2025ல் மொத்தம் 17 நாள் லீவு: மொத்த லிஸ்டையும் வெளியிட்ட அரசு
2025ம் ஆண்டு இன்னும் 1 மாதத்தில் பிறக்கவுள்ள நிலையில் புத்தாண்டுக்கான மொத்த விடுமுறை பட்டியலை மாநில அரசு வெளியிட்டுள்ளது.
Holiday List 2025
2024ம் ஆண்டு முடிவடைய இன்னும் 35 நாட்களே உள்ளன. இதனிடையே 2025ம் ஆண்டில் மொத்தமாக அரசு சார்பில் விடப்படும் அரசு விடுமுறை நாட்களுக்கான பட்டியலை மத்திய அரசு அண்மையில் வெளியிட்டது. அந்த அறிவிப்பில் ஆங்கில புத்தாண்டு, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகள் அடங்க மொத்தமாக 23 நாட்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஆங்கில புத்தாண்டு, பொங்கல் பண்டிகை, குடியரசு தினம், தைப்பூசம், தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி, உழைப்பாளர் தினம், பக்ரீத் பண்டிகை, சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, ஆயுத பூஜை, விஜயதசமி, காந்தி ஜெயந்தி, தீபாவளி, கிருஸ்துமஸ் பண்டிகை என மொத்தமாக 23 நாட்கள் விடுமுறை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வரிசையில் புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜனவரி 1 ஆங்கில புத்தாண்டு, 14 - பொங்கல் பண்டிகை, 15 - திருவள்ளுவர் தினம் மற்றும் மாட்டு பொங்கல், மார்ச் 31 - ரமலான் பண்டிகை, ஏப்ரல் 14 - தமிழ் புத்தாண்டு, 18 - புனித வெள்ளி, மே 1 - உழைப்பாளர் தினம், ஜூன் 7 - பக்ரீத் பண்டிகை, ஆகஸ்ட் 15 - சுதந்திர தினம், 16 - டிஜீரே டிரான்ஸ்பர் தினம், 27 - விநாயகர் சதுர்த்தி ஆகிய தினங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் செப்டர்ம்பர் 5 - மிலாது நபி, அக்டோபர் 1 - சரஸ்வதி பூஜை, 2 - காந்தி ஜெயந்தி, 20 - தீபாவளி, நவம்பர் 1 - புதுச்சேரி விடுதலை நாள், டிசம்பர் 25 - கிறிஸ்துமஸ் பண்டிகை என மொத்தமாக 17 நாட்கள் விடுமுறை அளிவிக்கப்பட்டுள்ளது.