பாஜகவின் ஸ்மார்ட் மூவ்..! பாடகி மைதிலியால் பெரும் பரபரப்பு..! கதறும் காங்கிரஸ்..!
என்.டி.ஏ கூட்டணியின் பீகார் பிரச்சாரத்திற்கு பாடகி மைதிலி தாகூர் மிகப்பெரிய ஊக்கமாக இருப்பார். மைதிலி அவர் சார்ந்த சமூகத்தின் வாக்குகளை ஒருங்கிணைப்பதன் மூலம் என்.டி.ஏ கூட்டணி கூடுதலாக 5 முதல் 8 இடங்களை மேலும் கைப்பற்ற முடியும்.

பாஜகவில் இணைந்த பாடகி மைதிலி தாகூர்
பீகாரின் புகழ்பெற்ற நாட்டுப்புற, பாரம்பரிய பாடகி மைதிலி தாக்கூர் இப்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ளார். அவர் பாஜகவில் இணைந்தார். அவர் பீகார் சட்டமன்றத் தேர்தலில் தர்பங்காவில் உள்ள அலிநகர் தொகுதியில் போட்டியிடலாம். இதனால், அலிநகர் தொகுதியில் தற்போதைய எம்எல்ஏ மிஷ்ரிலால் யாதவின் சீட் கொடுக்கப்படாதது கிட்டத்தட்ட உறுதி.
என்.டி.ஏ கூட்டணியின் பீகார் பிரச்சாரத்திற்கு பாடகி மைதிலி தாகூர் மிகப்பெரிய ஊக்கமாக இருப்பார் என்று கூறப்படுகிறது. அவர் 40 தொகுதிகளில் நட்சத்திர பிரச்சாரகராக பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும். 2020 முதல் என்டிஏ இங்கு 20 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மைதிலி அவர் சார்ந்த சமூகத்தின் வாக்குகளை ஒருங்கிணைப்பதன் மூலம் என்.டி.ஏ கூட்டணி கூடுதலாக 5 முதல் 8 இடங்களை மேலும் கைப்பற்ற முடியும்.
காங்கிரஸ் கடும் விமர்சனம்
மைதிலி தாக்கூர் பாஜகவில் இணைந்தது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுரேந்திர ராஜ்புத், ‘‘மைதிலி தாக்கூர் எந்தக் கட்சியில் சேர்ந்தாலும் பாட்டு மட்டும்தான் பாடப்போகிறார். முன்பு, அவர் கடவுளை வணங்கினார். ஆனால் இப்போது அவர் பிரதமர் நரேந்திர மோடி, மற்றும் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீதான பக்தியில் மூழ்கிவிடுவார். கலாச்சார மரபுகளுக்கு உண்மையிலேயே சேவை செய்பவர்கள் யார்? அரசியல் மேடையில் இருந்து யார் பக்தியைக் காட்டுகிறார்கள் என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.
மைதிலி தாகூர் குடும்பப் பின்னணி
மைதிலி தாகூர் ஜூலை 25, 2000 அன்று பிறந்தவர். அவருக்கு தற்போது 25 வயது. பீகாரின் மதுபனியைச் சேர்ந்தவர். ஆனால் டெல்லியின் நஜாப்கரில் நீண்ட காலமாக வசித்து வந்தார். அவரது தந்தை வேலைக்காக டெல்லிக்கு வந்தார். ஆனால், நீண்ட காலமாக வேலை இல்லாததால், குடும்பம் நிதி நெருக்கடியை எதிர்கொண்டது. அவரது தாயார் பூஜா தாகூர் குழந்தைகளை பார்த்துக் கொண்டார்.. மைதிலி தாக்கூருக்கு ரிஷப் தாக்கூர், ஆய்ச்சி என்ற இரண்டு சகோதரர்கள் உள்ளனர்.
இசையில் சாதித்த மைதிலி தாகூர்
குடும்பப் பிரச்சினைகள் மற்றும் இசைக்காக தனது முழு நேரத்தையும் ஒதுக்க வேண்டிய அவசியம் காரணமாக, மைதிலி தாக்கூர் 5 ஆம் வகுப்பு வரை வீட்டிலேயே படித்தார். பின்னர், 12-13 வயதில், அவர் ஒரு எம்.சி.டி பள்ளியில் சேர்க்கப்பட்டார். ஆனாலும், மைதிலியின் இசைத் திறமை அவருக்கு தனியார் பள்ளியான பால் பவன் சர்வதேச பள்ளியில் உதவித்தொகையைப் பெற்றுத் தந்தது.
மைதிலி தாக்கூர் தனது தந்தை, தாத்தாவிடமிருந்து இசைப் பயிற்சி பெற்றார். சிறு வயதிலிருந்தே, அவர் பாரம்பரிய இசை, நாட்டுப்புற இசையில் பயிற்சி பெற்று வருகிறார். பல வருட பயிற்சி அவரை இசையில் மிகவும் வலிமையாக்கியுள்ளது. இப்போது, அவருக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை.