- Home
- Politics
- எடப்பாடியை விட வீரியமாக திமுகவை எதிர்க்கும் விஜய்..! காரணம் என்ன..? ரகசியம் உடைத்த துக்ளக் ரமேஷ்
எடப்பாடியை விட வீரியமாக திமுகவை எதிர்க்கும் விஜய்..! காரணம் என்ன..? ரகசியம் உடைத்த துக்ளக் ரமேஷ்
எடப்பாடி பழனிச்சாமியை விட வீரியமாக திமுகவை எதிர்ப்பவர் விஜய். திமுகவுடன் அண்டர்ஸ்டாண்டிங் அரசியல் செய்து கொண்டு அரசியல் நடத்தும் எடப்பாடி பழனிச்சாமியை விட வீரியமாக எதிர்த்து அரசியல் செய்பவர் விஜய்.

நடிகர் விஜய் தலைமையிலான தவெக 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் திமுகவை கடுமையாக எதிர்த்து வருகிறார். இந்த எதிர்ப்பு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியில் எதிர்ப்பை விட வீரியமாக உள்ளது எனிகிறார்கள் அரசியல் விமர்சகர்கள். விஜய் கட்சி தொடங்கிய உடன் தனது முதல் மாநாட்டிலேயே திமுகவை அரசியல் எதிரி என்று அறிவித்து, வாரிசு அரசியல், ஊழல், டிராவிட மாடலை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
பாஜகவை கொள்கை எதிரி எனக்கூறி சிஏஏ, நீட், எஸ்.ஐ.ஆர் போன்றவற்றை எதிர்த்து, திமுகவின் திராவிட மாடலை சாடி வருகிறார்.
எடப்பாடி பழனிசாமியின் திமுக எதிர்ப்பு அரசியல் உத்தி அடிப்படையில் மட்டுமே இருந்து வருகிறதுய். திமுகவை எதிர்கட்சி என்கிற அளவில் மட்டுமே எதிர்த்து வருகிறார். இதற்கு காரணம் அதிமுக முன்னாள் ஆட்சியின் அணுகுமுறை, ஊழல், சட்டம்-ஒழுங்கு ந்ெருடலை ஏற்படுத்துகிறது. எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி வைத்து, திமுக-இண்டியா கூட்டணியை எதிர்க்கிறார். எடப்பாடி பழனிசாமி அரசியல் உத்திகளுக்காக திமுகவை எதிர்க்கும் நிலையில், விஜய் திமுகவை ஆக்ரோஷமாக எதிர்த்து வருகிறார் என்கிறார்கள்.
விஜயின் வீரியமான திமுக எதிர்ப்பு குறித்து பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ் கூறுகையில், ‘‘எடப்பாடி பழனிச்சாமியை விட வீரியமாக திமுகவை எதிர்ப்பவர் விஜய். திமுகவுடன் அண்டர்ஸ்டாண்டிங் அரசியல் செய்து கொண்டு அரசியல் நடத்தும் எடப்பாடி பழனிச்சாமியை விட வீரியமாக எதிர்த்து அரசியல் செய்பவர் விஜய். எடப்பாடி பழனிச்சாமிக்கும், திமுகவுக்கும் எப்படி அண்டர்ஸ்டாண்டிங் என்று சொல்கிறேன். எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரை சுற்றி இருக்கக்கூடிய ஒன்றிரண்டு பேர் திமுக அரசாங்கத்திடம் கொடுநாடு வழக்கு போன்ற சலுகைகளை பெற்று வருகிறது. என்னைப் போன்ற சில பத்திரிகையாளர்களுக்கு இதன் பின்னணி தெரியும்.
இன்றைக்கு திமுக யாரையாவது பார்த்து மிரண்டு வருகிறது என்றால் விஜய்யின் எழுச்சியை பார்த்து தான் மிரண்டு இருக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் விஜயின் பெயரை உச்சரிக்காமல் பேசுகிறார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏன் அவரைப் பார்த்து நேரடியாக பெயரைச் செல்லாமல் விமர்சிக்கிறார். திமுகவின் சமூக வலைதளங்களில் இயங்குகிறவர்கள் எப்படி பேசுகிறார்கள்? திமுக மேடைகளில் பேச்சாளர்கள் எப்படி தரம் தாழ்ந்து பேசுகிறார்கள்? சீமான், திமுகவுக்கு வேண்டிய ஒருவர் போல செயல்பட ஆரம்பித்து விட்டார். அவர் விஜயை மட்டும்தான் விமர்சித்து பேசுகிறார். திமுகவை விமர்சித்து பேசுவது குறைவு. ஆட்சியில் இருக்கிற திமுகவை எதிர்க்க வேண்டுமா? திமுகவை எதிர்க்கும் விஜய் எதிர்க்க வேண்டுமா? சீமான் சரியான புரிதல் இல்லாமல், தெளிவில்லாமல் செயல்பட்டு வருகிறார்.
எஸ்.ஐ.ஆரை எதிர்த்து விஜய் வழக்கு தொடுத்துள்ளார். ஆட்சியில் இருக்கக்கூடிய கட்சி திமுக. திமுகவைதான் விமர்சிக்க வேண்டும், பேச வேண்டும், தோலுரிக்க வேண்டும், அம்பலப்படுத்த வேண்டும். அதை விஜய் சிறப்பாக செய்கிறார். செங்கோட்டையன் விஜய் கட்சியில் சேர முடிவெடுத்து விட்டார். அவர் தவெகவின் கூட்டணி பேச்சுக்கு பயன்படுவார். தவெகவின் நிகழ்ச்சிக்கு பயன்படுவார். செங்கோட்டையன் போன்ற அனுபவசாலிகள் பலர் விஜய்க்கு பலம் சேர்ப்பார்கள். விஜய்க்கு செங்கோட்டையன் பக்கபலமாக இருப்பார்’’ எனத் தெரிவித்துள்ளார்.
