- Home
- Politics
- பீகாரில் காங்கிரஸ் கூட்டணியை மொத்தமாக முடித்த ஓவைசி..! சிறுபான்மையினர் ஓட்டு சிதறியதால் சிக்கல்..!
பீகாரில் காங்கிரஸ் கூட்டணியை மொத்தமாக முடித்த ஓவைசி..! சிறுபான்மையினர் ஓட்டு சிதறியதால் சிக்கல்..!
இன்றைய வாக்கு எண்ணிக்கையில் என்.டி.ஏ கூட்டணி முன்னிலை வகிக்கிறது. ஆனால் ஓவைசியால் ஓட்டு சிதறல் மகா கூட்டணிக்கு இழப்பை அதிகரித்துள்ளது. ஓவைசி தன்னை மூன்றாவது முன்னணி என்று கூறி, முஸ்லிம் அடையாள அரசியலை வலுப்படுத்துகிறார்.

2025 பீகார் தேர்தலின் ஆரம்ப முடிவுகளில், அசாதுதீன் ஓவைசியின் கட்சியான ஆல் இந்தியா மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி சீமாஞ்சல் பகுதியில் இரண்டு இடங்களில் முன்னிலை வகிக்கிறது. கடந்த தேர்தலுக்குப் பிறகு இந்த முன்னிலை முக்கியத்துவம் வாய்ந்தாக கருதப்படுகிறது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் மொத்தம் 143 இடங்களில் போட்டியிட்டது, தற்போது 43 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் இரண்டும் தலா 165 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.
பீகார் சட்டமன்றத் தேர்தலில் அசதுதின் ஓவைசியின் ஆல் இந்தியா மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன், காங்கிரஸ்-ஆர்.ஜே.டி தலைமையிலான மகா கூட்டணி முயற்சிகளை முற்றிலும் முடிவுக்கு கொண்டுவந்தது. இது சிறுபான்மையரான முஸ்லிம் ஓட்டுகளை சிதறச் செய்து, எதிர்க்கட்சிகளுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. தேர்தல் நவம்பர் 6, 11-ஆம் தேதிகளில் நடைபெற்று, இன்று வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. ஆரம்ப கட்ட வாக்கு எண்ணிக்கையில் பாஜக ஐக்கிய ஜனதா தள கூட்டணியான என்டிஏ கூட்டணி முன்னிலையில் உள்ளது.
ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி, மகா கூட்டணியில் இணைய ஜூன்-அக்டோபரில் மூன்று முறை தொடர்பு கொண்டார். சீமாஞ்சல் பகுதியில் (முஸ்லிம் மக்கள் தொகை 40-70% உள்ள கிஷங்கஞ்ச், அரரியா, பூர்னியா, கதிஹார்) தொகுதிகளை ஒதுக்க கோரிக்கை வைத்தார். ஆனால் ஆர்ஜேடிதலைவர் லாலூ பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவ் ஆகியோர் பதில் அளிக்கவில்லை.
ஆர்ஜேடி,காங்கிரஸ் கட்சியினர் அசாதுதீன் ஓவைசியை பஜக-வின் பி-டீம் என்று விமர்சித்தனர். 2020 தேர்தலில் ஓவைசியின் கட்சி 20 தொகுதிகளில் போட்டியிட்டு 5 இடங்களில் வென்றார், முஸ்லிம் ஓட்டுகளை சிதறச் செய்ததால் என்.டி.ஏ கூட்டணி பயனடைந்தது.
பீகாரத்தில் முஸ்லிம்கள் 17-18% மக்கள் தொகை உள்ளன. அவர்கள் மகா கூட்டணிக்கு முக்கிய ஆதரவு கொடுப்பவர்கள். ஆனால் ஓவைசி தனித்து போட்டியிட்டதால் சிறுபான்மையினர்களின் வாக்குகளை பிரித்துவிட்டார். ஓவைசி முஸ்லிம்களுக்கு உரிமை, துணை முதல்வர் பதவி" என்று வலியுறுத்தி வந்தார். இது முஸ்லிம் ஓட்டுகளை மகா கூட்டணிக்கு செல்லாமல் சிதறச் செய்துள்ளது. காங்கிரஸ் தலைவர் ஷகீல் அகமது "ஓவைசி பாஜகவுக்கு உதவுகிறார்" என்று குற்றம்சாட்டுகிறார்.
இன்றைய வாக்கு எண்ணிக்கையில் என்.டி.ஏ கூட்டணி முன்னிலை வகிக்கிறது. ஆனால் ஓவைசியால் ஓட்டு சிதறல் மகா கூட்டணிக்கு இழப்பை அதிகரித்துள்ளது. ஓவைசி தன்னை மூன்றாவது முன்னணி என்று கூறி, முஸ்லிம் அடையாள அரசியலை வலுப்படுத்துகிறார். இது பீகார அரசியலில் நீண்டகால மாற்றத்தை ஏற்படுத்தலாம்.