- Home
- Tamil Nadu News
- Puducherry
- ஓவர் பில்டப்போடு வந்து புஸ்ஸுனு முடிந்த புதுச்சேரி மாநாடு..! விஜய் பேசியது என்ன? தளபதியின் முழு ஸ்பீச் இதோ
ஓவர் பில்டப்போடு வந்து புஸ்ஸுனு முடிந்த புதுச்சேரி மாநாடு..! விஜய் பேசியது என்ன? தளபதியின் முழு ஸ்பீச் இதோ
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டம் இன்று புதுச்சேரியில் நடைபெற்ற நிலையில், அதில் தவெக கட்சியின் தலைவர் தளபதி விஜய் என்ன பேசினார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Vijay Speech in Puducherry
கரூர் சம்பவம் நடந்து 72 நாட்களுக்கு பின்னர் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசி உள்ளார். புதுச்சேரியில் உள்ள உப்பளம் பகுதியில் இந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஸ் உள்ள 5000 பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்தில் முதலில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசினார். அதன்பின்னர் தவெகவின் முக்கிய புள்ளியான ஆதவ் அர்ஜுனா பேசினார். அதற்கு அடுத்தபடியாக தவெக தலைவர் விஜய் உரையாற்றினார். என் நெஞ்சில் குடியிருக்கும் என சொல்லி தன்னுடைய உரையை தொடங்கினார் விஜய். அப்போது அரங்கம் அதிர விசில் சக்கம் பறந்தது.
விஜய் என்ன பேசினார்?
விஜய் பேசியதாவது : “தமிழ்நாடும் புதுச்சேரியும் வேற வேற இல்லை, ஒன்னுதான். தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, கேரளா மட்டுமல்ல உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும், அவர்கள் எல்லாருமே நம்மோட உயிர் தான், நம்முடைய வகையறா தான். இந்த புதுச்சேரிக்கு நிறைய சிறப்புகள் உண்டு. 1977ல் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்தார், ஆனால் அதற்கு முன்பே 1974-லேயே அவருடைய ஆட்சி புதுவையில் அமைந்தது. நமக்காக வந்தவர் எம்ஜிஆர் அவரை மிஸ் பண்ணிடாதீங்க என அலர்ட் பண்ணியதே புதுச்சேரி தான்.
என்னை 30 வருஷமா புதுச்சேரி மக்கள் தாங்கி புடிச்சிகிட்டு இருக்கீங்க. இந்த விஜய் தமிழ்நாட்டுக்கு மட்டுமில்ல, புதுச்சேரி மக்களுக்கும் குரல் கொடுப்பான். இந்த புதுச்சேரி அரசு தமிழ்நாட்டில் உள்ள திமுக மாதிரி கிடையாது. வேறு ஒரு கட்சியாக இருந்தாலும் பாதுகாப்பு கொடுத்துள்ள புதுச்சேரி சிஎம் சாருக்கு என்னுடைய மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதைப்பார்த்தாவது திமுக கத்துகிட்டா நல்லா இருக்கும்.
மாநில அந்தஸ்து வேண்டும்
கூட்டணியில் இருந்தாலும் புதுச்சேரி அரசை ஒன்றிய அரசு கண்டுகொள்வதில்லை. இங்கு மாநில அந்தஸ்து வேண்டும் என 16முறை தீர்மானம் போட்டும் வழங்கப்படவில்லை. இங்க ஒரு ஐடி கம்பெனி உருவாக்க வேண்டும் என்கிற எண்ணமே இல்லை. இங்க ஒரு அமைச்சரை ஊழல் குற்றச்சாட்டில் நீக்கப்பட்டு, அவருக்கு பதில் வேறு ஒருவரை நியமித்து 200 நாள் ஆச்சு. இன்னும் அவருக்கு ஒரு இலாகா கூட தரல. இந்த செயல் சிறுபான்மை மக்களை அவமானப்படுத்துவது என அப்பகுதி மக்களே சொல்கிறார்கள்.
கடன் சுமைக்கு ஆளாகிறது புதுச்சேரி
டூரிஸ்ட் இடமான புதுச்சேரியில் போதுமான பார்க்கிங் வசதி இல்லை. புதுச்சேரி மக்களுக்கு ஒன்னே ஒன்னு தான் சொல்லனும், இந்த திமுக-வை நம்பாதீங்க. நம்ப வச்சு ஏமாத்துறது தான் அவங்களோட வேலையே. தமிழ்நாட்டை ஒதுக்குவது போல் புதுவையையும் ஒதுக்க கூடாது. புதுச்சேரி மத்திய நிதிக்குழுவில் இடம்பெறவில்லை. அதனால் ஒவ்வொரு ஆண்டு மத்திய அரசு தோராயமாக நிதியை ஒதுக்குகிறது. இந்த நிதி பத்தாததால் கடன் சுமைக்கு ஆளாகிறது புதுச்சேரி.
ரேஷன் கடைகளே இல்லாத மாநிலம் புதுச்சேரி
இந்திய அளவில் ரேஷன் கடைகளே இல்லாத மாநிலம் புதுச்சேரி தான். மற்ற மாநிலங்களில் இருப்பது போல் இங்கேயும் ரேஷன் பொருட்கள் வழங்கும் முறை சீராக்கப்பட வேண்டும். இங்குள்ள மீனவர்களை அடிக்கடி கைது செய்யும் இலங்கை கடற்படை, அவர்களது படகுகளையும் அபகரிக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். இந்த விஜய் புதுச்சேரி மக்களுக்காக எப்பவும் துணை நிற்பான். வருகின்ற தேர்தலில் தவெக கொடி பட்டொலி வீசி பறக்கும். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்” என கூறி தன் உரையை முடித்துக் கொண்டார் விஜய்.

