- Home
- Politics
- ஜெயலலிதா பாணியில் களமிறங்கும் விஜய்..! ஆசை ஆசையாய் வாங்கிய பிரச்சாரப் பேருந்தை தூக்கிக் கடாசும் தவெக..!
ஜெயலலிதா பாணியில் களமிறங்கும் விஜய்..! ஆசை ஆசையாய் வாங்கிய பிரச்சாரப் பேருந்தை தூக்கிக் கடாசும் தவெக..!
தேர்தல் பிரச்சாரத்திற்காக விஜய் ஆசையாக தயார் செய்த பேருந்து இப்போது பனையூரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இனி இந்த பேருந்தை பிரச்சாரத்திற்கு எடுக்க வேண்டாம் என்று விஜய் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

விஜயின் போருந்தில் சிக்கிய வீடியோக்கள்
த.வெ.க தலைவர் விஜய் செப்டம்பர் 27-ம் தேதி கரூர் மாவட்டத்தில் நடத்திய பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தின் பின்னணியில் விஜயின் பிரச்சார பேருந்து முக்கிய பங்கு வகித்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்றம் கடுமையான கண்டனம் தெரிவித்து, வாகனத்தை பறிமுதல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
கரூரில் விஜயின் பிரச்சார பேருந்து வருவதற்காக ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் காத்திருந்தனர். கட்சி தொண்டர்கள் பேருந்தின் முன்னும் பின்னும் கூட்டத்தை உருவாக்கி சாலைகளை அடைத்தனர். வாகனம் வரும்போது கூட்டம் நகர்ந்ததால் நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டுநர் நெரிசலை கவனித்தும் நிறுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இரு சக்கர வாகனங்கள் விஜயின் போருந்தில் சிக்கிய வீடியோக்களும் வெளிவந்தன.
பேருந்தை பறிமுதல் செய்யவும் உத்தரவு
விஜயின் பிரச்சார வாகனம் நேரடியாக சம்பவத்துக்கு காரணமாகக் கருதப்படுகிறது. வாகனம் தவறான பக்கச் சாலையில் சென்று, கூட்டத்தின் நடுவில் நின்றது. ஹிட் அண்ட் ரன் போல பேருந்து ஓட்டுநர் நெரிசலை பார்த்தும் முன்னோக்கி சென்றார் என்ற குற்றச்சாட்டுகளும் வைக்கப்படுகின்றன. பிரச்சார வாகனம் இரு சக்கர வாகனங்களை இடித்து ஓடியதால் பேருந்தை பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், விஜயின் பிரச்சாரப் பேருந்துக்கு ஆயுத பூஜை போடப்பட்ட நிலையில் இனி அப்படியே அந்த பேருந்தை ஓரம் கட்டி இருக்கிறார்கள். இனி அவர் ஜெயலலிதா பணியில் பிரச்சாரம் மேற்கொள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் பிரச்சாரத்திற்காக விஜய் ஆசையாக தயார் செய்த பேருந்து இப்போது பனையூரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இனி இந்த பேருந்தை பிரச்சாரத்திற்கு எடுக்க வேண்டாம் என்று விஜய் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
தன்னிச்சையாக செயல்படும் புஸ்ஸி ஆனந்த்
அந்த பேருந்துக்கு ஆயுத பூஜை போட வேண்டும் என்கிற எண்ணமே விஜய்க்கு இல்லை என்கிறார்கள். ஆனால், புஸ்ஸி ஆனந்த் எங்கிருந்தோ போன் செய்து பேருந்துக்கு பூஜை செய்தே தீர வேண்டும் என்று கட்டளையிட்டு இருக்கிறார். அதனால் தான் அந்த பேருந்துக்கு பூஜை நடந்ததாக கூறுகிறார்கள். கட்சியில் விஜய்க்கு விசுவாசமாக இருக்கக்கூடிய சில சீனியர் நிர்வாகிகள் கரூர் சோகத்தை பிரதிபலிக்கும் விதமாக தவெக கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விட வேண்டும் என்றும், குறிப்பாக பனையூர் தவெக அலுவலகத்தில் இருக்கக்கூடிய கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விட வேண்டும் என்று ஆலோசனை சொல்லி இருக்கிறார்கள்.
ஆனால், அது விஜய் காதுகளுக்கு போகவில்லை என்கிறார்கள். விஜய் இந்த விஷயத்தை செய்ய வேண்டும், செய்யக்கூடாது என அவருக்கு அவ்வப்போது ஆலோசனை சொல்ல முயல்கிறார்கள் சில நடுநிலையாளர்கள். ஆனால், அவருக்கு சில விஷயங்கள் செல்ல விடாமல் புஸ்ஸி ஆனந்த் போன்ற நபர்கள் தடுப்பதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
ஜெயலலிதா பாணியில் விஜய்
இந்நிலையில் பேருந்தில் இனி பிரச்சாரத்திற்கு போகக்கூடாது என்று முடிவெடுத்து இருக்கிற விஜய் ஒவ்வொரு மாவட்டத்திலும் அதன் தலைநகர் பகுதிகளுக்கு செல்லாமல் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. விக்கிரவாண்டி, மதுரை போல ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் புறப்பகுதிகளில் இருக்கக்கூடிய காலி மைதானத்தை தேர்ந்தெடுத்து விஜய் நிற்பது போல் ஒரு மேடை மட்டும் தயார் செய்து அந்த இடத்திலிருந்து பேசுவதாக விஜய் முடிவெடுத்து இருக்கிறாராம். கிட்டத்தட்ட ஜெயலலிதா 2016 சட்டமன்ற தேர்தலில் மண்டல வாரியாக மேற்கொண்ட விசாரணை போல விஜய் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
விபத்து ஏற்படுத்தியது தொடர்பாக விஜயின் பிரச்சார பேருந்தை ஹிட் அண்ட் ரன் முறை வழக்கில் பறிமுதல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இடன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து, பனையூர் அலுவலகத்தில் உள்ள பேருந்தை பறிமுதல் செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். விரைவில் விஜயின் பிராச்சாரப்பேருந்து காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.