- Home
- Sports
- Sports Cricket
- WI அணியை சம்பவம் செய்ய காத்திருக்கும் இந்தியா.. இந்திய அணியில் 3 தமிழர்களுக்கு இடம்
WI அணியை சம்பவம் செய்ய காத்திருக்கும் இந்தியா.. இந்திய அணியில் 3 தமிழர்களுக்கு இடம்
மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியில் 3 தமிழக வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்திய அணி அறிவிப்பு
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள மேற்கு இந்திய தீவுகள் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் வருகின்ற அக்டோபர் 2ம் தேதி தொடங்க உள்ளது. மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜெகதீசனுக்கு இந்திய அணியில் இடம்
இந்திய அணியின் பிரதான விக்கெட் கீப்பராக செயல்பட்டு வந்த ரிஷப் பண்ட் கடந்த இங்கிலாந்து தொடரின் போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து பாதியிலேயே விலகினார். பண்ட் காயத்தில் இருந்து மீளாத நிலையில் அவருக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. பண்ட்க்கு பதிலாக பிரதான விக்கெட் கீப்பராக துருவ் ஜூரல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு மாற்று வீரராக தமிழகத்தைச் சேர்ந்த ஜெகதீசன் சேர்க்கப்பட்டுள்ளார்.
வாஷிங்டன் சுந்தர், சாய் சுதர்சனுக்கும் வாய்ப்பு
அதே போன்று கடந்த இங்கிலாந்து தொடரில் இந்திய அணிக்கு சிறந்த பங்களிப்பை வழங்கிய தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் தற்போது மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளார். அவருக்கு 3வது இடத்தில் பேட்டிங் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழகத்தைச் சேர்ந்து சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தருக்கும் இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கில் தலைமையிலான இந்திய அணி
பிசிசிஐ வெளியிட்டுள்ள வீரர்கள் பட்டியலில், சுப்மன் கில், ஜெய்ஷ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், பும்ரா, அக்சர் படேல், நிதிஷ் குமார் ரெட்டி, ஜெகதீசன், மொஹமத் சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.