- Home
- Politics
- அமித் ஷாவிடம் அந்நியன்..! மோடியிடம் அம்பி..! கிலி கொடுக்கும் இபிஎஸ்..! கதி கலங்கும் திமுக அமைச்சர்கள்..!
அமித் ஷாவிடம் அந்நியன்..! மோடியிடம் அம்பி..! கிலி கொடுக்கும் இபிஎஸ்..! கதி கலங்கும் திமுக அமைச்சர்கள்..!
இனி பாஜகவின் கவனம் தமிழ்நாடு மீதும், மேற்கு வங்கம் மீதும் இருக்கும் என்றும், டிசம்பர் மாதத்தில் திமுக அமைச்சர்கள் மீது அடுத்தடுத்து நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என்றும் பாஜக மேலிடம் உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு, சட்டமன்றத் தேர்தலுக்கு பல மாதங்களுக்கு முன்பே அதிரிபுதிரியாக பாஜகவுடன் மீண்டும் இசைந்து கூட்டணி அமைத்தது அதிமுக. அப்போதே அமித்ஷாவிடம், எடப்பாடி பழனிசாமி சில கோரிக்கைகளை வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. அதில் முக்கியமானது திமுக அமைச்சர்கள் மீதுள்ள வழக்குகளை துரிதப்படுத்த வேண்டும். தேர்தல் நெருங்கும் சமயத்தில் வருமான வரித்றை, சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகள் மூலமாக அழுத்தம் கொடுத்து திமுகவினரின் தேர்தல் வேலைகளை முடக்க வேண்டும் என்பதுதான் எடப்பாடி பழனிசாமியின் அழுத்தமான கோரிக்கையாக இருந்து வந்தது. அப்போது தலையசைத்து இருக்கிறார் அமித் ஷா. ஆனால், அதன்படி இதுவரை திமுக அமைச்சர்கள் மீது எந்த நடவடிக்கையும் பாயாமல் இருப்பதால் எடப்பாடி பழனிசாமி அப்செட் ஆகி இருப்பதாகக் கூறப்படுகிறது.
இப்போதும் அந்நியனாக மாறி எடப்பாடி பழனிசாமியின் அதிருப்தியை பாஜக டெல்லி தலைமைக்கு அதிமுக தொடர்ந்து தெரியப்படுத்தி வந்ததால் பீகார் தேர்தல் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில், இனி பாஜகவின் கவனம் தமிழ்நாடு மீதும், மேற்கு வங்கம் மீதும் இருக்கும் என்றும், டிசம்பர் மாதத்தில் திமுக அமைச்சர்கள் மீது அடுத்தடுத்து நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என்றும் பாஜக மேலிடம் உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கோவை வந்த பிரதமர் மோடியை அதிமுக பொதுச்செயலாளரும், என்.டி.ஏ கூட்டணியின் தமிழக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி விமான நிலையத்தில் வரவேற்றார். அப்போது மோடியிடம் மேலும் பல கோரிக்கைகளை அம்பியாக மாறி எடப்பாடி பழனிசாமி மனுவாக கொடுத்திருக்கிறார் என்கிறார்கள். அவை எல்லாமே தமிழக நலன் சார்ந்த கோரிக்கைகள். நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 22 சதவிகிமாக உயர்த்தி அறிவிக்க வேண்டும். தமிழக மீனவர்களை இலங்கை சிறைகளில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தமிழக நலன் சார்ந்த கோரிக்கைகளை கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால், பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் அதிமுகவால் தமிழகத்திற்கு என்னால் என்னென்னல்லாம் வாங்கி கொடுக்க முடிந்தது என்று தேர்தல் நேரத்தில் பிரச்சாரம் செய்ய வசதியாக இருக்கும். ‘‘எடப்பாடியாரின் ஆட்சிக் காலம். தமிழ்நாட்டின் வளர்ச்சிக் காலம்’’ என மார்தட்டி சொல்லலாம் என்று எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார். அதற்காகத்தான் இந்த கோரிக்கை மனுவை மோடியிடம் கொடுத்துள்ளார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான வட்டாரத்தினர்.
