MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • ரகசியம் காத்த தவெக..! உடைந்த சஸ்பென்ஸ் - பிளான் B-யை ஆக்டிவேட் செய்த விஜய்..!

ரகசியம் காத்த தவெக..! உடைந்த சஸ்பென்ஸ் - பிளான் B-யை ஆக்டிவேட் செய்த விஜய்..!

விக்கிரவாண்டி மாநாட்டிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றது. அந்த ராம்ப்வாக் மேடையில் விஜய் நடந்தபோது செல்ஃபி எடுக்க முண்டியடித்தார்கள்.  அப்போது சலசலப்புகள் ஏற்பட்டது. இதை தவிர்ப்பதற்காகவே விஜய் வருகையை மிக ரகசியமாக வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

2 Min read
Author : Thiraviya raj
Published : Aug 20 2025, 03:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Image Credit : Asianet News

மதுரையில் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நாளை நடைபெறும் நிலையில் விஜயின் வருகை மற்றும் தங்குமிடம் ஆகியவை ரகசியம் காக்கப்பட்டு வருகின்றது.

கடந்த முறை விக்கிரவாண்டியில் நடைபெற்ற தவெகவின் முதல் மாநாட்டின்போது விஜய் எப்படி மாநாட்டு திடலுக்கு வந்தார்? அவர் எங்கு தங்கியிருந்தார்? என்கிற விவரங்கள் அனைத்துமே மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.

தவெக-வின் இரண்டாவது மாநில மாநாடு நாளை மதுரை, பாரப்பத்தியில் நடைபெறும் நிலையில் விஜயின் வருகைக்கான இரண்டு திட்டங்களை நிர்வாகிகள் திட்டமிட்டு இருந்தார்கள். முதல் திட்டமாக சென்னையில் இருந்து விமானம் மூலமாக மதுரை வந்து அங்கிருந்து மாநாட்டு திடலுக்கு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதேபோன்று மதுரை பாரப்பத்தியில் நடக்கும் மாநாட்டிலிலும் விஜயின் வருகை மிக ரகசியமாக வைப்பதற்காக இரண்டு திட்டங்களை வைத்திருந்தார்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
Image Credit : Asianet News

முதல் திட்டம் சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக மதுரைக்கு வருவது. இரண்டாவது சாலை மார்க்கமாகவே சென்னையில் இருந்து வருவது. ஆனால், மதுரை விமான நிலையத்தில் இருந்து தங்க உள்ள வீட்டிற்கு செல்லும் வழியில் கூட்டம் சேர்ந்து விடும் என்பதால் சாலைமார்க்கமாகவே காரில் வந்து தங்கும் இடத்திற்கு சென்றுவிட்டார் விஜய். தற்போது அவர் மதுரையில் ரகசியமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தனிவீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

அங்கிருந்து மிக பாதுகாப்பாக மாநாடு திடலுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை திட்டமிட்டு இருக்கிறார்கள். இதற்கு முக்கியமான சில காரணங்களை அவர்கள் தெரிவிக்கிறார்கள். பல்வேறு மாவட்டங்களில் இருந்து, குறிப்பாக வெளி மாவட்டங்களில் இருந்து மாநாட்டுக்கு வரக்கூடிய பல்லாயிரக்கணக்கான தொண்டர்களின் முழு எண்ணமும் விஜயை நேரில் பார்த்து விட வேண்டும், அவருடன் ஒரு செல்பியாவது எடுத்துக் கொள்ள வேண்டும், அவரை தொட்டு விட வேண்டும் என்கிற எண்ணத்தில் அவரது ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

Related Articles

Related image1
இந்திய கூட்டணியின் தவறான தேர்வு..? சுதர்சன் ரெட்டியின் தப்புத் தாளங்கள்..! பகீர் கிளப்பும் பாஜக..!
33
Image Credit : X

விக்கிரவாண்டி மாநாட்டிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றது. அந்த ராம்ப்வாக் மேடையில் விஜய் நடந்தபோது செல்ஃபி எடுக்க முண்டியடித்தார்கள். மாநாட்டு பந்தல் மீது ஏறினார்கள். அப்போது சலசலப்புகள் ஏற்பட்டது. இதை தவிர்ப்பதற்காகவே விஜய் வருகையை மிக ரகசியமாக வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது மதுரையில் இருக்கும் விஜய் அங்கிருந்து சாலை மார்க்கமாகவே அழைத்து வருவதற்கான பணிகளை திட்டமிட்டு இருக்கிறார்கள். நாளை நடைபெற உள்ள மாநாட்டு அவர் தங்கி இருக்கும் வீட்டில் இருந்து எப்போது மாநாட்டுத் திடலுக்கு வருவார் என்பதும் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.

About the Author

TR
Thiraviya raj
டிவி.கே. விஜய்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Jantar Mantar Protest: 'ஹிட்' அடிச்சாலும் சாகாத கரப்பான் பூச்சிகள் நாங்கள்! - தலை நகரில் போராட்டம்
Recommended image2
Latha Rajinikanth: அண்ணாமலைக்கு போட்டியாக புதிய இயக்கம்? அரசியலில் குதிக்கிறாரா லதா ரஜினிகாந்த்? பரபரக்கும் தமிழக அரசியல் களம்.!
Recommended image3
Annamalai: தமிழக அரசியலில் யாரும் செய்யாத சாதனை.! அண்ணாமலை கட்சி ஆரம்பித்த சிறிது நேரத்தில் எத்தனை லட்சம் பேர் இணைந்துள்ளார்கள் தெரியுமா?
Related Stories
Recommended image1
இந்திய கூட்டணியின் தவறான தேர்வு..? சுதர்சன் ரெட்டியின் தப்புத் தாளங்கள்..! பகீர் கிளப்பும் பாஜக..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved