- Home
- Politics
- திமுக ஆட்சியை வீழ்த்த சபதம்..! தவெக-அதிமுக கூட்டணி அமைய தானாகவே விலகும் பாஜக..? பரபர ட்விஸ்ட்..!
திமுக ஆட்சியை வீழ்த்த சபதம்..! தவெக-அதிமுக கூட்டணி அமைய தானாகவே விலகும் பாஜக..? பரபர ட்விஸ்ட்..!
திமுகவை வீழ்த்தும் விஷயத்தில் பாஜக உறுதியாக இருந்தால், அதிமுக - தவெக கூட்டணி அமைய பா.ஜ.க ஒத்துழைத்து சில தியாகங்களை செய்ய வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறது.

திமுக கூட்டணி வலுவாக இருப்பதால் அதிமுக கூட்டணியை வலிமைப்படுத்த எடப்பாடி பழனிசாமி பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறார். பாஜக கூட்டணிக்கு முன்பே தவெகவுடன் கூட்டணிப்பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது. ஆனாலும், பாஜக அழுத்தத்தினால் அதிமுக கூட்டணி அமைக்கப்பட்டது. ஆனாலும் திமுகவை வீழ்த்த பாஜக- அதிமுக கூட்டணியால் போதுமான முக்கிய கட்சிகளை ஒருங்கிணைத்து பலம்காட்ட முடியவில்லை.
வருகிற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்றால், அந்தக் கூட்டணிக்கு எதிரான நிலையில் உள்ள இரு பெரும் கட்சிகள் ஒன்று சேர்ந்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அப்படிப்பட்ட இரு கட்சிகள் இணைவதற்கு நெருடலாக இருக்கும் சில விஷயங்களை சமரசம் செய்தால் அது சாத்தியமாகும் என பா.ஜ.க டெல்லி தலைமைக்கு, உளவுத்துறை அதிகாரிகள் ரிப்போர்ட் கொடுத்துள்ளதாகவும், அதனால், பா.ஜ.க-விடம் மன மாற்றம் ஏற்பட்டு, தமிழக அரசியல் களத்தில் திருப்பங்கள் நிகழலாம் எனவும் கூறப்படுகிறது.
‘‘தமிழ் நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் உள்ள திமுக, பாஜக அரசுக்கு பல்வேறு குடைச்சல்களை கொடுத்து வருகிறது. வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக அரசை வீழ்த்தியே ஆக வேண்டும் என்பதில் பா.ஜ.க தலைமை உறுதி பூண்டுள்ளது. இதன் காரணமாகவே மக்களவை தேர்தலில் வெளியேறிய அதிமுகவை பெரும்பாடுபட்டு மீண்டும் பா.ஜ.க கூட்டணிக்குள் கொண்டு வந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
அதன்பிறகு, கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக இருக்கப் போவது யார் என்பதில் துவங்கிய முரண், இரு தரப்பிலும் இன்று வரை தொடர்கிறது. ஆனாலும், அதிமுக- பாஜக கூட்டணி அமைவதில் எதிர்ப்பாக இருந்த அண்ணாமலையை, தமிழக பா.ஜ.க தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கி, புதிய தலைவராக, எடப்பாடி பழனிசாமி பரிந்துரைத்த நயினார் நாகேந்திரனை நியமித்தது மத்திய பா.ஜ.க தலைமை. ஆனாலும், இரு கட்சிகள் இடையே இப்போதும் இணக்கமான சூழல் இல்லை. இந்நிலையில், புதிய அரசியல் வரவான நடிகர் விஜயின் தவெகவுக்கு தமிழகத்தில் மக்கள் மத்தியில் செல்வாக்கு இருப்பதாக பல மட்டங்களில் இருந்து பா.ஜ.க தலைமைக்கு தகவல் சென்று வருகிறது. பல கட்சி தலைவர்களும் விஜய்க்கு இருக்கும் செல்வாக்கை உற்று நோக்குகின்றனர்.
