- Home
- Sports
- Sports Cricket
- ஆசிய கோப்பை: பாகிஸ்தான் கொடுத்த புகார்.. சூர்யகுமார் மீது ஐசிசி நடவடிக்கை? என்ன காரணம்?
ஆசிய கோப்பை: பாகிஸ்தான் கொடுத்த புகார்.. சூர்யகுமார் மீது ஐசிசி நடவடிக்கை? என்ன காரணம்?
Asia Cup 2025: பாகிஸ்தான் கொடுத்த புகாரின் பேரில் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் மீது ஐசிசி நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு என்ன காரணம்? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

பஹல்காம் தாக்குதல் குறித்து பேசிய சூர்யகுமார் யாதவ்
ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டி வெற்றிக்குப் பிறகு நடந்த பரிசளிப்பு விழாவில் பஹல்காம் குறித்து பேசியதற்காக இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் மீது ஐசிசி நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு, இந்த வெற்றியை ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்ற வீரர்களுக்கும், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் சமர்ப்பிப்பதாக சூர்யகுமார் யாதவ் கூறியிருந்தார்.
சூர்யகுமார் மீது ஐசிசி நடவடிக்கை எடுக்க வாய்ப்பு
இதற்கு எதிராக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் புகார் அளித்திருந்தது. பாகிஸ்தானின் புகாரின் பேரில் அதிகாரப்பூர்வ விசாரணை இன்று முடிவடைந்தது. சூர்யகுமார் யாதவுக்கு எச்சரிக்கை அல்லது போட்டி கட்டணத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரிச்சி ரிச்சர்ட்சன் தலைமையிலான ஒழுங்கு நடவடிக்கைக் குழு கூட்டத்தில், சூர்யகுமார் யாதவுடன் பிசிசிஐ சிஓஓ ஹேமங் அமின், கிரிக்கெட் செயல்பாட்டு மேலாளர் சம்மர் மல்லாபுராகர் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்தியாவின் புகாரும் பரிசீலனை
அதே சமயம், இந்தியா-பாகிஸ்தான் சூப்பர் ஃபோர் மோதலின் போது பாகிஸ்தான் வீரர்கள் ஹாரிஸ் ரவுஃப் மற்றும் சாஹிப்சாதா ஃபர்ஹான் ஆகியோர் செய்த சர்ச்சைக்குரிய சைகைகளுக்கு எதிராக பிசிசிஐ அளித்த புகாரையும் ஐசிசி பரிசீலித்து வருகிறது.
இந்தியாவுக்கு எதிரான போட்டியின் போது, 'ஆபரேஷன் சிந்தூர்' ராணுவ நடவடிக்கையின் போது இந்தியாவின் ஆறு போர் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாகக் கூறும் விதமாக ஹாரிஸ் ரவுஃப் 6-0 என விரல்களால் சைகை செய்தார்.
ஹாரிஸ் ரவுஃப், சாஹிப்சாதா ஃபர்ஹான் மீது நடவடிக்கை?
அரைசதம் அடித்த பிறகு, பாக் ஓப்பனர் சாஹிப்சாதா ஃபர்ஹான், பேட்டால் சுடுவது போல கொண்டாடினார். இதற்கு எதிராகவே இந்தியா புகார் அளித்திருந்தது. இந்த புகாரின் பேரில் ஹாரிஸ் ரவுஃப் மற்றும் சாஹிப்சாதா ஃபர்ஹான் மீது ஐசிசி நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.