- Home
- Politics
- திமுகவுக்கு ஜால்ரா..! நாம் தமிழரிலிருந்து கொத்து கொத்தாக விலகும் சீமானின் வெறித்தன ஆதரவாளர்கள் ..!
திமுகவுக்கு ஜால்ரா..! நாம் தமிழரிலிருந்து கொத்து கொத்தாக விலகும் சீமானின் வெறித்தன ஆதரவாளர்கள் ..!
தற்போது சீமானின் அரசியல் நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றம், திமுகவுக்கு மறைமுகமான ஆதரவு நாதக ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பல மாவட்ட செயலாளர்கள், தொண்டர்கள், தமிழ்த் தேசியவாதிகள் கட்சியிலிருந்து விலகத் தொடங்கியுள்ளனர்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுகவை கடுமையாக விமர்சித்து வந்தார். ஈழத் தமிழர் இனப்படுகொலைக்கு திமுக தலைவர் கருணாநிதி ஆதரவாக இருந்ததாகக் கூறி, ‘திமுக என் வாழ்நாள் எதிரி’ என்று அடிக்கடி மேடைகளில் பேசி வந்தார்.
ஆனாலும், தற்போது சீமானின் அரசியல் நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றம், குறிப்பாக திமுகவுக்கு மறைமுகமான ஆதரவு நாதகவில் உள்ள ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பல மாவட்ட செயலாளர்கள், தொண்டர்கள், தமிழ்த் தேசியவாதிகள் கட்சியிலிருந்து விலகத் தொடங்கியுள்ளனர்.
ஜூலை மாதம் சீமான், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்த பின், சீமானின் பேச்சுகள் திமுக விமர்சனத்தை குறைத்து, திமுகவை மாயை என்று மட்டுமே விமர்சிக்கத் தொடங்கினார். இதைத் தொடர்ந்து, ஈழத் தமிழர் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் திமுக ஆதரவாக மாறி விட்டார் சீமான் என குற்றம் சாட்டி விலகுவது அதிகமாகி வருகிறது.
சமூக வலைதளங்களில் "ஈழத்தை மீட்பேன் என்று சொன்ன சீமான், திமுகவுடன் சேர்ந்து விஜய் எதிர்ப்பு அரசியல் செய்கிறார்" என்ற விமர்சனங்கள் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. சீமான் திமுகவின் "அனைத்துக் கட்சிக் கூட்டத்தை" புறக்கணித்தாலும், அவரது பேச்சுகள் திமுகவுக்கு மறைமுக ஆதரவாக உணரப்படுகின்றன. இதனால், பல மாவட்ட செயலாளர்கள், ஆதரவாளர்கள் கட்சியை விட்டு வெளியேறி வருகின்றனர்.
திமுகவுக்கு ஆதரவாகவும், திருமாவளவனுக்கு சப்போர்ட்டாகவும் பேசி வருவதால் ஏகப்பட்ட பேர் சீமான் மீதான விரக்தியால் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். இளைஞர்களின் மத்தியில் சீமான் மீதான நம்பிக்கை முற்றிலுமாக தகர்க்கப்பட்டு விட்டது. கட்சி வலுவடையும் நேரத்தில் சீமான் இப்படி பேசியிருக்கக்கூடாது எனக் கூறி வருகின்றனர்.
சமூகவலைதளங்களில் சீமானுக்கு ஆதரவாக வெறித்தனமாக செயல்பட்டு வந்தவர்கள்கூட சீமானை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கி உள்ளனர். அதில், ‘‘சீமான் அவர்கள் கூறிய அந்த ஒரு வார்த்தையால் கட்சிக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏராளமான இளைஞர்கள் கொத்து கொத்தாக வெளியேறி வருகின்றனர். கட்சி வலுவடையும் இந்நேரத்தில் சீமானின் இந்த பேச்சால் அந்த தலைவருக்கும் இவருக்கும் வித்தியாசமின்றி போனது’’ எனத் தெரிவித்து வருகின்றனர்.
இனியவள் ரஜினி என்பவரது பதிவில், ‘‘மீண்டும் நோட்டாவுக்கே திரும்பி செல்கிறேன். நாம் தமிழருக்கான ஆதரவு நிலைப்பாட்டிலிருந்து முற்றுமாக விலகுகிறேன். தமிழ் தேசிய ஆட்சியை அரியணை ஏற்றுவது மட்டுமே என் கடமையாக கருதி இந்த முடிவு. வன்மமும் கோபமும் கொண்ட தம்பிகளும் தங்கைகளும், அறமற்ற சிந்தனையோடு மாற்றி மாற்றி பேசும் தலைமையும், தமிழ் தேசிய சிந்தனையில் அவர்கள் இல்லை என்பதை வேதனையோடு உணர்த்துவதால்...
