- Home
- Politics
- வீடு வாங்க ஏது பணம்..? மிரட்டப்பட்ட மாலதி.. கனிமொழியை டேக் செய்து சவுக்கு சங்கர் கடும் குற்றச்சாட்டு
வீடு வாங்க ஏது பணம்..? மிரட்டப்பட்ட மாலதி.. கனிமொழியை டேக் செய்து சவுக்கு சங்கர் கடும் குற்றச்சாட்டு
ரு பெண் பத்திரிக்கையாளரை விசாரணை என்ற பெயரில் அழைத்து, அவர் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கேள்வி கேட்டு துன்புறுத்துவது உங்களுக்கு உடன்பாடானதுதானா ? கனிமொழி.

பிரபல யூடியூபரும், அரசியல் விமர்சகருமான. சவுக்கு சங்கர் சவுக்கு மீடியா என்ற யூடியூப் சேனலை நடத்தி, அரசியல், ஊழல் தொடர்பான விஷயங்களை விவாதித்து வருகிறார். அவருடன் நெறியாளரான மாலதி பணியாற்றி வருகிறார். 2024 மே மாதம் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டபோது அவரது பினாமி சொத்துகள் குறித்த குற்றச்சாட்டுகள் வெளியானது. இதில் முக்கியமாக மாலதி பெயரில் வாங்கப்பட்ட வீடுகள் பற்றிய தகவல்கள் வைரலானது. இவை அனைத்தும் குற்றச்சாட்டுகளாகவே இருந்தாலும், ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டுள்ளன. சவுக்கு சங்கர் இவற்றை மறுத்துள்ளார்.
தி.நகரில் உள்ள வீடு 3.5 கோடி ரூபாய் வீடு, 2023 ஜூலை மாதம் மாலதி பெயரில் சவுக்கு சங்கர் 3 கோடி கொடுத்து வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது. 2 கோடி கருப்புப் பணமாக மறைத்ததாகவும் கூறப்பட்டது. பல்லாவரத்தில் 3 கோடிக்கு 2024 செப்டம்பர் 10 ம் தேதி மாலதி பெயரில் சவுக்கு சங்கர் வாங்கியதாக கூறப்படுகிறது. சவுக்கு சங்கரின் மனைவி நிலவு மொழி, “பெற்ற மகனுக்கு 2,000 ரூபாய் கொடுக்காதவன், மாலதிக்கு 1 கோடி வீடு வாங்கி கொடுத்தான்" என்று எக்ஸ்தளத்தில் பதிவிட்டார்.
மாலதி, 14,000 ரூபாய் வாடகை வீட்டில் வசித்து வந்தவர். திடீரென 3.5 கோடி மதிப்புள்ள வீடுகளை வாங்கியதாக கூறப்படுகிறது. சவுக்கு சங்கர் இதற்கு பணம் கொடுத்ததாகவும், கருப்புப் பணத்தை மறைக்க இதை பயன்படுத்தியதாகவும் விமர்சகர்கள் கூறுகின்றனர். இவற்றை மறுத்து, தனது சொத்துகள் சட்டப்படியானது என்றும், இந்தக் குற்றச்சாட்டுகள் அரசியல் பழிவாங்கலாகும் என்று சவுக்கு சங்கர் கூறுகிறார்.
இந்நிலையில் கொலை முயற்சி வழக்கில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட மாலதி, போலீஸ் விசாரணை குறித்து பேசுகையில், ‘ ‘ கொலை முயற்சி வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டேன். ஆனால் அவர்கள் அது குறித்து விசாரிக்கவே இல்லை. ழுக்க முழுக்க உங்களுடைய அசையும் சொத்து அசையா சொத்து எவ்வளவு? ஸ்கூட்டி இருக்கிறதா? அதுக்கு ஆர்சி புக் இருக்கிறதா? youtube சேனல் வச்சிருக்கீங்களா? சவுக்கு மீடியாவில் எப்படி இணைந்தீர்கள்? நீங்களாக வந்து இணைந்தீர்களா? எத்தனை வருஷத்துக்கு முன்னாடி வந்தீர்கள்? யாராவது உங்களை கூப்பிட்டார்களா? சவுக்கு மீடியாவில் உங்களுக்கு ஷேர் ஹோல்டிங் இருக்குதா? இந்த மாதிரியான கேள்விகள் மட்டும் தான் இடம் பெற்றது. அவங்க முழுக்க முழுக்க தெரிஞ்சுக்க விரும்புறது என்னன்னா என்கிட்ட என்ன மாதிரியான சொத்துக்கள் இருக்கு? என்பதை தெரிஞ்சுக்க விரும்புறாங்க. இந்த youtube சேனல் என்னோடதா? அதில் எனக்கு எவ்வளவு ஷேர் வருது? எவ்வளவு வருமானம் வருது? என்பதே காவல்துறையினரின் கேள்வியாக இருந்தது;; எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சவுக்கு சங்கர் தனது எக்ஸ்தள பதிவில், ‘‘ஒரு பெண் பத்திரிக்கையாளரை விசாரணை என்ற பெயரில் அழைத்து, அவர் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கேள்வி கேட்டு துன்புறுத்துவது உங்களுக்கு உடன்பாடானதுதானா ? கனிமொழி. எந்த ஊடகமும் சவுக்கு மீடியா போல தினந்தோறும் அச்சுறுத்தல்களையும் துன்பங்களையும் சந்திப்பது இல்லை. சவுக்கு மீடியாவில் பணியாற்றும் அத்தனைபேரும் காவல்துறையின் அச்சுறுத்தலை தினந்தோறும் சந்தித்து வருகிறோம். நாங்கள் சந்திக்கும் இந்த கொடுமைகள் அத்தனையும் பொதுவெளியில் இருந்தும், ஒரு தலைக்கனம் பிடித்த சைக்கோ அதிகாரி கட்டுப்பாடின்றி தொடர்ந்து இக்கொடுமைகளை செய்ய அனுமதிக்கும் இந்த கையாலாகாத முதல்வரும் இந்த ஆட்சியும் தேவையா என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும். செய்வார்கள். ஆணவம் பிடித்து ஆட்டம் போடும் இந்த தறுக்கர்களின் கொட்டம் அடக்கப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை’’ எனத் தெரிவித்துள்ளார்.