- Home
- Politics
- தேவர், நாடார், வன்னியர், முதலியார், கவுண்டர் என்றால் அலர்ஜி..! திமுகவுக்கு ரெட்டி, நாயுடு இனிக்குதா..? சூட்டை கிளப்பும் சினிமா பிரசாந்த்..!
தேவர், நாடார், வன்னியர், முதலியார், கவுண்டர் என்றால் அலர்ஜி..! திமுகவுக்கு ரெட்டி, நாயுடு இனிக்குதா..? சூட்டை கிளப்பும் சினிமா பிரசாந்த்..!
அரசு சாதி-ஒழிப்பு உறுதிமொழியைத் தக்கவைக்க, ஜி.டி.நாயுடு என்று சுருக்கி பெயரிடலாம் இது சர்ச்சைகளை குறைக்கும். சாதி ஒழிப்பு என்பது பெயர்களைத் தாண்டி, மனதில் இருந்து தொடங்க வேண்டும்.

GT Naidu
கோவை அவினாசி சாலையில் உள்ள புதிய உயர்மட்ட மேம்பாலத்திற்கு ‘ஜி.டி.நாயுடு மேம்பாலம்’ எனப் பெயர் சூட்டியது தமிழ்நாடு அரசு, இந்தப் பெயர் சூட்டல் தமிழ்நாட்டின் தொழிலியல் மற்றும் விஞ்ஞான புரட்சிகரரான ஜி.டி.நாயுடுவின் 1893-1974 சாதனைகளை கௌரவிக்கும் நோக்கில் எடுக்கப்பட்டது. ஆனால், இது சமூக வலைதளங்களில் சாதி சர்ச்சையாக மாறியுள்ளது.
கோவை அருகேயுள்ள சூலூர் கலங்கல் என்ற ஊரில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் கோபால்சாமி துரைசாமி நாயுடு. 4-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். உழைப்பாலும் ஆராய்ச்சியாலும் ‘இந்தியாவின் எடிசன்’ என்று அழைக்கப்பட்டவர்.
அவரது பெயர் தமிழ்நாட்டில் தொழில்நுட்ப வளர்ச்சியின் சின்னமாகக் கருதப்படுகிறது. கோவை போன்ற தொழில் நகரங்கள் அவரது பங்களிப்பால் வளர்ந்தன.
GD Naidu Bridge
2025 ஜூன் மாதம், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, தெரு, சாலைப் பெயர்களில் சாதி, சமூகப் பெயர்களை அகற்றும் அரசாணை பிறப்பித்தது. இது சமூகநீதி, சாதி ஒழிப்பை ஊக்குவிக்கும் நோக்கில் எடுக்கப்பட்டது. இந்நிலையில், புதிய மேம்பாலத்திற்கு ‘ஜி.டி.நாயுடு’ என்ற பெயரை அறிவித்ததும், ‘நாயுடு’ என்பது தெலுங்கு, கன்னட சமூகத்தின் கம்மவார், பலிஜா சாதிப் பெயராகக் கருதப்படுகிறது.
ஜி.டி.நாயுடு தெலுங்கு நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், இது அரசின் சாதி-ஒழிப்பு கொள்கையுடன் முரண்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன. திமுகவின் சமூகநீதி உறுதிமொழியை கேள்விக்குள்ளாக்கினர். தமிழர்களின் சாதிப் பெயர்களை அகற்றலாம். ஆனால் தெலுங்கர்களின் பெயரை வைக்கலாமா?" எனக் கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், சினிமா விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி தனது எக்ஸ்தளப்பதிவில், ‘‘தேவர் , நாடார் , பிள்ளை , வன்னியர் , கவுண்டர் , முதலியார் , செட்டியார்னா எங்களுக்கு அலர்ஜி ! ரெட்டி , நாயுடு இன்ன பிற எங்களுக்கு ரொம்ப ஓகே ! நாங்க தான் தி பகுத்தறிவு பகலவன்ஸ் !! எவனும் கேள்வி கேக்க கூடாது !’’ என தெரிவித்துள்ளார். “"தமிழனுக்கு மட்டும் சாதிப்பெயர் இருக்கக்கூடாது, தெலுங்கனுக்கு இருக்கலாம்" என பலருன் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். சிலர் "நாயுடு சாதி இல்லையா? ஜி.டி. என்று சுருக்கி வைக்கலாம்" என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
GD Naidu
இது தனிநபர் சாதனையை கௌரவிக்கிறது. நாயுடு என்பது தொழில், பட்டம். நாயக்கர், தலைவர் போன்று சாதி அல்ல என்றும் வாதிடுகின்றனர். ஜி.டி.நாயுடு தமிழகத்தில் வாழ்ந்து, தமிழ் சமூகத்திற்கு பங்களித்தவர் என்பதால், சாதி அல்ல என்கின்றனர்.
ஜி.டி.நாயுடுவின் சாதனைகள் சாதியைத் தாண்டியவை. அவர் தமிழகத்தின் பெருமை. ஆனால், அரசு சாதி-ஒழிப்பு உறுதிமொழியைத் தக்கவைக்க, ஜி.டி.நாயுடு என்று சுருக்கி பெயரிடலாம் இது சர்ச்சைகளை குறைக்கும். சாதி ஒழிப்பு என்பது பெயர்களைத் தாண்டி, மனதில் இருந்து தொடங்க வேண்டும்.