நல்லதொரு தமிழர் தேசிய கொள்கையோடு வரும் கட்சிக்காக காத்திருப்பதே அறம், என்ற முடிவோடு என் பாதையை நான் அமைத்துக் கொள்கிறேன். ஏனைய தமிழர்களை இழிவுபடுத்தும் தலைமைகள் சாபம். அகம்பாவம். புரளிகளுக்கு காது கொடுக்கும் எவரும் அருவெறுக்கத்தக்கவர். தான் என்ற சிந்தனையில் இருப்பவர் கேவலம். மாற்றுக்கருத்து உள்ளவரென்றால், எதிராளி என்று கட்டமைக்கும் மனப்பான்மை சுயநலமானது.
"இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்."
சுயநலம் மிக்கவர்கள் மத்தியில் பேருக்காக வாழ்வதைவிட, கொண்ட கொள்கையில் உறுதியாக தனியாக நிற்பது மேல். நம்பிக்கை உள்ளவர் என்னோடு பயணிக்கலாம். இல்லாதவர், விலகி கொள்ளலாம். தமிழ் தேசியம் என்று பேசிக்கொண்டு தமிழருக்கு ஒவ்வாத செயல்கள் அரங்கேறினால், என் எதிர்ப்பை காட்டாமல் இருக்கமாட்டேன்.
"மிகவும் நிதானத்தோடு, யோசித்து எடுத்த முடிவு இது." நேரத்திற்கு ஏற்றாற்போல் தன் நிலைப்பாட்டை மாற்றி கொண்டிருக்கும் எவரும் எனக்கு ஒவ்வாதவர்களே. தலைவர் பிரபாகரனின் வழியில் பிறழாமல் நடப்பது மட்டுமே என் குறிக்கோளாகும். அப்படிப்பட்டவர்கள் மட்டுமே நான் மதிக்கக்கூடிய இடத்தில இருப்பவர். உள்ளே ஒன்று, வெளியே ஒன்று என்று இருப்பவர் சுயமதிப்பை இழந்தவர்.
உண்மையாக இருப்பவர் மட்டுமே மாற்றத்தை கொண்டு வரமுடியும். மற்றவை எல்லாம் வீண். தமிழ் தேசிய சிந்தனையை, நீர்த்து போக செய்யும் சுயநலம். கடிக்க நினைப்பவர், கடிக்கலாம். அது என் நிலைப்பாடு சரி, என்பதை இன்னுமாக வலுப்படுத்தும். அரசியலை நோக்கி வருபவர்களை, தமிழர்களை தமிழர் வழி அரசியல் படுத்துவது மட்டுமே இனி என் நோக்கமாக இருக்கும். மனச்சுமை நீங்கியவளாக ... புதியதொரு பயணத்தை நோக்கி’’ என தெரிவித்துள்ளார்.
வனிதா அகமுடையார் என்பவர், ‘‘தெலுங்கு திராவிட சனியனை சந்தித்த நாளிலிருந்து தான் சீமான் பேசுவது பிழையாக இருக்கிறது. நாங்கள் உயிரினும் மேலான நேசிக்கின்ற எங்கள் தமிழ் தேசிய அரசியல் பிழையான பாதையில் போகிறதா வீழ்ச்சிக்கு பாதை வகுக்கிறது. நாங்க கடந்து வந்த பாதை எவ்வளவு வலி நிறைந்தது, தூக்கி எறிய மனமில்லை’’ எனத் தெரிவித்துள்ளார்.
ரத்திகா மனோ என்பவர் தனது பதிவில், ‘‘இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் செய்துவிட்டார்கள் காங்கிரசும்,திமுகவும் என்று கட்சி ஆரம்பித்து விட்டு இன்று அவர்களுக்கு பல்லக்கு தூக்குவது நகைப்புக்குரியது. எல்லாரும் ஒவ்வொரு கட்டத்தில் குணமாகித்தானே ஆகவேண்டும். முதல் பேட்ஜ்களில் வெட்டியாக.. காலம், பணம், நேரம், என பலவற்றை இழந்து திரிந்து, சுதாரித்து வெளியேறி குணமான முன்னாள் தம்பிகள் சார்பில் இவருக்கு வாழ்த்துகளை பகிர்கின்றோம்.
இவருக்கு அவர் மேல் என்ன கோவமோ! ஓட்டை பிரிக்க திமுகவால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி நாம் தமிழர். சீமான் இளைஞர்களே கவனம். சீமானை எந்த விதத்திலும் நம்பி விடாதீர்கள். வாக்குகளை சிதறடித்து திமுக வெற்றி பெற உதவும் திராவிட கைக்கூலி. அதனால் தான் தனித்துப் போட்டி என்பார்’’ என பலரும் சீமானுக்கு எதிராக திரண்டு வருகின்றனர்.