- Home
- Politics
- கிட்னி திருட்டு வழக்கை விசாரணைக்கே ஏற்காத உச்சநீதிமன்றம்..! திமுக அரசுக்கு பெரும் பின்னடைவு..!
கிட்னி திருட்டு வழக்கை விசாரணைக்கே ஏற்காத உச்சநீதிமன்றம்..! திமுக அரசுக்கு பெரும் பின்னடைவு..!
நாமக்கல், திருச்சி, ஈரோடு, சேலம் போன்ற மாவட்டங்களில் புரோக்கர்கள் மூலம் ஏழை விசைத்தறி தொழிலாளர்களை மூளைச்சலவை செய்து, அவர்களின் சிறுநீரகங்களை சட்டவிரோதமாக வாங்கி விற்றதாக புகார் எழுந்தது.

கிட்னி திருட்டு வழக்கை விசாரிக்க சிறப்புக் குழு
நாமக்கல் கிட்னி திருட்டு வழக்கை விசாரிக்க சிறப்புக் குழு அமைக்கும் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம தாமாக முன்வந்து, 4 ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு விசாரணை குழுவை நாமக்கல் கிட்னி திருட்டு , விற்பனை குற்றங்களை விசாரிக்க நியமித்திருந்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு இந்த 4 பேர் விசாரணைக்குழுவை ரத்து செய்ய கோரி உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
ஐ.ஜி பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழு தமிழகத்தில் நடந்த கிட்னி திருட்டு குறித்து விசாரிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இவ்வழக்கில் தலையிட முடியாது என்றும், சிறப்பு குழு விசாரணைக்கு தடையில்லை என்றும் உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, என்.வி.அஞ்சரியா அமர்வு தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது. "உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை" எனக் கூறி, சிறப்பு குழு விசாரணையைத் தொடர உத்தரவிட்டது.
அதிகாரிகளை மாற்ற வேண்டும்
கிட்னி திருட்டு வழக்கில் அனைத்து சாராம்சங்களையும் ஆராய்ந்து உயர் நீதிமன்றம் எஸ் ஐ டி அமைத்துள்ளது. உயர்நீதிமன்றம் கூறுவது போல் 200 கிலோமீட்டர் 140 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அதிகாரிகளை வைத்து விசாரித்தால் நிர்வாக சிக்கல் ஏற்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அருகில் இருக்கக்கூடிய மாவட்டங்களில் உள்ள அதிகாரிகளின் பெயரை வழங்குவதாகவும், தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்திருந்தது. அருகாமையில் உள்ள மாவட்ட அதிகாரிகளின் பெயர்களை நாங்கள் ஏற்க மாட்டோம் என உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்று என்றால் ஏன் உச்ச நீதிமன்றத்தை தமிழ்நாடு அரசு அணுகவில்லை? என்றும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பிள்ளது.
சிறப்பு விசாரணை குழுவை மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் எந்த விதத்திலும் ஏற்க மாட்டோம். விசாரணை குழுவை மாற்ற வேண்டும் என்றால் நீங்கள் சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத்தையே அணுகி நீங்கள் விவாதம் செய்திருக்கலாம். இந்த வேலையில் சிறப்பு விசாரண குழுவை ஏற்க மாட்டோம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதே வேளை சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக கூறியுள்ள கருத்துக்களை நீக்குவதாகவும் தெரிவித்துள்ளது.
திமுக அரசுக்கு பெரும் பின்னடைவு
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு ஒரு மாதம் ஆகியும் விசாரணையை தொடங்காமல் தாமதித்து வந்த திமுக அரசுக்கு இது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. நாமக்கல், திருச்சி, ஈரோடு, சேலம் போன்ற மாவட்டங்களில் புரோக்கர்கள் மூலம் ஏழை விசைத்தறி தொழிலாளர்களை மூளைச்சலவை செய்து, அவர்களின் சிறுநீரகங்களை சட்டவிரோதமாக வாங்கி விற்றதாக புகார் எழுந்தது. நாமக்கல் மாவட்டத்தின் குமாரப்பாளை பகுதியில் வசிக்கும் ஏழை விசைத்தறி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் போலி ஆவணங்கள் மூலம் தனியார் மருத்துவமனைகளில் சிறுநீரக தானம் செய்ய வைக்கப்பட்டனர். மண்ணச்சநல்லூர் தி.மு.க. எம்எல்ஏவுக்கு சொந்தமான தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை, சேலத்தில் போலி ஆவணங்கள் பயன்படுத்தி சிகிச்சை செய்த மருத்துவர்கள், இடைத்தரகர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, தமிழக அரசின் செயல்பாட்டுக்கு அதிருப்தி தெரிவித்து, தென்மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்க உத்தரவிட்டது. முதல் அறிக்கை செப்டம்பர் 24க்குள் சமர்ப்பிக்க உத்தரவிட்டது. தமிழக அரசு, இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.