- Home
- Politics
- திருமாவின் இந்த உருட்டு மிரட்டெல்லாம் இனி எடுபடாது..! பெரும் போராட்டத்தில் குதித்த வழக்கறிஞர்கள்..!
திருமாவின் இந்த உருட்டு மிரட்டெல்லாம் இனி எடுபடாது..! பெரும் போராட்டத்தில் குதித்த வழக்கறிஞர்கள்..!
வழக்கறிஞர்களுக்கான மன்றமாக இல்லாவிட்டால் பார் கவுன்சில் எங்களுக்கு தேவையில்லை. முறைத்தார்... அதனால் 4 தட்டு தட்டினார்கள் என்று ஒரு தலைவர் இப்படி பேசலாமா? பார் கவுன்சிலிலேயே வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு இல்லையா?

கார், ஸ்கூட்டர் மீது மோதவே இல்லை
சென்னை உயர்நீதிமன்றம் அருகே விசிக தலைவர் திருமாவளவனின் கார் மீது இடித்ததாகக் கூறி வழக்கறிஞர் ராஜீவ் காந்தி தனது ஸ்கூட்டரை சாலையில் நிறுத்தி திரும்பி பார்த்தபோது அங்கு வந்த விசிகவினர் தாக்குதல் நடத்திய வீடியோ காட்சி வெளியானது. வழக்கறிஞர் ராஜீவ் காந்தியை கும்பலாக தாக்கி, அவரது ஸ்கூட்டரையும் சாலையில் தள்ளி விசிகவினர் அடங்க மறுத்து அட்டூழியம் செய்தனர்.
இதில் அரசியல் சதி இருப்பதாகக் கூறும் விசிகவினர் தொடர்ந்து முன்னுக்குப் பின் முரணாகவும், பதட்டத்துடனும் பேசி வருகின்றனர். திருமாவளவனின் கார் மீது ஸ்கூட்டரில் வந்த ராஜீவ் காந்தி மோதி தகராறு செய்ததாக விசிக வழக்கறிஞர் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்திருந்தார். ஆனால், காவல் நிலையத்தில் விசிகவினர் புகார் அளித்த அதே நாள் திருமாவளவன் வெளியிட்ட காணொளியில் தனது கார், ஸ்கூட்டர் மீது மோதவே இல்லை என்று தெரிவித்திருந்தார். திருமாவளவனின் இந்த வீடியோவின் மூலம் காலையில் எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் விசிகவினர் கொடுத்த புகார் பொய் என்பது உறுதியானது.
வீடியோ ஆதாரமே வலுவாகிறது
திருச்சி விமான நிலையத்தில் பேட்டி அளித்த திருமாவளவன் சென்னையில் தனது கார் டூவீலர் மீது மோதியதாக தவறான கருத்து பரப்ப பரப்பப்பட்டு வருவதாகவும், கார் மோதியதை நிரூபித்தால் தான் மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். சம்பவம் நடைபெற்ற போது விசிக பிரமுகர் ஒருவரது கார் டாஸ்போர்டு கேமராவில் பதிவான வீடியோவில் ஸ்கூட்டர் மீது கார் மோதியது நன்றாக தெரிவதாக வீடியோவை பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். எனவே வீடியோ ஆதாரமே இருக்கும் போது ஸ்கூட்டர் மீது கார் மோதியதற்கு வேறு ஆதாரம் என்ன தேவை என்ற கேள்வியும் எழுகிறது.
அடங்கமறு என்பதற்கு வன்முறையை தூண்டுவதாக அர்த்தம் அல்ல என்றும் பொது விளக்கம் ஒன்றை அளித்துள்ளார் திருமாவளவன். சம்பவம் நடைபெற்ற முதல் உண்மையை பேசினார்கள் என்றால் என்றால் முன்னுக்குப் பின் முரணாக பேச வேண்டிய தேவை இருந்திருக்காது. தனது கார் இடித்ததாக கூறி ஒருவர் சத்தமிட்டார் என்றால் பொறுப்பான ஒரு அரசியல் கட்சியின் தலைவராக கீழே இறங்கி அவரை சமாதான ப்படுத்தி இருக்க வேண்டும் அல்லது அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்க வேண்டும். மாறாக விசிகவினர் ஒன்று கூடி வழக்கறிஞர் ராஜீவ் காந்தியை தாக்கியது எப்படி ஜனநாயகம் ஆகும்? என நியாயத்தில் பக்கம் நிற்போர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட வழக்கறிஞருக்கு நீதி கேட்டு போராட்டம்
இந்நிலையில், திருமாவின் கார் டூவீலரில் மோதிய சம்பவத்தில் ராஜீவ் காந்திக்கு நீதி கிடைத்தே ஆக வேண்டும் என போராட்டத்தில் குதித்துள்ளனர் வழக்கறிஞர்கள். இந்தப்போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உயர்நீதிமன்ற வழக்கறிஞர் முருகவேல், ‘‘உயர் நீதிமன்றத்தில் திருமாவளவனுடன் வந்த குண்டர்கள் வழக்கறிஞர் ராஜீவ் காந்தியை சரமாரியாக தாக்கி விட்டார்கள். தாக்கியதோடு மட்டுமல்லாமல் அவர் உயிர் பாதுகாப்புக்காக எங்களது பார் கவுன்சிலுக்குள்ளே தப்பி ஓடும்போது அங்கேயும் விரட்டிச் சென்று அவரை சரமாரியாக அடித்து உதைத்து கொடூரமாக தாக்கி உள்ளார்கள்.
அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால், இதுவரை காவல்துறை எந்த விதமான வழக்கும் பதியவில்லை. அது சம்பந்தமான சிசிடிவி புட்டேஜையும் கொடுக்கவில்லை. தமிழக அரசு கையில்தான் காவல்துறை இருக்கிறதா? அல்லது குறிப்பிட்ட தலைவர் கையில் காவல்துறை இருக்கிறதா? என்பது எங்களுக்கு ஐயமாக இருக்கிறது. ஆகவே நாங்கள் பாதிக்கப்பட்ட வழக்கறிஞருக்கு நீதி கேட்டு இன்று அனைத்து வழக்கறிஞர்களும் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.
பார் கவுன்சில் எங்களுக்கு தேவையில்லை
இந்த போராட்டம் தமிழகம் முழுவதும் தொடரும். ராஜீவ் காந்திக்கு நீதி கிடைக்கும் வரை இந்த போராட்டம் தொடரும். இதில் அடிபட்டவருக்கு எந்தவித நிவாரணமும் இல்லை. இந்த பார் கவுன்சில் வழக்கறிகளுக்கான மன்றமாக இருக்கிறதா? என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. வருகிற பார் கவுன்சில் தேர்தலை வழக்கறிஞர்கள் புறக்கணிக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள வழக்கறிகள் எல்லாம் புறக்கணிக்க வேண்டும். இது எங்களுடைய வேண்டுகோள். வழக்கறிஞர்களுக்கான மன்றமாக இல்லாவிட்டால் பார் கவுன்சில் எங்களுக்கு தேவையில்லை. முறைத்தார்... அதனால் 4 தட்டு தட்டினார்கள் என்று ஒரு தலைவர் இப்படி பேசலாமா? பார் கவுன்சிலிலேயே வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு இல்லையா?’’ எனக் கொந்தளிக்கிறார் வழக்கறிஞர் முருகவேல்.