MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தவெகவில் இருந்து விலகும் விஜயின் தளபதி.. அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்.. கட்சி என்ன ஆகப்போகுதோ.?

தவெகவில் இருந்து விலகும் விஜயின் தளபதி.. அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்.. கட்சி என்ன ஆகப்போகுதோ.?

தமிழக வெற்றிக் கழகம் சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில், அக்கட்சியில் உள்நிலை மோதல் வெடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் தவெகவில் இருந்து மிக முக்கிய புள்ளி விலக உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

2 Min read
Author : Raghupati R
Published : Feb 05 2026, 10:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
தவெகவில் இருந்து விலகும் முக்கிய புள்ளி
Image Credit : our own

தவெகவில் இருந்து விலகும் முக்கிய புள்ளி

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வரும் சூழலில், முதல்முறையாக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மீதும் அதிக கவனம் திரும்பியுள்ளது. புதிய கட்சியாக இருந்தாலும், தவெக அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து பேசுபொருளாக இருந்து வருகிறது.

27
அரசியலுக்குள் குதித்த விஜய்
Image Credit : Instagram

அரசியலுக்குள் குதித்த விஜய்

பல ஆண்டுகளாக “விஜய் அரசியலுக்கு வருவாரா?” என்ற கேள்வி எழுந்த நிலையில், 2024 பிப்ரவரி மாதம் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. சினிமாவிலிருந்து விலகுவதாக அறிவித்து, தவெகவை தொடங்கிய விஜய், முழுமையாக அரசியல் பயணத்தை தொடங்கினார். அதன்பிறகு, கட்சி கட்டமைப்பு, நிர்வாக நியமனம், தேர்தல் வியூகங்கள் என பல்வேறு பணிகள் வேகமெடுத்தன.

Related Articles

Related image1
திமுக, அதிமுக கலக்கம்.. நடுநிலை வாக்காளர்களை இழுக்கும் விஜய்.. இளைஞர்கள் ஓட்டும் திரும்புது
Related image2
விஜய் எல்லாம் அதிமுகவை விமர்சிக்கலாமா..? தவெக-வே லாட்டரி பணத்தில்தான் நடத்தப்படுது.. ஜெயகுமார் அதிரடி அட்டாக்..!
37
தமிழக வெற்றிக் கழகம்
Image Credit : Asianet News

தமிழக வெற்றிக் கழகம்

தற்போது, ​​விஜய் முதல் முறையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக கூறப்படும் நிலையில், மக்கள் சந்திப்பு மற்றும் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்த திட்டமிட்டு வருகிறார். இதன் மூலம், நேரடியாக மக்களின் மனநிலையை அறிந்து, தேர்தல் வியூகங்களை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதே அவரது நோக்கமாக இருக்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

47
தவெக நிர்வாக மாற்றம்
Image Credit : our own

தவெக நிர்வாக மாற்றம்

இந்நிலையில், தவெகவில் இருந்து முக்கிய நிர்வாகி ஒருவர் விலகக்கூடும் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. விஜய்யின் முக்கிய அரசியல் வியூக வகுப்பாளராக கருதப்பட்ட ஜான் ஆரோக்கியசாமி, கட்சிக்குள் தனது பங்கு மற்றும் முக்கியத்துவம் குறைந்து விட்டதாக உணர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

57
ஆதவ் அர்ஜுனாவின் அரசியல்
Image Credit : Twitter

ஆதவ் அர்ஜுனாவின் அரசியல்

கட்சியின் தேர்தல் வியூகம், மாநாடு திட்டமிடல், பிராண்டிங் போன்ற பணிகளில் நீண்ட காலமாக ஈடுபட்டு வந்த ஜான் ஆரோக்கியசாமி, ஆதவ் அர்ஜுனா தவெகவில் இணைந்த பிறகு தன்னை புறக்கணிப்பதாக நினைப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், கட்சிக்குள் உள்நிலை அதிருப்தி மற்றும் கோஷ்டி மோதல்கள் இருப்பதாகவும் பேசப்படுகிறது.

67
அப்செட்டில் ஜான் ஆரோக்கியசாமி
Image Credit : Google

அப்செட்டில் ஜான் ஆரோக்கியசாமி

மேலும், ஆதவ் அர்ஜுனா ஊடகங்களில் தன்னிச்சையாக பேசுவது விஜய்க்கு ஏற்றதாக இருப்பதாக கருதப்படுவதால், ஜான் ஆரோக்கியசாமி மனவருத்தத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதுபோல என்.ஆனந்த் விஜயின் வலதுகரமாக இருப்பதாலும் தொடர்ந்து அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளார் ஜான் ஆரோக்கியசாமி என்றும் செய்திகள் கசிந்துள்ளது.

77
ஜான் ஆரோக்கியசாமி விலகல்
Image Credit : Google

ஜான் ஆரோக்கியசாமி விலகல்

இதன் தொடர்ச்சியாக, அவரது முழு டீமும் தேர்தல் வியூக பணிகளில் இருந்து விலகி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில், ஜான் ஆரோக்கியசாமி தவெகவில் தொடர்வாரா அல்லது விலகுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் தனது முடிவை விஜய்க்கு தெரிவிக்கக்கூடும் என்றும், அதற்கு விஜய் எடுக்கும் முடிவு என்னவாக இருக்கும் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன வருகிறது. இந்த விவகாரம், தவெகவின் எதிர்கால அரசியல் பயணத்தில் முக்கிய திருப்பமாக அமையலாம் எனவும் கூறப்படுகிறது.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டிவி.கே. விஜய்
தேர்தல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
குரூப்-4 தேர்வர்கள்! நாள் குறித்த டிஎன்பிஎஸ்சி! வெளியானது முக்கிய அறிவிப்பு!
Recommended image2
தமிழன் பிச்சை எடுக்கமாட்டான்.. பெரியாரின் பேரனாக, அண்ணாவின் மகனாக..! நாடாளுமன்றத்தில் கர்ஜித்த கமல்
Recommended image3
அடுத்தடுத்து விடுமுறை.! அரசு ஊழியர்கள், மாணவர்கள் கொண்டாட்டம்! போக்குவரத்து துறை சொன்ன குட்நியூஸ்
Related Stories
Recommended image1
திமுக, அதிமுக கலக்கம்.. நடுநிலை வாக்காளர்களை இழுக்கும் விஜய்.. இளைஞர்கள் ஓட்டும் திரும்புது
Recommended image2
விஜய் எல்லாம் அதிமுகவை விமர்சிக்கலாமா..? தவெக-வே லாட்டரி பணத்தில்தான் நடத்தப்படுது.. ஜெயகுமார் அதிரடி அட்டாக்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved