- Home
- உலகம்
- நகரும் கோட்டை... ஆடம்பர சொர்க்கம்..! கிம் ஜாங் உன்னின் ‘கல்லறை’ ரயிலில் அப்படி என்னதான் இருக்கிறது..?
நகரும் கோட்டை... ஆடம்பர சொர்க்கம்..! கிம் ஜாங் உன்னின் ‘கல்லறை’ ரயிலில் அப்படி என்னதான் இருக்கிறது..?
கிம்மின் ரயில் ‘நகரும் கோட்டை’ என்று அழைக்கப்படுகிறது. இது கொரிய மொழியில் டேயாங்கோ என்று அழைக்கப்படுகிறது. அதாவது சூரியன். ஆடம்பரமான குண்டு துளைக்காத ரயில் வட கொரியாவின் நிறுவனர் கிம் இல் சுங்கின் சின்னம்.

பச்சை குண்டு துளைக்காத ரயில்
வட கொரிய சர்வாதிகாரி கிம் ஜாங் உன் திங்கய்கிழமை பியோங்யாங்கில் இருந்து சீனாவின் பெய்ஜிங்கிற்கு ரயிலில் புறப்பட்டார். வட கொரிய தலைவர்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் தனித்துவமான குண்டு துளைக்காத பச்சை நிற ரயிலைப் பயன்படுத்தியுள்ளார். இதில் பாதுகாப்புக் காவலர்கள், உணவு, வசதிகளுடன் மிகவும் பாதுகாப்பான, வசதியான ரயில். 2011-ன் பிற்பகுதியில் வட கொரியாவின் தலைவரானதில் இருந்து, கிம் சீனா, வியட்நாம், ரஷ்யாவிற்கு பயணிக்க ரயிலைப் பயன்படுத்தி உள்ளார்.
கடந்த சில ஆண்டுகளில் வட கொரியத் தலைவர்கள் எத்தனை ரயில்களைப் பயன்படுத்தியுள்ளனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் வட கொரிய போக்குவரத்து விஷயங்களில் தென் கொரிய நிபுணரான அஹ்ன் பியுங்-மின், பாதுகாப்பு காரணங்களுக்காக பல ரயில்கள் தேவை என்று கூறியுள்ளார். இந்த ரயில்களில் தலைவருக்கு படுக்கையறைகள் உள்ளன. பாதுகாப்புக் காவலர்கள், மருத்துவ ஊழியர்களும் உள்ளனர். இந்த பச்சை குண்டு துளைக்காத ரயிலில் அமெரிக்க தொழில்நுட்பத்தால் செய்யப்பட்ட ஹெலிகாப்டர்கள், சீன இயந்திரங்கள், இயந்திர துப்பாக்கிகளுடன் பல வகையான தரையில் இருந்து தாக்கும் வான் ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன.
கிம்மின் ‘நகரும் கோட்டை’
கிம்மின் ரயில் ‘நகரும் கோட்டை’ என்று அழைக்கப்படுகிறது. இது கொரிய மொழியில் டேயாங்கோ என்று அழைக்கப்படுகிறது. அதாவது சூரியன். ஆடம்பரமான குண்டு துளைக்காத ரயில் வட கொரியாவின் நிறுவனர் கிம் இல் சுங்கின் சின்னம். ஆனாலும், இந்த ரயிலை சிறப்பாக்குவது அதன் ஆடம்பரமான உட்புறம். இந்த ரயில்களில் பொதுவாக கிம்மின் அலுவலகத்திற்கான பல போக்குவரத்து பெட்டிகள், தகவல் தொடர்பு உபகரணங்கள், ஒரு உணவகம், இரண்டு கவச மெர்சிடிஸ் கார் ஆகியவை இருக்கும். 2018 ஆம் ஆண்டில் வட கொரிய அரசு தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோவில், இளஞ்சிவப்பு சோஃபாக்களால் சூழப்பட்ட ஒரு பரந்த ரயிலில் கிம் சீன உயர் அதிகாரிகளைச் சந்திப்பதைக் காட்டியது.
அந்த பெட்டியில் கிம்மின் அலுவலகமும் உள்ளது. அதில் ஒரு மேஜை, நாற்காலி உள்ளது. சீனா, கொரிய தீபகற்பத்தின் வரைபடம் அவருக்குப் பின்னால் உள்ள சுவரில் வரையப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில், அரசு தொலைக்காட்சி காட்சிகள் கிம் சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதியைப் பார்வையிட ரயிலில் ஏறுவதைக் காட்டியது. மலர் வடிவ விளக்குகள் மற்றும் வரிக்குதிரை அச்சிடப்பட்ட துணி நாற்காலிகளால் அலங்கரிக்கப்பட்டது.
