- Home
- Politics
- என்னையே மிரட்டுறீங்களா..? செங்கோட்டைனுக்கு எதிராக பகீர் முடிவு..! அடித்து ஆடும் எடப்பாடியார்..!
என்னையே மிரட்டுறீங்களா..? செங்கோட்டைனுக்கு எதிராக பகீர் முடிவு..! அடித்து ஆடும் எடப்பாடியார்..!
செல்லூர் ராஜு, செங்கோட்டையன், தம்பிதுரை என பல சீனியர்களை பெரிதாக கொண்டு வராமல் ஒதுக்கி வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுகவை ஒருங்கிணைக்க சசிகலாவும் ஒரு பிரச்சார பயணத்துக்கு திட்டமிட்டு வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

அதிமுக மூத்த தலைவர்களின் அதிருப்தி, உட்கட்சி விவகாரங்கள் அதிமுகவில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையின் கீழ் அதிமுக இயங்கி வருகிறது, ஆனால் மூத்த தலைவர்களிடையே அவரது தன்னிச்சையான முடிவுகள், பழைய தலைவர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படாதது குறித்து அதிருப்தி நிலவுகிறது. உதாரணமாக, முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், எடப்பாடி பழனிச்சாமியின் தலைமைக்கு எதிராக கருத்து தெரிவித்து, கட்சியை ஒருங்கிணைக்க வி.கே. சசிகலாவை மீண்டும் இணைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.
செங்கோட்டையன், 2025 பிப்ரவரியில் பழனிச்சாமியை பாராட்டும் நிகழ்ச்சி ஒன்றை புறக்கணித்ததாகவும், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் படங்கள் இடம்பெறாததை காரணமாகக் கூறி எதிர்ப்புத் தெரிவித்டார். பாஜகவுடனான கூட்டணி மீண்டும் உருவாகியுள்ளது, ஆனால் இது கட்சி தொண்டர்கள், மூத்த தலைவர்களிடையே கலவையான எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. சில மூத்த தலைவர்கள் இந்த கூட்டணி கட்சியின் சிறுபான்மையினர் ஆதரவை இழக்கச் செய்யும் என அஞ்சுகின்றனர். ஒரு மூத்த தலைவர் இதை "வெண்ணெய் திரண்டு வரும்போது தாழியை உடைத்த கதை" என வர்ணித்துள்ளார்.
சமீபத்தில் அன்வர் ராஜா, மைத்ரேயன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் திமுகவில் இணைந்துள்ளனர். இதற்கு எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையால் முக்கியத்துவம் இழந்ததாக உணர்ந்தது ஒரு காரணமாக கூறப்படுகிறது. வி.கே. சசிகலாவை மீண்டும் இணைக்க வேண்டும் என சில மூத்த தலைவர்கள் விரும்புவதாகவும், ஆனால், எடப்பாடி பழனிச்சாமி இதற்கு உடன்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
2020-ல் உருவாக்கப்பட்ட 11 பேர் கொண்ட ஸ்டீயரிங் கமிட்டியில் செங்கோட்டையன், தம்பிதுரை, ஆர்.வைத்திலிங்கம் போன்ற மூத்த தலைவர்களுக்கு இடம் அளிக்கப்படவில்லை. இதில் பெண்கள், முஸ்லீம் பிரதிநிதிகள் இல்லாதது குறித்தும் அதிருப்தி எழுந்தது. இது மூத்த தலைவர்களை புறக்கணிப்பதாக உணர வைத்தது.
2024 மக்களவைத் தேர்தலில் அதிமுகவின் தோல்வி, பல தொகுதிகளில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது கட்சியின் மன உறுதியை பாதித்துள்ளது. இதற்கு எடப்பாடி பழனிச்சாமி எடுத்த முடிவுகள், உள்ளூர் தலைவர்களின் ஆதரவு இல்லாத வேட்பாளர்களை தேர்ந்தெடுத்தது காரணமாகக் கூறப்படுகிறது.
இந்த பிரச்சினைகள் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் கட்சியின் ஒற்றுமையை பாதிக்கலாம். கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்தவும், தொண்டர்களின் மன உறுதியை உயர்த்தவும் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என எடப்பாடி பழனிசாமிக்கு சீனியர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால், அவர் காது கொடுப்பதாகத் தெரியவில்லை.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பிரளயம் கிளப்பி வருகிறார் செனஙகோட்டையன். நாளை மனம் திறந்து பேச உள்ளதாக அறிவித்துள்ளார். அவர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர் கொடி தூக்கினால் பெரும் பின்னடைவை சந்திக்கலாம். எடப்பாடி பழனிசாமி 2026-ல் சீனியர்களை ஓரம் கட்டி விட்டு, கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சப் போகிறார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. எடப்பாடி பழனிசாமி ஒதுக்கி வைக்க நினைக்கும் அந்த சீனியர்களை ஒருங்கிணைக்கிற வேலையைத் தான் செங்கோட்டையன் ஆரம்பித்ததாக சொல்லப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர் கொடி தூக்குவதும், பிறகு சமாதான கொடி பறக்க விடுவதுமாக இருக்கும் செங்கோட்டையன் இந்த முறை புயலாக சீருவாரா? புஸ்வானமாக அடங்கிப் போவாரா? என்பது ஐந்தாம் தேதி தெரிந்து விடும். ஆனால் இந்த முறை அதிமுக தலைமை மீது அதிருப்தியாக இருக்கக்கூடிய எம்.எல்.ஏ.,க்களையும், சீனியர்களையும் தனது பக்கம் வளைத்துக் கொண்டிருக்கிறார் செங்கோட்டையன். கோபிசெட்டிபாளையத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பவானிசாகர் எம்.எல்.ஏ பண்ணாரி கலந்து கொண்டார். இவருக்கு சீட் உறுதி என சொன்ன அதிமுக தலைமை இப்போது வேறு ஒருவருக்கு சீட்டு கொடுப்பதாக முடிவு செய்துள்ளது.
இதனை தெரிந்து கொண்டு செங்கோட்டையனுக்கு ஆதரவு கொடுத்து இருக்கிறார் பண்ணாரி. டி.டி.வி.தினகரன் ஆதரவாளராக இருந்து அதிமுகவுக்கு வந்த ஈரோடு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் எஸ்.ஆர்.எஸ் செல்வமும், செங்கோட்டையனுக்கு ஆதரவு தெரிவித்து கோபிசெட்டிபாளையத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். செங்கோட்டையன் விவகாரத்தை எடப்பாடி பழனிச்சாமி சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. அதற்கு காரணம் இனி சீனியர்களை எல்லாம் ஓரம் கட்டி விட்டு, 2026-ல் கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்ச வேண்டும் என்கிற முடிவில் இருக்கிறாராம் எடப்பாடி பழனிச்சாமி.
இதன் வெளிப்பாடகவே செல்லூர் ராஜு, செங்கோட்டையன், தம்பிதுரை என பல சீனியர்களை பெரிதாக கொண்டு வராமல் ஒதுக்கி வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இவர்கள் எல்லோரிடமும் சசிகலா பேசிக் கொண்டிருக்கிறார். அதிமுகவை ஒருங்கிணைக்க சசிகலாவும் ஒரு பிரச்சார பயணத்துக்கு திட்டமிட்டு வருகிறார் என்றும் கூறப்படுகிறது.