 55 ரன்கள் எடுத்துள்ளது.