- Home
- Sports
- Sports Cricket
- Asia Cup 2025: கோப்பையுடன் தப்பி சென்ற பாகிஸ்தான் அமைச்சர்! பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு!
Asia Cup 2025: கோப்பையுடன் தப்பி சென்ற பாகிஸ்தான் அமைச்சர்! பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு!
Asia Cup 2025: இந்தியா கோப்பையை மறுத்த நிலையில், ஆசிய கோப்பையுடன் தப்பி சென்ற பாகிஸ்தான் அமைச்சர் மீது ஐசிசியிடம் புகார் கொடுக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

Asia Cup 2025: India vs Pakistan Final
ஆசிய கோப்பை பைனலில் வெற்றி பெற்ற இந்திய அணி ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) தலைவரும், பாகிஸ்தான் உள்துறை அமைச்சருமான மொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையை வாங்க மறுத்த போதிலும், அவர் மேடையை விட்டு இறங்காததால், நக்விக்கு எதிராக கடுமையான எதிர்ப்பை பதிவு செய்யப் போவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
பிடிவாதம் பிடித்த மொஹ்சின் நக்வி
கோப்பையை தானே வழங்க வேண்டும் என நக்வி பிடிவாதமாக இருந்தது எதிர்பாராதது மற்றும் மிகவும் சிறுபிள்ளைத்தனமானது என்றும், நவம்பர் முதல் வாரத்தில் துபாயில் நடைபெறும் ஐசிசி கூட்டத்தில் இதுகுறித்து வலுவான எதிர்ப்பை பதிவு செய்வோம் என்றும் பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா கூறினார்.
சில ஊடக அறிக்கைகளின்படி, இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுக்கும் நக்வியிடமிருந்து அணி கோப்பையை வாங்காது என்று பிசிசிஐ தங்கள் ஏசிசி தொடர்பு நபரிடம் முன்பே தெரிவித்திருந்தது.
கோப்பை இல்லாமல் கொண்டாடிய இந்திய வீரர்கள்
மொஹ்சின் நக்வி மேடையில் பிடிவாதமாக நின்றதால், வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை வழங்கப்படவில்லை. சாம்பியன் பட்டம் வென்ற அணி கோப்பையை பெறாமல் இருப்பது கிரிக்கெட் மைதானத்தில் இதுவே முதல் முறையாக இருக்கலாம். பரபரப்பான இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா, கோப்பை இல்லாமலேயே கொண்டாடியது.
பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) தலைவராகவும் உள்ள ஏசிசி தலைவர் நக்வியிடமிருந்து வெற்றியாளருக்கான கோப்பையை இந்திய வீரர்கள் வாங்க மறுத்ததை பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா உறுதிப்படுத்தினார். பாகிஸ்தானின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஏசிசி தலைவரிடமிருந்து கோப்பையை வாங்க வேண்டாம் என்று நாங்கள் முடிவு செய்தோம் என்று சைகியா செய்தி நிறுவனமான ஏஎன்ஐயிடம் கூறினார். .
மொஹ்சின் நக்வியிடம் கோப்பை வாங்க மறுத்தது ஏன்?
நாட்டிற்கு எதிராக போர் தொடுக்கும் ஒருவரிடமிருந்து இந்தியா கோப்பையை ஏற்க முடியாது என்று சைகியா தெளிவுபடுத்தினார். கடந்த போட்டியின் போது மைதானத்தில் இருந்த சில பாகிஸ்தான் வீரர்களின் ஆத்திரமூட்டும் சைகைகள் குறித்த சர்ச்சைகளுக்கு மத்தியில், கிறிஸ்டியானோ ரொனால்டோவின் விமான விபத்து சைகை கொண்டாட்டங்களின் வீடியோக்களை நக்வி பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.