அடியோடு உருவி எடுங்க..! ‘ஆபரேஷன் அதிமுக’..! லிஸ்ட் போட்டுக் கொடுத்த மு.க.ஸ்டாலின்..!
இன்னும் இரண்டு மாதங்களுக்குள் அதிமுகவில் இருக்கக்கூடிய முக்கிய நிர்வாகிகளை திமுகவிற்கு கொண்டுவரும் பொறுப்பை திமுகவை சேர்ந்த ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களிடமும் கொடுத்திருக்கிறது திமுக தலைமை.

அதிமுகவில் உட்கட்சி மோதல்கள், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தலைமையில் ஏற்பட்ட மாற்றங்களால் பல நிர்வாகிகளை திமுகவை நோக்கி நகர வைத்தன. திமுக ஆட்சியில் இருப்பதால், அதிமுகவில் உள்ள சில தலைவர்கள் அரசியல் எதிர்காலத்தை உறுதிப்படுத்த திமுகவுடன் இணைய முயற்சிக்கின்றனர். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி, உள்ளூரில் செல்வாக்கு இல்லாமல் போனது, கட்சியில் உரிய அங்கீகாரம் கிடைக்காததால் திமுகவை நோக்கின் படையெடுக்கின்றனர்.
அதிமுக நிர்வாகிகளை ஈர்க்கும் திமுகவின் உத்தி வரும் சட்டமன்றத்தேர்தலை மையப்படுத்தி வேகமெடுத்து வருகிறது. தேர்தல் நெருங்கும் நிலையில் மேலும் அதிமுகவை சேர்ந்த பலரும் திமுகவுக்கு தாவ முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அதிமுகவில் மாவட்ட வாரியாக இருக்கும் முக்கிய நிர்வாகிகளை கொண்டுவர ‘ஆபரேஷன் அதிமுக’ என்கிற திட்டத்தை துவக்கி இருக்கிறது திமுக என்கிறார்கள். இன்னும் இரண்டு மாதங்களுக்குள் அதிமுகவில் இருக்கக்கூடிய முக்கிய நிர்வாகிகளை திமுகவிற்கு கொண்டுவரும் பொறுப்பை திமுகவை சேர்ந்த ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களிடமும் கொடுத்திருக்கிறது திமுக தலைமை.
முதல் கட்டமாக ஓ.பி.எஸ் உடன் இருக்கிற எம்.எல்.ஏ.,க்கள், நிர்வாகிகளை வளைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே இதே பாணியில்தான் டி.டி.வி. தினகரனுடன் இருந்த செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், வி.பி.கலைராஜன், பழனியப்பன் என முக்கியமான நிர்வாகிகளை இழுத்த திமுக, அவர்களுக்கு மாவட்ட செயலாளர், எம்.பி., பதவி, அமைச்சர் பதவி என பொறுப்புகளை கொடுத்தார்கள்.
இதே பாணியில் இப்போது ஓ.பி.எஸ் கூடாரத்தை அப்படியே திமுகவிற்கு கொண்டுவரும் வேலைகள் நடந்து வருகிறது. இது போக கொங்கு மண்டலத்தில் இருக்கிற அதிமுக நிர்வாகிகளை திமுக கொண்டுவரும் பொறுப்பை முத்துசாமி, செந்தில் பாலாஜியிடம் கொடுத்திருக்கிறது திமுக தலைமை. முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டில் இருந்து திரும்பியதும், அவரது தலைமையில் முக்கிய அதிமுக நிர்வாகிகள் திமுகவில் இணைவார்கள் என பேசப்படுகிறது.