- Home
- Politics
- வழிக்கு வராத விஜயை கைமா பண்ணிடுங்க..! வெறியோடு வந்த உத்தரவு..! திமுக- சீமானுடன் எடப்பாடி எடுத்த ஆர்டிஎக்ஸ் வேட்டு..!
வழிக்கு வராத விஜயை கைமா பண்ணிடுங்க..! வெறியோடு வந்த உத்தரவு..! திமுக- சீமானுடன் எடப்பாடி எடுத்த ஆர்டிஎக்ஸ் வேட்டு..!
விஜயை கூட்டணிக்கு இழுக்க அதிமுக பல வகைகளிலும் இறங்கி வந்துவிட்ட நிலையிலும்கூட, விஜய் மதிக்காமல் புறந்தள்ளியது அதிமுக தலைமையைத் தாண்டி தொண்டர்கள் மத்தியிலும் எதிரொலித்துள்ளது.

தங்களோடு விஜய் எப்படியும் கூட்டணிக்கு வந்து விடுவார் என மலைபோல நம்பி இருந்த அதிமுகவுக்கு தவெகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் மூலம் பெறும் ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் விரக்தியாகி தற்போது விஜய் மீது விமர்சனத்தை கக்கத் தொடங்கியுள்ளது அதிமுக. விஜய் கட்சி தொடங்கியதில் இருந்தே அவரது சில நகர்வுகள் அதிமுகவுடன் கூட்டணிக்கான அச்சாரமா? என்ற கேள்வியை எழுப்பத் தூண்டிக்கொண்டே இருந்தது. அதிமுக மீது விமர்சனத்தை தவிர்த்தது, எம்.ஜி.ஆரை தூக்கிப் பிடித்து கொண்டாடியது என விஜய்யின் செயல்பாடுகள் அதிமுக மீது அவருக்கு சாஃப்ட் கார்னர் இருப்பதை காட்டிக் கொண்டே இருந்தது.
அதிமுகவுடன் விஜய் கூட்டணிக்கு செல்ல வாய்ப்பு என லாஜிக்குகளையும் மீறி எவ்வளவோ பேசப்பட்டு வந்தாலும், விஜய் தரப்பில் ஆரம்பத்தில் இருந்து மௌனமே பதிலாக இருந்தது. கூட்டணிக்கு கொண்டுவர முயன்ற அதிமுக, கரூர் துயர சம்பவத்தை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டது. கரூர் விவகாரத்தில் திமுக அரசுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி பேசியது தொடங்கி, சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது வரை எல்லாமே விஜய்க்கு ஆதரவாகவே இருந்தது. ஓவாயன் அவலுக்கு பறந்த கதையாக அதிமுகவின் பிரச்சார கூட்டங்களில் தவெக கொடி பறந்ததை பார்த்து எடப்பாடி பழனிசாமி உற்சாகமடைந்து ‘‘பிள்ளையார் சுழி போடப்பட்டு விட்டது’’ எனப் பேசியதும் அதிமுக கூட்டணிக்கு தவெக சம்மதித்து விட்டது என்ற பிம்பத்தை தான் கொடுத்தது.
முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், ராஜேந்திர பாலாஜி போன்றவர்கள் ‘‘மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் தவெகவை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது’’ என்றெல்லாம் கூறி விஜயை கூட்டணிக்கு இழுக்க முயன்றனர். தவெக பொடுக்குழுவில் விஜயை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி, அவர் தலைமையில் தேர்தலை சந்திக்க சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுக-தவெக இடையே தான் போட்டியே என்ற விஜயின் பேச்சும் அதிமுகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. கரூர் விவகாரத்தில் அதிமுக கொடுத்த ஆதரவை உதாசீனப்படுத்திய விஜயின் பேச்சு அதிமுகவினருக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்தது.
