- Home
- Politics
- கம்பி கட்டுகிறத கதையெல்லாம் சொல்லும் எம்.பி., வில்சன்..! ஸ்டாலினுக்கு தலைக்குனிவு ஏற்படுகிறதா..?
கம்பி கட்டுகிறத கதையெல்லாம் சொல்லும் எம்.பி., வில்சன்..! ஸ்டாலினுக்கு தலைக்குனிவு ஏற்படுகிறதா..?
கரூர் நெரிசல் சம்பவத்தில், உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணை உத்தரவிட்டபோது, வில்சன் செய்தியாளர்களிடம் "இது இடைக்கால தீர்ப்பு; நீதிமன்றம் ரத்து செய்யலாம்" என்று கூறியுள்ளார். ஆனால், திமுகவின் வாதங்கள் ஏற்கப்படவில்லை என்பதே உண்மை.

கரூர் உயிரிழப்பு சம்பவம் குறித்த விசாரணையை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு திமுகவுக்கு கிடைத்த சவுக்கடி என எதிர்கட்சிகள் எள்ளி நகையாடி வருகின்றன. ‘‘வில்சன் எங்களை எல்லாம் ஏமாற்றி விட்டீர்கள். முதல் கோல் போடும் அணியின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். ஆனால், தவற விட்டீர்கள்’’ என திமுக நிர்வாகிகள் நொந்து கொள்கின்றனர்.
அடிபட்டாலும், மீசையில்மண் ஒட்டாதது போல் சமாளித்து வருகிறார் என திமுக வழக்கறிஞர் வில்சன் மீது ஏக விமர்சனங்கள். இந்த விமர்சனஙளுக்கு காரணம் தீர்ப்பு வந்த பிறகு அதனை ஏற்றுக்கொள்ளாமல் சமாளிக்கும் விதமாக அவர் அளித்த பேட்டி.
‘‘இறுதி விசாரணைக்கு பிறகான தீர்ப்பில் இது இல்லை என்று சொல்லிவிட்டால் இடைக்கால உத்தரவுகள் அனைத்தும் ரத்து ஆகிவிடும். இடைக்காலமாக இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற சொல்லி இருக்கிறார்கள். உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் இரண்டு காவல்துறை அதிகாரிகளுடன் சிபிஐ விசாரணையை கண்காணிக்க குழு அமைத்திருக்கிறார்கள்’’ என்கிறார் வில்சன்.
இது இடை கால தீர்ப்பு என உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் கூறவில்லை. திமுகவின் வில்சன் தவறான முறையில் ஊடகங்கள் மூலம் கூறுவது உச்ச நீதிமன்றம் தீர்ப்பை தவறு என குறிப்பிடும் அளவிற்கு உள்ளது.
‘‘இன்று தீர்ப்பளிக்கப்பட்டபிறகு, வழக்குத் தொடுத்த இரண்டு பேர் எங்கள் பெயரில் மோசடியாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இவர்கள் இருவரையும் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஒரு வழக்கு மோசடியாக போடப்பட்டிருப்பது தெரியவந்தால் நீதிமன்றம் அதற்கு வழங்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்துவிடும். அப்படியும் இந்த தீர்ப்பு ரத்தாகலாம்’’ எனக் கூறியுள்ளார் வில்சன்.
இறந்த குழந்தையின் தாயொருவர் தனது கணவர் பிரபாகரன் பணத்திற்கு ஆசைப்பட்டு சிபிஐ விசாரிக்க வழக்கு தொடர்ந்துள்ளார் என்று கூறுகின்றார். முதலில் அவர் பணத்திற்கு ஆசைப்பட்டு இதைச் சொல்லவில்லை என்றும் இறந்த குழந்தை பிரபாகரனின் குழந்தை இல்லை என்றும் நிரூபிக்க வேண்டும். இறந்த குழந்தை பிரபாகரனின் குழந்தை என்றால், இருவரும் விவாகரத்து பெற்றிருந்தாலும் பிரபாகரனுக்கு வழக்கு தொடர உரிமை இருக்கிறது. 5 பேர் தாக்கல் செய்த மனுவில் ஒருவர் மனுத் தாக்கலில் மோசடி செய்ததாகவே வைத்து கொள்வோம், 4 பேர் தாக்கல் செய்தது உண்மைதானே.
‘‘நாங்களும் நீதிமன்ற உத்தரவின்படி, எதிர்மனு தாக்கல் செய்கிறோம். இது இடைக்கால தீர்ப்புதான். 41 பேர் இறந்திருக்கிறார்கள், 146 பேர் காயமடைந்திருக்கிறார்கள். அவர்களுக்கு எதுவும் செய்யவில்லை. தங்களை பாதுகாக்க முடியும் என்ற நினைப்பில் வழக்கு போட்டிருக்கிறார்கள். ஆனால் இந்த இடைக்கால தீர்ப்பு இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது. இதெல்லாம் தெரியாமல் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்’’ என்கிறார் வில்சன்.
திமுகவின் வழக்கறிஞர் வில்சன் சிபிஐ விசாரணையால் இறந்தவர்களுக்கு எந்த நன்மையையும் கிடைக்கப்போவதில்லை என்கின்றார். அப்படியானால் அதற்கு நிகரான மற்ற விசாரணைக்குழுக்களால் இறந்தவர்களுக்கு நன்மைகள் கிடைத்து விடுமா?
