- Home
- Astrology
- TVK vijay: தவெக இத்தனை தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும்.! விஜய்க்கு வாய்ப்பே இல்லை.! கணித்து சொன்ன பிரபல ஜோதிடர்.!
TVK vijay: தவெக இத்தனை தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும்.! விஜய்க்கு வாய்ப்பே இல்லை.! கணித்து சொன்ன பிரபல ஜோதிடர்.!
How many seats tvk will win in 2026 election: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தவெக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும் என்று பிரபல ஜோதிடர் ஒருவர் கணித்துக் கூறியுள்ளார். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பிரபல ஜோதிடர் பிரசாந்த் கினி
சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற பெயரில் கட்சியை தொடங்கியுள்ளார். கட்சி தொடங்கிய நாள் முதல் தினமும் பத்திரிக்கை செய்திகளிலும், தலைப்புச் செய்திகளிலும் தமிழக வெற்றிக் கழகம் இடம் பிடித்து விடுவது வழக்கமாகி இருக்கிறது. 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக வெற்றிக் கழகம் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இளைஞர்களின் ஆதரவு இருப்பதால் பல மூத்த அரசியல்வாதிகளும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிரபல ஜோதிடர் பிரசாந்த் கினி தமிழக வெற்றிக் கழகம் எத்தனை தொகுதிகளில் வெல்ல வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்து கணித்துள்ளார். பிரசாந்த் கினி பிரபலமான இந்திய ஜோதிடர் ஆவார். இவர் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் நிகழ்வுகள் குறித்தும், பிரபலங்கள் குறித்தும் சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகள் குறித்தும் தொடர்ந்து கணிப்புகளை வெளியிட்டு வெளியிட்டு வருகிறார். அவர் கூறிய பல நிகழ்வுகள் சரியாக நடந்துள்ளன.
சமந்தா பற்றிய கணிப்பு
2023 ஆம் ஆண்டு நடிகை சமந்தா பற்றி முக்கிய கணிப்பை வெளியிட்டார். அதில் அவர் 2025-க்குள் சமந்தாவுக்கு பெரிய உறவு மாற்றம் நடக்கும் என்றும், 2026 ஆம் ஆண்டு சமந்தா வெளிநாட்டில் புதிய அத்தியாயத்தை தொடங்குவார் என்றும் கூறியிருந்தார். அவர் கூறியது போலவே 2025 ஆம் ஆண்டில் சமந்தா இரண்டாவது திருமணத்தை முடித்துள்ளார். இதை மீண்டும் பகிர்ந்துள்ள பிரசாந்த் கினி, தன்னுடைய கணிப்பு சரியாக இருந்ததாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.
வங்காளதேசம் குறித்த கணிப்பு
வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா பற்றி 2023 தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் 2024 ஆகஸ்ட் மாதத்தில் ஷேக் ஹசீனா மிகப்பெரும் சிக்கலை சந்திப்பார் அல்லது படுகொலை முயற்சிக்கு ஆளாக நேரிடலாம் என்று குறிப்பிட்டு இருந்தார். அவர் கூறியது போலவே 2024 ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனா மாணவர்கள் போராட்டம் காரணமாக பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறினார்.
நேபாளம் குறித்த கணிப்பு
அவர் வெளியிட்ட மற்றொரு பதிவில், நேபாளத்தில் ஜனநாயக ஆட்சி முடிவுக்கு வந்து 2025க்குள் முடியாட்சி வரும் என்று அவர் கணித்திருந்தார். 2023 ஆம் ஆண்டு வெளியிட்டிருந்த அவரின் இந்த கணிப்பு மீண்டும் கவனத்தை ஈர்த்தது. மேலும் டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பு பற்றி இவர் முன்னரே கணித்திருந்ததாக அது தொடர்பான செய்திகளும் வெளியாகியிருந்தன. இந்த நிலையில் விஜய் துவக்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் பற்றி பிரசாந்த் கினி தனது கணிப்பை வெளியிட்டு இருக்கிறார்.
தவெக குறித்த கணிப்பு
அதில் அவர் வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் ஒற்றை இலக்க இடங்களை மட்டுமே வெல்லும் என்றும், முதல் தேர்தலில் பெரிய அரசியல் மாற்றத்தை தமிழக வெற்றிக்கழகத்தால் ஏற்படுத்த முடியாது என்றும் கூறியுள்ளார். இந்த கணிப்பு விஜய் ரசிகர்கள் மற்றும் அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் விவாதத்தை கிளப்பி உள்ளது. பிரசாந்த் கினியின் முந்தைய கணிப்புகள் சரியாக அமைந்திருப்பதால் இந்த கணிப்பு சரியாக இருக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

