ஜனவரி 2026-ல் அதிகம் விற்பனையான பைக்குகள் லிஸ்ட்; யார் முதலிடம்?
இந்திய இருசக்கர வாகன சந்தை ஜனவரி 2026-ல் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஹீரோ, ஹோண்டா, டிவிஎஸ், மற்றும் ராயல் என்ஃபீல்டு போன்ற முன்னணி நிறுவனங்கள் கடந்த ஆண்டை விட குறிப்பிடத்தக்க விற்பனை உயர்வை அடைந்துள்ளன.

ஜனவரி மாத பைக் விற்பனை
2026 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே இந்திய இருசக்கர சந்தை வலுவான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ஜனவரி மாத முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் குறிப்பிடத்தக்க விற்பனை வளர்ச்சியைக் கண்டுள்ளன. கிராமப்புறம் முதல் நகர்ப்புறம் வரை இருசக்கர வாகனங்களுக்கு தொடர்ந்த கேள்வி இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக உள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை
இந்த பட்டியலில் முதன்மையாக இடம்பிடித்தது ஹீரோ மோட்டோகார்ப். ஜனவரி 2026-ல் மட்டும் இந்த நிறுவனம் சுமார் 5.58 லட்சம் யூனிட்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடும்போது, இது சுமார் 26% வளர்ச்சியாகும். இதில் 5.20 லட்சத்துக்கும் மேற்பட்டவை உள்ளூர் சந்தை விற்பனையாகும். மோட்டார் சைக்கிள்கள் அதிக பங்கினை பெற்ற நிலையில், ஸ்கூட்டர் விற்பனையும் உயர்ந்துள்ளது.
அதிகம் விற்கும் பைக்குகள்
விற்பனை வளர்ச்சியில் வலுவான போட்டியை அளித்தது ஹோண்டா மோட்டார் சைக்கிள் இந்தியா. இந்த நிறுவனம் ஜனவரி மாதத்தில் 5.74 லட்சம் யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இதில் 5.20 லட்சம் யூனிட்கள் உள்ளூர் சந்தையிலும், 54,832 யூனிட்கள் ஏற்றுமதியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, ஹோண்டா 29% ஆண்டு வளர்ச்சியை அடைந்துள்ளது.
டிவிஎஸ் பைக்குகள் விற்பனை
மேலும் டிவிஎஸ் மோட்டார் கம்பெனியையும் நிலையான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ஜனவரி 2026-ல் 3.84 லட்சம் யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், இது கடந்த ஆண்டின் 2.94 லட்சம் யூனிட்களுடன் ஒப்பிடும்போது சுமார் 29% உயர்வாகும். ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் இரண்டிலும் டிவிஎஸ் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
ராயல் என்ஃபீல்டு விற்பனை
பிரீமியம் பைக் பிரிவில் ராயல் என்பீல்ட் தனது ஆதிக்கத்தை தொடர்ந்துள்ளது. ஜனவரி 2026-ல் 1.04 லட்சம் யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் 93,781 யூனிட்கள் உள்ளூர் சந்தையில் விற்பனையாகியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 16% அதிகமாகும். இதன் தொடர்ச்சியாக, மொத்த விற்பனை 10 லட்சம் யூனிட்களை கடந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேபோல் சுசுகி இந்தியா 1.22 லட்சம் யூனிட்கள் விற்பனை செய்து, 26% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

