MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • Karunanidhi Memorial Day : அடேங்கப்பா... கலைஞர் செய்த சாதனைகள் இவ்வளவா.? வாங்க ஃபிளாஷ் பேக்கை பார்ப்போம்

Karunanidhi Memorial Day : அடேங்கப்பா... கலைஞர் செய்த சாதனைகள் இவ்வளவா.? வாங்க ஃபிளாஷ் பேக்கை பார்ப்போம்

தமிழக மக்களால் என்றும் மறக்க முடியாத வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் கலைஞர் கருணாநிதி, தமிழக மக்களின் தேவைகளை கண்டறிந்து செயல்படுத்தியவரின் 5 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று.

3 Min read
Ajmal Khan
Published : Aug 07 2023, 10:09 AM IST| Updated : Aug 07 2023, 10:11 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

தமிழகமும் கருணாநிதியும்

தமிழ்நாட்டு அரசியலிலும் கலைத் துறையிலும் பிரபலமாக விளங்கிய மு.கருணாநிதியின் செயல்பாடுகள் தனித்துவமானவை. கலைஞர் என்பது தமிழில் ஒரு பெயர்ச்சொல். ஆனால், தமிழ்நாட்டில் கலைஞர் என்றால் ஒரே ஒரு பெயரைத் தான் குறிக்கும். அவர் தான், திமுக தலைவர் கருணாநிதி. தமிழக அரசியல் வரலாற்றை எழுதும் போது தவிர்க்க முடியாத பெயர். பெயர் மட்டுமல்ல இவரின் செயல்பாடுகளும் சாதனைகளும் அரசியலில் அடியெடுத்து வைப்பவர்களுக்கு இன்றளவும் ஏதோரு வகையில் பாடமாகவே இருக்கிறது. கருணாநிதி மறைந்து 5 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில்,  கலைஞரின் அரசியல் தடத்தை சற்றே திரும்பிப் பார்க்கலாம்.

27

கருணாநிதி அரசியல் ஆர்வம்

முத்தமிழ் அறிஞர், தமிழினத் தலைவர் என்று தனது ஆதரவாளர்களால் அன்போடு அழைக்கப்படும் முத்துவேல் கருணாநிதியின் இயற்பெயர் தட்சிணா மூர்த்தி. இவர், நாகப்பட்டிணம் மாவட்டம் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளையில் முத்துவேலர், அஞ்சுகம் அம்மையாருக்கு ஜூன் 3ம் தேதி, 1924ம் ஆண்டு மகனாகப் பிறந்தார்.
நீதிக்கட்சியின் தூணாக இருந்த பேச்சாளர் அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட கருணாநிதி, தனது 14-ம் வயதில், சமூக இயக்கங்களில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தனது வளரும் பருவத்தில், வட்டார மாணவர்கள் சிலரின் உதவியுடன் இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பை உருவாக்கினார். 
 

37

கள்ளக்குடி போராட்டத்தில் கருணாநிதி

1953-ம் ஆண்டு கல்லக்குடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. இந்த தொழிற்துறை நகரத்தின் அசல் பெயர் கள்ளகுடி. இது வட இந்தியாவில் இருந்து ஒரு சிமென்ட் ஆலை ஒன்றை உருவாக்கிய சிம்மோகிராம் பிறகு டால்மியாபுரத்தில் மாற்றப்பட்டது. கருணாநிதி மற்றும் அவருடைய தோழர்கள் ரெயில் நிலையத்திலிருந்து டால்மியாபுரம் என்ற பெயரை அழித்தனர் மற்றும் ரெயில்களின் பாதைகளைத் தடுத்ததால் கருணாநிதி கைது செய்யப்பட்டார். இது போன்று பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு முக்கிய தலைவராக உருவெடுத்தார் கருணாநிதி,
 

47

கருணாநிதியின் அரசு பொறுப்புகள்

1962-ல் சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவர், 1967-ல் பொதுப்பணித்துறை அமைச்சர். அண்ணா மறைவுக்குப் பின் 1969-ல் முதலமைச்சராகிறார் கருணாநிதி. அடுத்து, 1971, 1989, 1996, 2006 என ஐந்து முறை தமிழக முதலமைச்சராக இருந்தவர் கருணாநிதி. 13 முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட கருணாநிதியை மக்கள் ஒருமுறைகூட தோற்க அனுமதித்ததில்லை.