ஒயின் கேன்கள், உயிருள்ள இறால்கள்
2002 ஆம் ஆண்டு 'ஓரியண்ட் எக்ஸ்பிரஸ்' என்ற புத்தகத்தில், கிம் ஜாங் உன்னின் தந்தையும், முன்னோடியுமான கிம் ஜாங் இல் மாஸ்கோவிற்கு மூன்று வார பயணத்தார். அந்த ரயிலில் பாரிஸிலிருந்து போர்டியாக்ஸ், பியூஜோலாய்ஸ் ஒயின் கேன்கள், உயிருள்ள இறால்கள் கொண்டு வரப்பட்டதாக கூறுகிறது.
2023 ஆம் ஆண்டு கிம் ஜாங் உன் ரஷ்யாவிற்கு ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் ஒரு உச்சிமாநாட்டிற்கு பயணம் செய்தபோது, இரு நாடுகளும் வெவ்வேறு ரயில் பாதைகளைப் பயன்படுத்துவதால், அதன் சக்கரங்களை எல்லை நிலையத்தில் மீண்டும் இணைக்க வேண்டியிருந்தது. ஆனால். சீனாவிற்கு அந்தத் தேவை இல்லை. எல்லையைத் தாண்டிய பிறகு, ஒரு சீன இயந்திரம் கிம்மின் ரயிலை இழுக்கிறது. ஏனென்றால் ஒரு உள்ளூர் பொறியாளரால் மட்டுமே ரயில் அமைப்பு, சிக்னல்களை வழங்க முடியும்.
ஜி ஜின்பிங் உடனான முந்தைய உச்சி மாநாடுகளுக்கான கிம்மின் சிறப்பாக பொருத்தப்பட்ட ரயில் பாதை பொதுவாக பச்சை DF11Z இயந்திரங்களால் இழுக்கப்படும். இந்த இயந்திரங்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டவை. அரசுக்கு சொந்தமான சீன ரயில்வே கார்ப்பரேஷனின் சின்னத்தைக் கொண்டிருந்தன. குறைந்தது மூன்று வெவ்வேறு தொடர் பதிவு எண்களைக் கொண்டிருந்தன. தொடர் எண்கள் 0001 அல்லது 0002. இது சீனா மிக மூத்த அதிகாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட இயந்திரங்களை அவர்களுக்கு வழங்குகிறது என்பதைக் குறிக்கிறது.
கல்லறை ரயில்
இந்த ரயில் மணிக்கு 55 கிலோமீட்டர் (35 மைல்) வேகத்தில் மட்டுமே ஓடுகிறது. ஏனென்றால் அதன் எடை அதிகம். மேலிருந்து கீழாக கனரக கவசத்தால் அலங்கரிக்கப்பட்ட 90 பெட்டிகளையும் உள்ளே சேமிக்கப்பட்ட அனைத்து பொருட்களையும் இது சுமந்து செல்ல வேண்டும். மூவிங் ஃபோர்ட்ரெஸ் என்பது மிகவும் மெதுவான போக்குவரத்து வழிமுறை. டிரம்பை சந்திக்க கிம் வியட்நாம் பயணம் 65 மணிநேரம் எடுத்தது. விமானங்களைப் போலல்லாமல், இந்த ரயில் அனைத்து வகையான தாக்குதல்களையும் தாங்கும்.
வட கொரியாவின் நிறுவனத் தலைவரும், கிம் ஜாங் உன்னின் தாத்தாவுமான கிம் இல் சுங் 1994-ல் இறக்கும் வரை தனது ஆட்சிக் காலத்தில் தொடர்ந்து ரயிலில் வெளிநாடுகளுக்குச் சென்றார். கிம் ஜாங் இல் ரஷ்யாவிற்கு மூன்று முறை ரயில்களில் பயணம் செய்தார். இதில் 2001-ல் மாஸ்கோவிற்கு 20,000 கிலோமீட்டர் பயணம் அடங்கும். பியோங்யாங்கில் இருந்து மாஸ்கோவிற்கு பயணம் முடிக்க 24 நாட்கள் ஆனது. 2011 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஒரு ரயிலில் பயணம் செய்யும் போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ரயிலுக்குள் கீழே விழுந்து அவர் மர்மமான சூழ்நிலையில் இறந்தார். இந்த ரயில் அவரது கல்லறை என்றும் அழைக்கப்படுகிறது.