- Home
- Politics
- நான் வெற்றி பெற்றால் வக்ஃப் மசோதாவை குப்பைத் தொட்டியில் வீசி எறிவேன்..! தேஜஸ்வி யாதவ் தெனாவெட்டு வாக்குறுதி..!
நான் வெற்றி பெற்றால் வக்ஃப் மசோதாவை குப்பைத் தொட்டியில் வீசி எறிவேன்..! தேஜஸ்வி யாதவ் தெனாவெட்டு வாக்குறுதி..!
தமிழகத்தில் துணை முதலமைச்சரான உதயநிதி, தேர்தல் வாக்குறுதியில் ‘‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட்டை ரத்து செய்வோம்’’ என வாக்குறுதி அளித்தார். திமுக ஆட்சியே முடியப்போகிறது.

பீகாரில் அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளதையொட்டி, இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் கதிஹார், கிஷன்கஞ்ச், அராரியா மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், ‘‘பீகாரில் இந்திய கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வக்ஃப் திருத்த சட்டம் குப்பைத் தொட்டியில் வீசப்படும்" என்ற தனது வாக்குறுதியை மீண்டும் வலியுறுத்தினார். தனது தந்தை, ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவின் சாதனையைப் பற்றி குறிப்பிட்ட தேஜாஷ்வி, முந்தைய லாலு-ராப்ரி நிர்வாகங்கள் ஆர்எஸ்எஸ் மற்றும் வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக உறுதியாக நின்றது. முதல்வர் நிதிஷ் குமார் அந்த சக்திகளை ஆதரிக்கிறார். பாஜக மாநிலம் மற்றும் நாடு முழுவதும் வகுப்புவாத வெறுப்பைப் பரப்பி வருகிறது என்று அவர் குற்றம் சாட்டினார்.
அரசியலமைப்பு, ஜனநாயகம் மற்றும் வகுப்புவாத நல்லிணக்கத்தின் பரந்த பாதுகாப்பின் ஒரு பகுதியாக மத்திய சட்டத்தை ரத்து செய்வோம். தனது கூட்டணி ஆட்சி அமைத்தால், சீமாஞ்சல் மேம்பாட்டு ஆணையத்தை அமைப்பதாகவும், உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகம், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மையத்தை நிறுவுவதாகவும் அவர் உறுதியளித்தார்.
பல எதிர்க்கட்சிகள், முஸ்லிம் அமைப்புகளின் எதிர்ப்பு, ஆட்சேபனைகளுக்கு மத்தியில் வக்ஃப் (திருத்தம்) சட்டம் ஏப்ரல் 2025-ல் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. இந்த மாற்றங்கள் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும், வக்ஃப் நிர்வாகத்தில் ஊழலைக் கட்டுப்படுத்தும் என்று அரசு எடுத்துரைத்தது. இந்தத் திருத்தங்கள் வக்ஃப் சொத்துக்கள் மீதான மாநில மேற்பார்வையை விரிவுபடுத்துவதாகவும், சமூக உரிமைகளில் தலையிடக்கூடும் என்றும் விமர்சகர்கள் வாதிட்டனர். தேஜஷ்வி முதலமைச்சரானால் "வக்ஃப் மசோதா உட்பட அனைத்து மசோதாக்களும் கிழிக்கப்படும்" என்று ஆர்ஜேடி எம்.எல்.சி முகமது காரி சோஹைப் சனிக்கிழமை கூறியபோது சர்ச்சை வெடித்தது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை குறிவைத்து பேசிய தேஜாஸ்வி, ‘‘பாஜகவின் தேசியத் தலைவர்களின் அச்சுறுத்தல்கள் என்னைத் தடுக்காது. நான் போராடுவேன், நான் வெற்றி பெறுவேன். நாங்கள் பீகாரிகள், உண்மையான பீகாரிகள். நாங்கள் வெளியாட்களுக்கு பயப்படுவதில்லை" என்று அவர் அறிவித்தார்.
தமிழகத்தில் துணை முதலமைச்சரான உதயநிதி, தேர்தல் வாக்குறுதியில் ‘‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட்டை ரத்து செய்வோம்’’ என வாக்குறுதி அளித்தார். திமுக ஆட்சியே முடியப்போகிறது. ஆனால் நீட்டை ரத்து செய்வதாக அவர் சொன்ன வாக்குறுதிக்கு புல்லைக்கூட பிடுங்கவில்லை. தேஜஸ்வியின் வக்பு மசோதா வாக்குறுதியும் வெற்று வாக்குறுதியாகவே இருக்கும். மத்திய அரசு கொண்டு வந்த ஒரு மசோதாவை இவர்கள் மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தபிறகு நீக்க முடியுமா? இவர்களுக்கு அதிகாரம் இருக்கிறதா என்பதை உணர்ந்து வாக்குறுதிகளை அளிக்க வேண்டும். இவையெல்லாம் மக்களை அடி முட்டாளாக நினைத்து அளிக்கும் வாக்குறுதிகள் என்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள்.