MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • கோலி, தோனி இல்லை… இந்தியாவின் பணக்கார கிரிக்கெட் வீரர் இவர்தான்!

கோலி, தோனி இல்லை… இந்தியாவின் பணக்கார கிரிக்கெட் வீரர் இவர்தான்!

பிரபல வீரர் ஒருவர் விராட் கோலி மற்றும் எம்.எஸ். தோனியைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியாவின் மிகப்பணக்கார கிரிக்கெட் வீரராக உருவெடுத்துள்ளார். அவர் யார் என்பதை பார்க்கலாம்.

1 Min read
Author : Raghupati R
Published : Feb 06 2026, 03:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
இந்திய பணக்கார கிரிக்கெட் வீரர்
Image Credit : our own

இந்திய பணக்கார கிரிக்கெட் வீரர்

2026 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் உலகில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. விராட் கோலி, எம்.எஸ். தோனி, ரோஹித் சர்மா போன்ற நவீன நட்சத்திரங்களை முந்தி, இந்தியாவின் மிகப்பணக்கார கிரிக்கெட் வீரராக முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா உருவெடுத்துள்ளார். அவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ.1,450 கோடியாக மதிப்பிடப்படுகிறது.

25
கோலி சொத்து மதிப்பு
Image Credit : Getty

கோலி சொத்து மதிப்பு

பொதுவாக, விளம்பரங்கள், ஐபிஎல் ஒப்பந்தங்கள் மற்றும் முதலீடுகள் மூலம் கோடி கோடியாக சம்பாதித்தவர்கள் என்றால் விராட் கோலி, எம்எஸ் தோனி, ரோஹித் ஷர்மா ஆகியோரின் நினைவிற்கு வரும். கோலியின் சொத்து மதிப்பு ரூ.1,050 கோடி, தோனியின் ரூ.1,000 கோடி, ரோஹித் சர்மாவின் ரூ.214 கோடி என மதிப்பிடப்பட்டாலும், இவர்கள் யாரும் ஜடேஜாவின் அளவிலான செல்வத்தை எட்டவில்லை.

Related Articles

Related image1
ஜனவரி 2026-ல் அதிகம் விற்பனையான பைக்குகள் லிஸ்ட்; யார் முதலிடம்?
Related image2
தவெகவில் இருந்து விலகும் விஜயின் தளபதி.. அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்.. கட்சி என்ன ஆகப்போகுதோ.?
35
அஜய் ஜடேஜா சொத்து மதிப்பு
Image Credit : Google

அஜய் ஜடேஜா சொத்து மதிப்பு

அஜய் ஜடேஜாவின் இந்த திடீர் உயர்வுக்கு காரணம் அவரது அரச குடும்ப பாரம்பரியம். ஜாம்நகர் அரச குடும்பத்தின் வாரிசாக அறிவிக்கப்பட்டதன் மூலம், அவரது சொத்து மதிப்பு ரூ.250 கோடியில் இருந்து ரூ.1,450 கோடியாக உயர்ந்துள்ளது. இது அவரது கிரிக்கெட் வருமானத்தை விட, அரச மரபுச் சொத்துகளால் ஏற்பட்ட பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.

45
அரச குடும்ப கிரிக்கெட் வீரர்
Image Credit : Google

அரச குடும்ப கிரிக்கெட் வீரர்

ஜடேஜா குடும்பம் கிரிக்கெட் வரலாற்றில் தனி இடம் பெற்றது. அவரது உறவினர்களான கே.எஸ். ரஞ்சித்சிஞ்சி மற்றும் கே.எஸ். துலீப்சிஞ்சியின் பெயர்களில் ரஞ்சி டிராபி மற்றும் துலீப் டிராபி தொடர்கள் நடத்தப்படுகின்றன. இது அந்த குடும்பத்தின் பாரம்பரியத்தை வெளிப்படுத்துகிறது.

55
அஜய் ஜடேஜாவின் வாழ்க்கை
Image Credit : Google

அஜய் ஜடேஜாவின் வாழ்க்கை

2000-ம் ஆண்டு மேட்ச் ஃபிக்சிங் சர்ச்சையால் ஜடேஜாவின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவடைந்தாலும், அவர் கமெண்ட்ரி, கோச்சிங், ரியாலிட்டி ஷோக்கள் மூலம் பொதுமக்கள் முன்னிலையில் தொடர்ந்து வருகிறார். இன்று, நவீன நட்சத்திரங்களை முந்தி, இந்தியாவின் ஒரு முன்னாள் வீரர் மிகப்பணக்கார கிரிக்கெட் வீரராக இருப்பது, கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஆச்சரியமாக உள்ளது.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விளையாட்டு

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாளை தொடங்கும் டி20 திருவிழா.. உலகக்கோப்பை தொடரில் தொடவே முடியாத 5 மெகா சாதனைகள்
Recommended image2
இந்திய அணியின் கொழும்பு பயணம் சும்மா இல்லை, பாகிஸ்தானுக்கு குடைச்சல் கொடுக்கும் BCCI
Recommended image3
WPL 2026: RCB VS DC: டெல்லியை பந்தாடி கோப்பையை தட்டித் தூக்கிய ஆர்சிபி! ஸ்மிருதி மந்தனா ருத்ரதாண்டவம்!
Related Stories
Recommended image1
ஜனவரி 2026-ல் அதிகம் விற்பனையான பைக்குகள் லிஸ்ட்; யார் முதலிடம்?
Recommended image2
தவெகவில் இருந்து விலகும் விஜயின் தளபதி.. அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்.. கட்சி என்ன ஆகப்போகுதோ.?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved