- Home
- Sports
- Sports Cricket
- வரலாற்றை திரும்பி பார்க்க வைத்த சச்சின்: ஒரு நாள் போட்டியில் 200 ரன்கள் அடித்த நாள் இன்று!
வரலாற்றை திரும்பி பார்க்க வைத்த சச்சின்: ஒரு நாள் போட்டியில் 200 ரன்கள் அடித்த நாள் இன்று!
கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் போட்டியில் 200 ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கர் படைத்த நாள் இன்று.

சச்சின் டெண்டுல்கர்
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். மாஸ்டர் பிளாஸ்டர், கிரிக்கெட் உலகில் கடவுள் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார். கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரையில் இந்திய அணியில் இடம் பெற்று பல சாதனைகளை புரிந்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர்
கடந்த 1989 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். இதே போன்று அதே ஆண்டில் டிசம்பர் 18 ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் அறிமுகமானார். ஒரு நாள் போட்டிகளில் 18 ஆயிரம் ரன்களும், டெஸ்ட் போட்டிகளில் 15 ஆயிரம் ரன்களும் சேர்த்தார்.
சச்சின்
முதல் முறையாக ஒரு நாள் தொடரில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை சச்சின் பெற்றார். தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக 200 ரன்கள் சேர்த்தார். இவரைத் தொடர்ந்து சேவாக், ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷான் என்று இந்திய வீர்ர்கள் மட்டுமே இரட்டை சதங்கள் அடித்துள்ளானர். ரோகித் சர்மா அதிகபட்சமாக 264 ரன்கள் சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சச்சின் டெண்டுல்கர்
கடந்த 2010 ஆம் ஆண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென் ஆப்பிரிக்கா 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதல் ஒரு நாள் போட்டியில் ஒரு ரன்னில் வெற்றி பெற்ற இந்திய அணி 2ஆவது ஒரு நாள் போட்டியில் 153 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது. இதில், டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 401 ரன்கள் குவித்தது.
சச்சின் 200
இந்தப் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய சச்சின் டெண்டுல்கர் 147 பந்துகளில் 3 சிக்சர்கள், 25 பவுண்டரிகள் உள்பட 200 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகமல் களத்தில் இருந்தார். அதுமட்டுமின்றி இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் சச்சின் டெண்டுல்கர் படைத்தார். அப்படி சச்சின் டெண்டுல்கர் சாதனை படைத்து இன்றுடன் 13 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
எம் எஸ் தோனி 224
இதே போன்று கூல் கேப்டன் என்று அழைக்கப்படும் எம் எஸ் தோனி டெஸ்ட் போட்டியில் 200 ரன்கள் குவித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்தார். கடந்த 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் எம் எஸ் தோனி 224 ரன்கள் குவித்து சாதனை படைத்தார்.