- Home
- Sports
- Sports Cricket
- ஆசிய கோப்பை! பைனல்களில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவுக்கு இப்படி ஒரு மோசமான ரிக்கார்டா! அச்சச்சோ!
ஆசிய கோப்பை! பைனல்களில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவுக்கு இப்படி ஒரு மோசமான ரிக்கார்டா! அச்சச்சோ!
Asia Cup 2025: India vs Pakistan Final: ஆசிய கோப்பை கிரிக்கெட் பைனலில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதும் நிலையில், இறுதிப்போட்டிகளில் இந்த இரு அணிகளின் செயல்பாடுகள் குறித்து பார்ப்போம்.

ஆசிய கோப்பை: இந்தியா-பாகிஸ்தான் பைனல்
ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்றைய சம்பிரதாய போட்டியில் இலங்கையும், இந்தியாவும் மோதும் நிலையில், 28ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் விளையாடுகின்றன. ஆசிய கோப்பையில் இந்த இரு அணிகளும் மோதுவது இதுவே முதன் முறையாகும். இதனால் இந்த போட்டிக்கு உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பாகிஸ்தானை பந்தாடிய இந்திய அணி
நடப்பு ஆசிய கோப்பை தொடரில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஏற்கெனவே 2 முறை மோதியுள்ளன. இந்த இரண்டிலும் பாகிஸ்தானை இந்தியா பந்தாடி அபார வெற்றி பெற்றுள்ளது. ஆகையால் பைனலிலும் இந்திய அணியின் ஆதிக்கமே முழுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் பாகிஸ்தான் அணி எந்த நேரத்தில் எப்படி விளையாடும் என்பதை கணிக்க முடியாது.
பைனல்களில் பாகிஸ்தான் கை ஓங்கியுள்ளது
ஒட்டுமொத்தமாக டி20, ஓடிஐ, டெஸ்ட் என அனைத்து வடிவ பார்மட்டிலும் இரு அணிகளூம் மோதிய போட்டிகளில் இந்தியாவே அதிக வெற்றிகளை பெற்றுள்ளது. ஆனால் பைனல் என்று வரும்போது பாகிஸ்தானின் கை சற்று ஓங்கியுள்ளது.
5க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்ற ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் இறுதிப் போட்டிகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இதுவரை ஐந்து முறை மோதியுள்ளன. இதில், இந்தியா 2 முறையும், பாகிஸ்தான் 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
இந்தியா-பாகிஸ்தான் பைனல் டேட்டா
அதாவது 1986 மற்றும் 1994ம் ஆண்டுகளில் நடந்த ஆஸ்ட்ரல்-ஆசியா கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தியுள்ளது. இதேபோல் 2017ம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி பைனலிலும் பாகிஸ்தான் இந்தியாவை தோற்கடித்து இருந்தது.
இந்தியாவை பொறுத்தவரை 1985ல் நடந்த பென்சன் & ஹெட்ஜஸ் உலக சாம்பியன்ஷிப் ஆஃப் கிரிக்கெட்டிலும், 2007ம் ஆண்டு நடந்த முதல் டி20 உலகக் கோப்பையிலும் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியம் பட்டம் வென்றிருந்தது.
பாகிஸ்தான் கேப்டன் சவால்
ரிக்கார்டுகள் இப்படி இருந்தாலும், பாகிஸ்தானை விட இந்திய அணி பேட்டிங், பவுலிங்கில் வலிமையாக உள்ளதால் நமக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. அதே வேளையில் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆஹா, ''எந்த அணியையும் வீழ்த்தும் அளவுக்கு நாங்கள் வலிமையாக இருக்கிறோம். . எங்களின் செயல்பாடு என்னவாக இருக்க வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும்'' என்றார்.