ஆரம்பம் முதலே 'யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி சேருவேன். ஆனால், அரசியல் எதிரியான திமுக, கொள்கை எதிரியான பா.ஜ.கவோடு மட்டும் நேரடியாகவோ, மறைமுகமாகவே கூட்டணி சேர வாய்ப்பில்லை' எனக் கூறி வருகிறார் விஜய். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு ஏற்பட்ட சில நெருக்கடியால் விஜயிடம் மனமாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் பாஜக -ஆதிமுக கூட்டணியில் இடம்பெற சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. எடப்பாடி பழனிசாமியும் கூட்டணிக்கு பிள்ளையார்சுழி போடப்பட்டு விட்டது. கொடி பறக்கிறது பார்ர்க்கிறீர்களா? என தவெக கூட்டணிக்கு வருவதாக கோடிட்டு காட்டினார். ஆனாலும் விஜய் பாஜக, திமுக ஆகிய இருகட்சிகளும் எதிரி என்பதை கடநந் 5ம் தேதி மாமல்லபுரத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் உறுதிபடுத்தினார். தவெக, திமுக இருகட்சிகளுக்கும் இடையேதான் போட்டியே.. என அழுத்தம் திருத்தமாக உறுதிபடக்கூறி விட்டார் விஜய். இதனால் பெரும் அதிர்ச்சிக்குள்ளானது பாஜக-அதிமுகவும்தான்.
இதற்கிடையில், பா.ஜ.க சார்பாக பல்வேறு மட்டங்களில் கருத்துக்கணிப்புகள் நடத்தி, மக்கள் கருத்து அறியப்பட்டு வருகிறது. கூடவே, மத்திய உளவுத்துறை அதிகாரிகள் தமிழகம் முழுதும் மக்கள் மனநிலையை அறிய ரகசிய சர்வே நடத்தி டெல்லியில் மேலிடத்திற்கு அனுப்பி வருகின்றனர். திமுக கூட்டணி சிந்தாமல், சிடறாமல் வலுவாக இருப்பதால், ஏற்கனவே பெற்ற ஓட்டுகளில் பெரிய அளவில் சிதைவுகள் இருக்க வாய்ப்பில்லை. அத்தோடு திமுகவுக்கு எதிரான கட்சிகள் அதிமுக - பாஜ.க, கூட்டணி, தவெ கூட்டணி என தனித்தனியாக பிரிவதும், திமுக கூட்டணிக்கே சாதகமான சூழலை ஏற்படுத்தும்.
ஆகையால், திமுகவுக்கு எதிரான சக்திகள் ஒன்றுசேர வேண்டிய கட்டாயம். முக்கியமாக திமுகவுக்கு எதிரான வலுவான இரு கட்சிகளான அதிமுக-வும், தவெக-வும் ஒன்று சேர வேண்டும். இதற்கு கூட்டணியில் பா.ஜ.க தொடர்வது நெருடலாக இருப்பதாக இபிஎஸ், விஜய் ஆகியோர் நினைக்கின்றனர். ஆகவே திமுகவை வீழ்த்தும் விஷயத்தில் பாஜக உறுதியாக இருந்தால், அதிமுக - தவெக கூட்டணி அமைய பா.ஜ.க ஒத்துழைத்து சில தியாகங்களை செய்ய வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறது.
இதனையடுத்து, பாஜக தலைமையில், தமிழக கூட்டணி தொடர்பான விஷயத்தில்க் சில மனமாற்றம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. பா.ஜ.க-வைப் பொறுத்தவரை, தேசிய கட்சி என்பதால், 2029 மக்களவை தேர்தல் தான் பிரதான நோக்கம். இதனால், வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வீழ்த்த, எந்த எல்லைக்கும் சென்று, யாருடனும் சமாதானமாக போகலாம் என்ற முடிவுக்கு பாஜக முன் வந்திருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை, அதிமுக - தவெக கூட்டணி அமைந்தால், பா.ஜ.க தனித்து விடப்படும். இதனால் பாஜகவுக்கு மோசமான தோல்வி கிடைக்கும் என்பதால், அதை எப்படி எதிர்கொள்வது என்பதையும் பாஜக யோசித்து வருகிறது.
எனவே, கடந்த மக்களவைத் தேர்தலைப் போல, சிறு கட்சிகளுடன் இணைந்து, பா.ஜ.க தலைமையில் ஒரு அணி அமைத்து, சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளலாம் என பா.ஜ.க தலைமைக்கு சிலரால் ஆலோசனை சொல்லப்பட்டிருக்கிறது. இது தொடர்பான விஷயங்களை பா.ஜ.க தலைமையும், உளவுத்துறை வட்டாரங்களும் தீவிரமாக விவாதித்து வருகின்றன.
இது முழு வேகத்தில் செயல்பாட்டுக்கு வருமா? அல்லது அதிமுக - பா.ஜ.க, கூட்டணியே தொடருமா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும்’’ என்கிறது பாஜக வட்டாரங்கள்.