- Home
- Politics
- ரூ.1,000 கோடி சொத்து... சுசீலாவின் ஆடம்பர வைர நெக்லஸ் கலெக்சன்ஸ்... வயிற்றெரிச்சலில் தைலாபுரம் குடும்பம்..!
ரூ.1,000 கோடி சொத்து... சுசீலாவின் ஆடம்பர வைர நெக்லஸ் கலெக்சன்ஸ்... வயிற்றெரிச்சலில் தைலாபுரம் குடும்பம்..!
சுசீலாவுக்கு குழந்தைகள் இல்லையென்றாலும் அவர் ஒரு ஆடம்பரப் பிரியர் என்று கூறப்படுகிறது. பலநூறு சவரன் நகைகளை வைத்திருக்கும் அவருக்கு வைர நெக்லஸ் மீது அலாதிப் பிரியம்.

பாட்டாளி மக்கள் கட்சியில் ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் ஒருபுறம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், மறுபுறம் ராமதாஸின் இரண்டாவது மனைவி என சொல்லப்படும் சுசீலா குறித்த விவகாரங்கள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அவர் வகை வகையாய் அணிந்திருக்கும் விலையுயர்ந்த வைர நெக்லஸ்களால் திகிலடித்துக் கிடக்கிறார்கள் ராமதாஸின் முதல் மனைவியின் குடும்பத்தினர்.
ராமதாஸ் மருத்துவராக பணியாற்றிய காலத்தில் டோக்கன் கொடுக்கும் பணியாளராக அறிமுகமானவர் தான் சுசீலா. 16 வயதில் பணிக்கு வந்த சுசீலாவுடன் ஏற்பட்ட பழக்கம் தான் நாளடைவில் இருவரையும் நெருக்கமாக்கியதாகவும் அதன் பொன்விழா ஆண்டை நட்சத்திர ஹோட்டலில் இருவரும் கேக் வெட்டிக் கொண்டாடியதாகவும் கூறப்படுகிறது.
சிறுவயதில் இருந்து ராமதாசுடன் தான் சுசீலா இருக்கிறார். பழுத்த அரசியல்வாதி உடனான பயணம் அவருக்கு அரசியலையும் கற்றுத் தந்தது. சில விவகாரங்களில் ராமதாசுக்கு ஆலோசனையும் சொல்லி வந்தவர் தான் சுசீலா. இந்த நிலையில் கட்சியில் அன்புமணியின் ஆதிக்கம் அதிகமாவதால் தன்னால் தைலாபுரத்தில் நிரந்தரமாக இருக்க முடியாது என்பதுதான் சுசீலாவின் எண்ணம். காடுவெட்டி குரு போல தன்னையும் ஆக்கி விடுவார்களோ? என்ற எண்ணத்தில் தான் கட்சியின் கட்டுப்பாட்டை முழுக்க முழுக்க தன் பக்கம் கொண்டுவர ராமதாஸைப் பயன்படுத்திக் கொண்டார் என்கிறார்கள்.
ராமதாஸ் ஆதரவு எனச் சொல்லிக் கொண்டாலும் அவர்களை இயக்கியது என்னவோ சுசிலாதான். காரணம் தன் வசம் இருக்கும் பல்லாயிரக்கணக்கான சொத்து தன்னை விட்டுப்போய்விடக்கூடாது என்கிற எச்சரிக்கை. சென்னை, மாதவரத்தில் பிரபல பள்ளி ஒன்று இருக்கிறது. அதன் மதிப்பு இன்று ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும். பராமரிப்புத் தொகையாக சுசிலா குறிப்பிட்ட தொகையைப் பெற்று வருகிறார். இந்த நிலையில் நிரந்தரமாக அந்தப் பள்ளியைத் தன் பெயருக்கு மாற்றவும், 25 லட்சம் ரூபாய் பராமரிப்புத் தொகையாக வேண்டும் என்பதே சுசிலாவின் கோரிக்கை. சுசீலாவுக்கு விஸ்வகர்மா என்ற பெயரில் ராமதாஸ் அறக்கட்டளை ஒன்றையும் வைத்துக் கொடுத்து இருக்கிறார். அந்த அறக்கட்டளையில் பல்லாயிரம் கோடி மதிப்பிலான சொத்து இருப்பதாக கூறப்படுகிறது.
சுசீலாவுக்கு குழந்தைகள் இல்லையென்றாலும் அவர் ஒரு ஆடம்பரப் பிரியர் என்று கூறப்படுகிறது. பலநூறு சவரன் நகைகளை வைத்திருக்கும் அவருக்கு வைர நெக்லஸ் மீது அலாதிப் பிரியம். வெளி நிகழ்ச்சிகளுக்கு செல்லும் அவர், ஒவ்வொரு முறையும் வெளியில் செல்லும்போதெல்லாம் தினுசு தினுசாக வெவ்வேறு வைர நெக்லஸ்களை அணிந்து ஆடம்பரம் காட்டிக் கொள்வதில் அலாதிப் பிரியம் கொண்டவர் என்கிறார்கள் அவரை அறிந்தவர்கள். வைர நெக்லஸ் கலெக்சன் மட்டுமே டஜன் கணக்கில் வைத்திருக்கிறாராம் சுசீலா.