- Home
- Sports
- Sports Cricket
- ஆசிய கோப்பையுடன் தப்பி ஓடிய பாக். அமைச்சர்! கலாய்த்து தள்ளிய சூர்யகுமார் யாதவ், ரசிகர்கள்..!
ஆசிய கோப்பையுடன் தப்பி ஓடிய பாக். அமைச்சர்! கலாய்த்து தள்ளிய சூர்யகுமார் யாதவ், ரசிகர்கள்..!
ஆசிய கோப்பையை பாகிஸ்தான் அமைச்சர் மொஹ்சின் நக்வியிடம் இருந்து இந்திய அணி வாங்க மறுத்த நிலையில், அவர் கோப்பையுடன் தப்பி சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை சூர்யகுமார் யாதவ் விமர்சித்துள்ளார்.

ஆசிய கோப்பை 2025
ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை பந்தாடி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 19.1 ஓவரில் வெறும் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்பு விளையாடிய இந்திய அணி இந்திய அணி கடைசி ஓவரில் அபார வெற்றி பெற்றது. அதிரடி அரை சதம் விளாசிய திலக் வர்மா 53 பந்தில் 69 ரன்கள் விளாசினார்.
ஆசிய கோப்பையுடன் தப்பி ஓடிய பாகிஸ்தான் அமைச்சர்
இந்த போட்டிக்கு பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரும், அந்த நாட்டின் அமைச்சருமான மொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையை வாங்க இந்திய அணி மறுத்தது. இதனைத் தொடர்ந்து இந்தியாவுக்கு கோப்பையை வழங்க மறுத்த மொஹ்சின் நக்வி, ஆசிய கோப்பையுடன் பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ்வும், ரசிகர்களும் அவரை கிண்டல் செய்து வருகின்றனர்.
பாகிஸ்தான் பத்திரிகையாளர் கேட்ட கேள்வி
ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்தி பட்டம் வென்ற பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில், பாகிஸ்தான் பத்திரிகையாளரின் வாயை அடைக்கும் வகையில் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பதிலளித்தார். போட்டிக்குப் பிறகு பாகிஸ்தான் வீரர்களுக்குக் கை கொடுக்க மறுத்தது மற்றும் கோப்பையை வாங்க மறுத்தது குறித்துக் கேட்ட பாகிஸ்தான் பத்திரிகையாளருக்கு சூர்யகுமார் பதிலடி கொடுத்தார்.
கிரிக்கெட்டையும் அரசியலையும் கலந்த முதல் கேப்டன்
நீங்கள் சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றீர்கள், ஆனால் என் கேள்வி இதுதான், தொடரில் பாகிஸ்தான் அணியுடனான உங்கள் நடத்தை குறித்து, கை கொடுக்கத் தயாராகவில்லை, கோப்பையுடன் புகைப்படம் எடுக்கத் தயாராகவில்லை, செய்தியாளர் சந்திப்பில் அரசியலைக் கலந்தீர்கள், கிரிக்கெட்டையும் அரசியலையும் கலந்த முதல் கேப்டன் நீங்கள் தான்' என்று அந்த பாகிஸ்தான் பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினார்.
நல்லா கோபம் வருதா?
இந்த கேள்வி புரியாதது போல் நடித்த சூர்யகுமார் யாதவ், 'உங்களுக்கு நல்ல கோபம் வருகிறது இல்லையா, நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை' என்று பதிலளித்தார். ஆசியக் கோப்பையில் கோப்பை வழங்கப்படாதது குறித்தும் சூர்யகுமார் செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பினார்.
கோப்பையை தர மறுத்தது தவறு
தனது கிரிக்கெட் வாழ்க்கையில் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு கோப்பை வழங்கப்படாத சம்பவம் இது என்று சூர்யகுமார் யாதவ் கூறினார். ''என் கிரிக்கெட் வாழ்க்கையில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததில்லை.
அதுவும் கஷ்டப்பட்டு கோப்பை. தொடர்ச்சியாக ஏழு போட்டிகளில் வென்று சாம்பியனான அணிக்கு கோப்பை மறுக்கப்பட்டது ஏற்றுக்கொள்ள முடியாதது. நாங்கள் கோப்பைக்கு தகுதியானவர்கள். இதற்கு மேல் எதுவும் சொல்ல விரும்பவில்லை'' என்று சூர்யகுமார் யாதவ் பதிலளித்தார்.