வழக்கறிஞர் தாக்குதல்..! முட்டுக் கொடுத்த யூடியூப் சேனல்கள்..! நன்றி தெரிவித்த திருமா..!
‘‘உயிர் பிழைக்க போராடி வருதாகச் சொன்ன ராஜூவ் காந்தி எப்படி நலமாக நடமாடுகிறார் பாருங்கள். அவர் பயங்கரமான நடிகர்’’ என்கிற வகையில் விளக்கமளித்து திருமாவளவனுக்கு ஆதரவாக வீடியோக்களை வெளியிட்டுள்ளனர்.

அக்டோபர் 7 அன்று, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தின் அருகில் விசிக தலைவர் தொல்.திருமாவளவனின் காருடன் மோதிய ஸ்கூட்டரில் சென்ற வழக்கறிஞர் ராஜீவ் காந்தி ஓட்டுநரிடம் கேள்வி கேட்டார். இதனால், திருமாவளவனின் காரில் இருந்தவர்கள் உள்ளிட்ட விசிக தொண்டர்கள் ஆத்திரமடைந்து, அவரை சரமாரியாக தாக்கினர். அவரது ஸ்கூட்டரும் சேதமடைந்தது. இந்த சம்பவம் வீடியோக்களாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வழக்கறிஞர் ஓட்டுநரிடம் கேள்வி கேட்டதும், காரில் இருந்த விசிக தொண்டர்கள் 20-க்கும் மேற்பட்டோர் அவரை சூழ்ந்து தாக்கினர். காவல்துறையினர் கண் முன் தாக்குதல் நடந்தபோதும் அவர்களால் தடுக்க முடியாததால் வழக்கறிஞர் த உயிரை காப்பாற்றிக் கொள்ள பார் கவுன்சில் அலுவலகத்திற்குள் ஓடி தஞ்சம் புகுந்தார்.
‘‘இது திட்டமிட்ட தாக்குதலல்ல. வாக்குவாதத்தின் போது ஒரு தொண்டர் கையால் அடித்ததாகவும், ஊடகங்கள் பாஜகவுடன் சேர்ந்து அவதூறு பரப்புவதாகவும் கூறினார் திருமாவளவன். "அந்த வழக்கறிஞரின் ஜாதி-மதம் தெரியாது. அவரது முகத்தில் எழுதவில்லை. அவர் முறைத்ததால் நாலு தட்டு தட்டினோம். சரியாக அடிக்காமல் விட்டு விட்டோம்" என விளக்கமளித்தார். இது பார் கவுன்சில் தேர்தலுக்கு முன் தங்களுக்கு எதிரான சதியாக இருப்பதாகவும் சொன்னார். அவர் தாக்குதலுக்கு நேரடியாக பொறுப்பேற்கவில்லை, ஆனால் விசிக தொண்டர்கள் தான் தாக்கியதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
வன்முறை அரசியலை விட்டு நாகரிக அரசியலுக்கு வர வேண்டும் என வழக்கறிஞர் சங்கத்தினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். உயர் நீதிமன்றம் CCTV காட்சிகளை கைப்பற்றி விசாரிக்க உத்தரவிட்டது. காவல்துறையினர் வழக்கறிஞர் மற்றும் விசிக தொண்டர்கள் மீது வழக்கு பதிவு செய்தது, ஆனால் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இந்த சம்பவம் தமிழ்நாட்டு அரசியலில் சமூக நீதி, வன்முறை மற்றும் கூட்டணி அரசின் பொறுப்புகளைப் பற்றிய சந்தேகங்களையும் எழுப்பியது.
சில நாட்களுக்கு முன்பு வழக்கறிஞர் ராஜீவ்காந்தி தாக்குதல் நடந்தபோது அஞ்சி ஓடி பார் கவுன்சிலுக்குள் சென்று கதவை சாத்திய பின்பு தாக்கப்பட்ட வீடியோவும் வெளியானது. போலீஸார் அனுப்பிய சம்மனுக்கு ஆஜரான வீடியோவும் வெளியானது. இந்த வீடியோக்களை பகிர்ந்து கொண்ட பல யூடியூப் சேனல்கள், ‘‘உயிர் பிழைக்க போராடி வருதாகச் சொன்ன ராஜூவ் காந்தி எப்படி நலமாக நடமாடுகிறார் பாருங்கள். அவர் பயங்கரமான நடிகர்’’ என்கிற வகையில் விளக்கமளித்து திருமாவளவனுக்கு ஆதரவாக வீடியோக்களை வெளியிட்டுள்ளனர்.
அதற்கு நன்றி தெரிவித்து எக்ஸ்தளத்தில் பதிவிட்டுள்ள திருமாவளவன், ‘‘அக்டோபர் 07 அன்று உயர்நீதிமன்றம் அருகே எனது காரை வழிமறித்து வம்பிழுத்த நபர், "வழக்கறிஞர் அவை அலுவலகத்திற்குள்" இருந்த நிலையையும், வெளியில் நடத்திய நாடகத்தையும் அம்பலப்படுத்தியுள்ள "அரண்செய்" என்னும் 'யூ-ட்யூப்' சமூக ஊடகத்திற்கு நன்றி’’ எனத் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 07 அன்று உயர்நீதிமன்றம் அருகே எனது காரை வழிமறித்து வம்பிழுத்த நபர், "வழக்கறிஞர் அவை அலுவலகத்திற்குள்" இருந்த நிலையையும், வெளியில் நடத்திய நாடகத்தையும் அம்பலப்படுத்தியுள்ள "அரண்செய்" என்னும் 'யூ-ட்யூப்' சமூக ஊடகத்திற்கு நன்றி. pic.twitter.com/xXQT8jzyxB
— Thol. Thirumavalavan (@thirumaofficial) October 26, 2025
யூடியூப் சேனல்களுக்கு நன்றி தெரிவிக்கும் அளவுக்கு திருமாவளனின் தரம் தாழ்ந்து விட்டதா? என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.