விஜய்யை கூட்டணிக்குள் கொண்டுவர எவ்வளவோ எடப்பாடி பழனிசாமி முயற்சி செய்தும் பலன் கிடைக்காமல் போனது பின்னடைவாக பார்க்கப்பட்டது. ஏற்கனவே தங்கள் தலைமையில் தான் கூட்டணி என விஜய் பலமுறை அறிவித்திருந்தும்கூட, கரூர் சம்பவம் அவரது நிலைப்பாட்டை மாற்றி இருக்கும் என யோசித்துதான் அதிமுக காத்திருந்தது. ஆனால் அந்த காத்திருப்புக்கு பலன் இல்லாமல் போகவே, தற்போது விஜயை அதிமுக விமர்சிக்க தொடங்கியிருக்கிறது. கிருஷ்ணகிரியில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி ‘‘புதிதாக உருவாக்கி இருக்கும் கட்சி மாய பிம்பத்தை ஏற்படுத்தி, மக்களை சந்திக்காமல், மக்களுடன் நேரடி தொடர்பில் இல்லாமல் பெரிய கட்டமைப்பை உருவாக்கியது போல தங்களை முதன்மைப்படுத்திக் கொள்கிறது’’ என விஜய்யின் பெயரை குறிப்பிடாமல் விமர்சித்தார்.
அதேபோல திண்டுக்கல்லில் பேசிய முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும் ‘‘10 படம் ஓடிவிட்டாலே முதலமைச்சர் ஆகிவிடலாம் என்ற மாய எண்ணத்தில் இருக்கிறார்’’ எனக் கூறினார். புதுக்கட்சி தொடங்கியதால் விஜயை வாழ்த்தினோம். ஆட்சி பொறுப்புக்கு வரும் அளவுக்கு இன்னும் பக்குவமும் பட்டறிவும் விஜையிடம் இல்லை என்று விமர்சித்து வருகின்றனர். விஜய் குறித்து பாசமாக பேசி, அரவணைத்த அதிமுக தற்போது கூட்டணிக்கு மறுப்பதால் விஜய் மீது எழுந்திருக்க வேண்டிய எதிர்ப்பை, அதிமுக கொடுத்த மிதமான ஆதரவு தான் மட்டுப்படுத்தியதாக அதிமுகவினரே கூறி வந்தனர். மென்மையான போக்கை கையாண்டால் விஜய் கூட்டணிக்கு வருவார் என்று அதிமுக போட்ட கணக்கு பலிக்காமல் போக, தற்போது விமர்சிக்க தொடங்கியுள்ளது.
கூட்டணிக்கு வர மறுத்ததைத் தாண்டி விஜயை அதிமுக விமர்சிக்க இன்னொரு காரணமும் இருப்பதாக சொல்லப்படுகிறது. விஜயை கூட்டணிக்கு இழுக்க அதிமுக பல வகைகளிலும் இறங்கி வந்துவிட்ட நிலையிலும்கூட, விஜய் மதிக்காமல் புறந்தள்ளியது அதிமுக தலைமையைத் தாண்டி தொண்டர்கள் மத்தியிலும் எதிரொலித்துள்ளது. இந்த நிலைமையை சரி செய்யவே தற்போது விஜய் எதிர்ப்பை அதிமுக கையில் எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. திமுக எதிர்ப்பு வாக்குகளை எப்போதுமே அதிமுகதான் அறுவடை செய்து வந்தது என்ற நிலையில், விஜயின் டார்கெட்டும் திமுக எதிர்ப்பு வாக்குகளை குறி வைத்துதான் இருக்கிறது. ஆகையால் விஜயை பலவீனப்படுத்தி காட்டும் வகையில் அவர் மீது விமர்சனத்தை முன்வைக்க அதிமுக முடிவு செய்திருக்கும் எனவும் சொல்கிறார்கள்.
அந்த வகையில் விஜயின் தமிழக வெற்றி கழகத்திற்கு பல முனைகளில் இருந்து விமர்சனக்கனைகள் வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் விஜயை கடுமையாக விமர்சித்து வருகின்றன. நாம் தமிழர் கட்சியின் சீமானும்கூட விஜயை கடுமையாக எதிர்த்து வரும் சூழலில் தற்போது அதிமுகவும் விஜய் எதிர்ப்பை கையில் எடுத்துள்ளது. பல முனைகளில் இருந்து விமர்சனங்கள் பல தொடங்கி இருக்கும் நிலையில் விஜய்யும் தமிழக வெற்றிக்கழகமும் எப்படி எதிர்கொள்ளும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.