தமிழகத்தின் முதலமைச்சர் பதவியை 5 முறை அலங்கரித்தவர். அண்ணா மறைவுக்குப் பின்னர் 1969ல் முதல்முறையாக முதலமைச்சரானார். அப்பதவியில் 1971ம் ஆண்டு வரை நீடித்தார். தொடர்ந்து 1971 முதல் 1976 வரை 2வது முறையும், 89 முதல் 91 வரை மூன்றாவது முறையும், 1996 முதல் 2001 வரை நான்காவது முறையும், 2006 முதல் 2011 வரை ஐந்தாவது முறையும் முதலமைச்சராக இருந்தார்.

57

கருணாநிதியை சந்தித்த தலைவர்கள்

கருணாநிதியை சந்திக்க கோபாலபுரம் வராத அரசியல்வாதிகளே கிடையாது. 80-களில் இந்திரா காந்தி வந்தார், 90-களில் வாஜ்பாய்,  2000-த்தில் சோனியா, கடைசியாக மோடியும் வந்தார். பல தலைவர்கள் கருணாநிதியை வீடு தேடி வரும் அளவிற்கு அரசியலில் சாணக்கியராக திகழ்ந்நார் கருணாநாதி, அப்பட்டிப்பட கருணாநிதி தனது ஆட்சி காலத்தில் பல சாதனைகளை மக்களுக்கு செய்து காட்டியவர், மனிதர்களை மனிதனே இழுத்துச் செல்லும் வகையிலான கைரிக்ஷாக்கள் ஒழிக்கப்பட்டது.

குடிசைகளில் வாழ்வோருக்கு நிரந்தர வீடுகள் கட்டித் தருவதற்காக குடிசை மாற்று வாரியம் என்ற அமைப்பை கருணாநிதி தொடங்கினார். சொத்தில் பெண்ணுக்கு சம உரிமையை சட்டமாக்கியது, அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு தந்தது, ஆசியாவிலே முதன் முறையாக கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைகழகம், ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம், விதவை பெண்கள் மறுமண நிதி உதவி திட்டம். 

67

கர்ப்பிணி பெண்களுக்கு நிதி உதவி திட்டம், பெண்கள் சுய உதவி குழுக்கள் அமைத்தது, இடஒதுக்கீடு கொள்கையை நடைமுறைப்படுத்தி, 50 விழுக்காட்டில் 30 விழுக்காடு பிற்படுத்தப் பட்டோருக்கும், 20 விழுக்காடு மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கும், 18 விழுக்காடு தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும், 3 விழுக்காடு அருந்ததியருக்கும், 3.5 விழுக்காடு இஸ்லாமியருக்கும், 1 விழுக்காடு மலைவாழ் மக்களுக்கும் அளித்து அடித்தட்டு மக்கள் கல்வி, வேலை வாய்ப்புகளை உறுதி அளித்தது.


சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய நாட்களில் தேசியக் கொடியை ஏற்றும் உரிமையை மாநிலத்தின் ஆளுநர்களே பெற்று இருந்தனர். அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தியுடன் போராடி, சுதந்திர தினத்தில் கொடி ஏற்றும் உரிமையை முதல்வர்களுக்கு பெற்றுத் தந்தவர் கருணாநிதி.
 

77
Chennai: Tamil Nadu Chief Minister MK Stalin pays respects to DMK founder Perarignar Anna before paying tribute to his father M Karunanidhi on his 99th birth anniversary at his memorial at Marina beach, in Chennai, Friday, June 3, 2022. (PTI Photo/R Senthil Kumar) (PTI06_03_2022_000086B)

Chennai: Tamil Nadu Chief Minister MK Stalin pays respects to DMK founder Perarignar Anna before paying tribute to his father M Karunanidhi on his 99th birth anniversary at his memorial at Marina beach, in Chennai, Friday, June 3, 2022. (PTI Photo/R Senthil Kumar) (PTI06_03_2022_000086B)

இது போன்ற பல ஆயிரம் சாதனைகளுக்கு சொந்தகாரரான கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட்  7 ஆம் தேதி இந்த உலகத்தை விட்டு விடை பெற்றார். அவரது நினைவாக சென்னை மெரினா கடற்கரை சாலையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மிகப்பெரிய அளவில் நினைவு மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. கருணாநிதி தமிழக மக்களுக்கு விட்டு சென்ற பணியை அவரது மகன் மு.க.ஸ்டாலின் திமுகவை ஆட்சி கட்டிலில் மீண்டும் அமர வைத்து தமிழக மக்களுக்கு தேவையான பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்.

இதையும் படியுங்கள்

கலைஞர் கருணாநிதிக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி!

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved