MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • தவெக ஆட்சி அமைக்க முடியாதா? ஆளுநர் வைக்கப்போகும் ட்விஸ்ட்? குஷியில் திமுக.! தமிழ்நாட்டில் நடக்கப்போவது இதுதான்.!

தவெக ஆட்சி அமைக்க முடியாதா? ஆளுநர் வைக்கப்போகும் ட்விஸ்ட்? குஷியில் திமுக.! தமிழ்நாட்டில் நடக்கப்போவது இதுதான்.!

TN Election Result 2026 : தமிழக அரசியலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் ஆளுநருக்கு உள்ள அதிகாரங்கள் என்ன? தொங்கு சட்டமன்றம் அமையும் பட்சத்தில் என்ன நடக்கும்? என இந்த பதிவில் பார்க்கலாம். 

2 Min read
Author : Ramprasath S
Published : May 04 2026, 02:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
தமிழகத்தில் தொங்கு சட்டமன்றம் அமையுமா?
Image Credit : X

தமிழகத்தில் தொங்கு சட்டமன்றம் அமையுமா?

2026 ஆம் ஆண்டு நடைபெற்ற முடிந்த சட்டமன்ற தேர்தல் இதுவரை கண்டிராத பல திருப்புமுகளை சந்தித்து வருகிறது. புதிதாக களம் கண்டுள்ள நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சுமார் 100-க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம் அதை எட்டுமா? அல்லது யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டமன்றம் அமையுமா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தொங்கு சட்டமன்றம் அமையும் சூழலில் ஆளுநர் முடிவு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26
தொங்கு சட்டமன்றம் - ஆளுநரின் அதிகாரம் என்ன?
Image Credit : X

தொங்கு சட்டமன்றம் - ஆளுநரின் அதிகாரம் என்ன?

அரசியலமைப்பு சட்டத்தின்படி ஆளுநர் தனது விருப்ப அதிகாரத்தை பயன்படுத்தி பின்வரும் வரிசையில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார். தேர்தலுக்கு முன்பே அமைக்கப்பட்ட கூட்டணிக்கு பெரும்பான்மை இருந்தால் அவர்களை முதலில் அழைப்பார். எந்த கூட்டணியும் இல்லாத நிலையில் அதிக இடங்களை பெற்று தனிப்பெரும்பான்மை பெறும் கட்சியின் தலைவரை அழைத்து குறிப்பிட்ட நாட்களுக்குள் (பொதுவாக 15 நாட்களுக்குள்) பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்வார். தேர்குதலுக்கு பிந்தைய கூட்டணியாக கட்சிகள் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கி தங்களுக்கு பெரும்பான்மை இருப்பதாக கடிதம் கொடுத்தால் அவர்களை பரிசீலிப்பார்.

Related Articles

Related image1
சீமானின் கதையை மொத்தமாக முடித்துவிட்ட விஜய்.! அதல பாதாளத்தில் நாம் தமிழர் கட்சி.! இனி நாதக என்னவாகும்?
Related image2
எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் என்ன நடக்கும்? தமிழ்நாட்டில் அடுத்து நடக்கப்போவது என்ன?
36
ஆளுநரின் முடிவே இறுதியானது
Image Credit : Asianet News

ஆளுநரின் முடிவே இறுதியானது

தமிழக வெற்றிக் கழகம் தனியாக 118 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் எந்த தயவும் இல்லாமல் ஆட்சி அமைக்க முடியும் அல்லது தவெக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணி 118 இடங்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். ஒருவேளை தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்தால் மற்ற கட்சிகளின் ஆதரவுடன் (வெளியில் இருந்தோ அல்லது கூட்டணியாகவோ) ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரலாம். ஆளுநர் யாரை முதலில் அழைக்க வேண்டும் என்பதில் சில நேரங்களில் சர்ச்சைகள் எழும். யார் நிலையான ஆட்சியைத் தருவார்கள்? என்று ஆளுநர் கருதுகிறாரோ அவரையே அழைக்க அவருக்கு அதிகாரம் உண்டு.