‘‘இந்த தீர்ப்பிக்குப் பிறகு, ஏற்கனவே தமிழ்நாடு அரசு சார்பில் அமைக்கப்பட்ட அருணா ஜெகதீசன் ஆணையம் அப்படியே செயல்படும். தமிழக அரசின் சிறப்பு புலனாய்வு குழு இதுவரை மேற்கொண்ட விசாரணையை அப்படியே சிபிஐக்கு மாற்றிவிடும்." எனக் கூறியுள்ளார் வில்சன்.
அருணா ஜெகதீசன் ஆணையம் தமிழக அரசால் அமைக்கப்பட்டது. உயர்நீதிமன்றத்தின் உத்தரவால் போடப்பட்டது அல்ல. அருணா ஜெகதீசன் ஆணையத்தால் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரிக்க முடியும். ஆனால், சிபிஐ விசாரணை என்பது வேறு. எஸ்.ஐ.டி குழு இதுவரை மேற்கொண்ட விசாரணையை அப்படியே சிபிஐக்கு மாற்றி விடும் என்று கூறுகிறார். ஆனால் அதை அப்படியே சிபிஐ ஏற்றுக்கொண்டு அதிலிருந்து விசாரணையை ஆரம்பிக்குமா? கிடையாது. விசாரணையை மட்டுமே ஒப்படைக்கக் கூறியுள்ளது.
திமுக வழக்கறிஞர் வில்சன் திமுகவின் மூத்த வழக்கறிஞராகவும், 2019 முதல் மாநிலங்களவை உறுப்பினராகவும் செயல்பட்டு வருபவர். தமிழ்நாடு அரசின் முன்னாள் கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞராகவும், இந்தியாவின் கூடுதல் சோலிசிட்டர் ஜெனரலாகவும் பணியாற்றியவர். திமுக சார்பாக பல முக்கிய வழக்குகளில் வாதாடியவர் என்றாலும், அவரது சில செயல்பாடுகள், வழக்குகள் தோல்வியையே தழுவியுள்ளன. முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்தபோது மெரினாவில் அடக்கம் செய்ய சட்ட ரீதியாக வெற்றி பெற்றுத்தந்தார் என்பது மட்டுமே திமுகவினர் கொண்டாடப்படக் கூடிய வழக்காக உள்ளது. திமுகவின் சட்டப் போராட்டங்கள் பெரும்பாலும் பின்னடைவுகளையே சந்தித்து வருகின்றன.
2022 தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் இலவசங்கள் வழங்குவதை தடுக்க வேண்டும் என்ற பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்தபோது, திமுக சார்பாக வாதாடிய வில்சன், தலைமை நீதிபதி என்.வி. ரமணாவால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். நீதிமன்றம் திமுகவின் இலவச திட்டங்களை ‘வாக்கு வாங்கும் தந்திரம்’ என்று கூறி, கட்சிகளின் நிதி விவரங்களை வெளியிட வேண்டும் என்று கூறியது. வில்சனின் வாதங்கள் ஏற்கப்படவில்லை.
வன்னியர் இட ஒதுக்கீடு வழக்கில் வன்னியர்களுக்கு 10.5% உள்பிரிவு ஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திமுக அரசு சார்பாக வாதாடினார் வில்சன். நீதிமன்றம், 50% ஒதுக்கீடு வரம்பை மீறியதாகக் கூறி, தமிழ்நாடு அரசின் அரசாணையை ரத்து செய்தது. இது சமூக நீதி, இட ஒதுக்கீட்டு அரசியலில் திமுகவுக்கு பின்னடைவாக மாறியது.
2024-ல் மதுரை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில், நீதிபதி விக்டோரியா கௌரியின் முந்தைய இடைக்கால உத்தரவை மேற்கோள் காட்டி வாதாடிய வில்சன், நீதிபதி ஆர்.சுப்ரமணியனா கடுமையாக கண்டிக்கப்பட்டார். நீதிபதி, "இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை" என்று கூறி, வழக்கை தலைமை நீதிபதிக்கு அனுப்பினார். வில்சன் வருத்தம் தெரிவித்தாலும், இது நீதிமன்ற அவமானம் என்று வழக்கறிஞர்கள் சங்கம் தலைமை நீதிபதியிடம் புகார் செய்தது. வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டது.
கரூர் நெரிசல் சம்பவத்தில், உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணை உத்தரவிட்டபோது, வில்சன் செய்தியாளர்களிடம் "இது இடைக்கால தீர்ப்பு; நீதிமன்றம் ரத்து செய்யலாம்" என்று கூறியுள்ளார். ஆனால், திமுகவின் வாதங்கள் ஏற்கப்படவில்லை என்பதே உண்மை. இவையெல்லாம் வில்சனின் சட்ட வாதங்களின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது, முக,ஸ்டாலினையும், திமுகவையும் சமாளிக்க உண்மைக்கு அருகாமையில் இல்லாமல் கம்பிகட்டப் பார்க்கிறார் வில்சன்’’ என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.