46
ஆளுநருக்கு உள்ள மூன்று அதிகாரங்கள்
Image Credit : our own

ஆளுநருக்கு உள்ள மூன்று அதிகாரங்கள்

சட்டமன்றத் தேர்தலை பொறுத்தவரை ஆளுநருக்கு மூன்று முக்கிய அதிகாரங்கள் உள்ளன. முதல்வரை தேர்ந்தெடுத்து பதவிப் பிரமாணம் செய்து வைத்தல். பின்னர் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கு எடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுதல். எந்த கட்சியாலும் ஆட்சி அமைக்க முடியாத பட்சத்தில் சட்டமன்றத்தை கலைக்க பரிந்துரை செய்ய அவரால் முடியும். எந்த கட்சியும் பெரும்பான்மையை நிரூபிக்காத சூழ்நிலையில் குடியரசு தலைவருக்கு சட்டமன்றத்தை கலைத்து குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதற்கு பரிந்துரை கடிதத்தை அளிக்க முடியும். அவ்வாறு நடைபெற்றால் ஆறு மாதங்களுக்கு குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று அதன் பின்னர் மீண்டும் தேர்தல் நடைபெறும்.

56
குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வருமா?
Image Credit : ANI

குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வருமா?

எந்த கட்சிக்கும் அல்லது எந்த கூட்டணியாலும் ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்களை உறுதிப்படுத்த முடியாமல் போனால் ஆளுநர் முதலில் நிலைமையை ஆராய்வார். நிலையான ஆட்சி அமைய வாய்ப்பே இல்லை என்று அவர் கருதும் பொழுது, மத்திய அரசுக்கு அறிக்கையை தாக்கல் செய்வார். அதன் அடிப்படையில் குடியரசுத் தலைவர் சட்டசபையை முடக்கி வைத்து அல்லது கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல் படுத்துவார். சுமார் ஆறு மாத காலங்களுக்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருக்கும். அதன் பின்னர் தேர்தல் ஆணையம் மீண்டும் தேர்தலை நடத்துவதற்கு ஆயத்தமாகும். பின்னர் முறையாக தேர்தல் அறிவிக்கப்பட்டு மீண்டும் தேர்தல் நடைபெறும்.

66
சிறிய கட்சிகள் மீது திரும்பிய கவனம்
Image Credit : stockPhoto

சிறிய கட்சிகள் மீது திரும்பிய கவனம்

பெரும்பான்மை இல்லாத பட்சத்தில் குதிரை பேரம் நடக்க வாய்ப்பு உள்ளது. எம்எல்ஏக்கள் பிற கட்சிகளால் விலைக்கு வாங்கப்படுவதும், கட்சித் தாவல்களும் விரைவாக நடைபெறும். எனவே இதை தவிர்க்க ஆளுநர் விரைவாக செயல்பட வேண்டி இருக்கும். தவெக போன்ற புதிய கட்சிகளுக்கு மற்ற கட்சிகளின் ஆதரவு கிடைப்பதை பொறுத்து ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைக்கும். தமிழக அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் தேர்தலுக்கு முடிவுக்குப் பிந்தைய கூட்டணி கட்சிகள் கிங் மேக்கராக இருக்கும். அந்த வகையில் அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் பிற சிறிய கட்சிகளை நோக்கி அரசியல் பார்வையாளர்களின் கவனம் திரும்பியுள்ளது.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசியல்
தேர்தல்
தேர்தல் முடிவு
திமுக
டிவி.கே. விஜய்

Latest Videos
Recommended Stories
Recommended image1
CM Vijay Convoy: காரின் கண்ணாடியை இறக்கிய முதல்வர் விஜய்! பாய்ந்து வந்த இளைஞர்! நடந்தது என்ன?
Recommended image2
Semmalai Admk: செம்மலையை தட்டி தூக்கியதா தவெக? “கற்பூரம் கரையலாம்; கட்சி கரையலாமா?” என வேதனையுடன் வெளியேரும் செம்மலை.!
Recommended image3
அவ்வளவு தரங்கெட்டவன் நான் இல்லை.. திமுக, அதிமுக கூட்டணிக்கு பேச்சுவார்த்தை..? ரஜினி பரபரப்பு விளக்கம்
Related Stories
Recommended image1
சீமானின் கதையை மொத்தமாக முடித்துவிட்ட விஜய்.! அதல பாதாளத்தில் நாம் தமிழர் கட்சி.! இனி நாதக என்னவாகும்?
Recommended image2
எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் என்ன நடக்கும்? தமிழ்நாட்டில் அடுத்து நடக்கப்போவது என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved