- Home
- Politics
- ED பெயரைச் சொல்லியே மிரட்டல்..! அனைத்திலும் புகுந்து விளையாடிய கே.என்.நேருவின் உதவியாளர்கள்..!
ED பெயரைச் சொல்லியே மிரட்டல்..! அனைத்திலும் புகுந்து விளையாடிய கே.என்.நேருவின் உதவியாளர்கள்..!
ஜல் ஜீவன் மிஷன் பேஸ் II ஒப்பந்தத்தை தருகிறோம் என்று சொல்லி இதுவரை 8 கம்பெனிகளிடம் தல 5 கோடி விகிதம் 40 கோடி பணத்தை 2021-ல் ஆட்சிக்கு வந்ததுமே கவி பிரசாத், தீபக் மூலமாக செல்வமணி வசூல் செய்து துபாய்க்கு ஹவாலாமூலம் அனுப்பிவிட்டதாக குற்றச்சாட்டு உள்ளது.

திமுக மூத்த தலைவரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான ட்ரூ வேல்யூ ஹோம் நிறுவனம் தொடர்புடைய வங்கி மோசடி குறித்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அமலாக்கத்துறை ஆராய்ந்தபோது அதிர்ச்சியளிக்கும் ஊழலைக் கண்டறிந்தனர்.தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் இந்தாண்டு பணி நியமனங்கள் செய்யப்பட்டன. இதற்காக அண்ணா பல்கலை சார்பில் எழுத்துத்தேர்வும் நடத்தப்பட்டது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இந்தாண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்தப் பணி நியமனத்தில் மாபெரும் ஊழல் நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பணி நியமனம் பெற்ற 2,538 பேரில் 150 பேர் தலா ரூ.25 முதல் ரூ.35 லட்சம் லஞ்சம் கொடுத்து அரசு வேலை பெற்றுள்ளதாக தெரிய வந்தது தமிழக அரசியலில் புயலைக் கிளப்பி உள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகளின் பெயர்கள் அடங்கிய ஆதாரங்களுடன் விசாரணை நடத்த கோரி 232 பக்க கடிதம் ஒன்றை தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை அனுப்பி உள்ளது.அந்த கடிதத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் . ‘‘நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட 2,538 காலியிடங்களுக்கு, தேர்வு அறிவிக்கப்பட்டது. 1.12 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
இந்த தேர்வில் மிகப்பெரிய மோசடி நடந்து உள்ளது. அரசியல்வாதிகள் ஒரு காலியிடத்திற்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை 150 பேரிடம் லஞ்சம் வசூலித்து இருக்கின்றனர். இந்த மோசடியில் ஈடுபட்டவர்களிடமும், தேர்வுகளை நடத்திய அண்ணா பல்கலை அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வேண்டும்’’ என அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த மோசடி எப்படி நடைபெற்றது? யார் யாருக்கெல்லாம் தொடர்பு என அமலாக்கத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அதில், நகராட்சி துறை பணியில் சேர விரும்பும் நபர்கள் அல்லது அவர்களது உறவினர்கள் முதலில் அமைச்சரின் சகோதரர்கள் மணிவண்ணன், ரவிச்சந்திரன் மற்றும் ரமேஷ், செல்வமணி, கவி பிரசாத் ஆகியோரை அணுகியுள்ளனர். அவர்களில் ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை லஞ்சம் செலுத்தத் தயாரானவர்களை தேர்வில் வெற்றி பெறச் செய்துள்ளார்கள் எனவும் அமலாக்கத்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மணிவண்ணன் ஐயர் தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையின் போது, இதற்கான ஆதாரம், உதவியாளர்களின் செல்போன்களில் இருந்து மீட்கப்பட்டதாக கூறப்படும் வாட்ஸ்அப் உரையாடல்கள் உள்ளிட்ட டிஜிட்டல் ஆதாரங்களையும் கிடைத்ததாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வேலை தேடும் நபர்கள், அவர்களது உறவினர்கள் முதலில் கே.என்.நேருவின் ஐந்து நெருங்கிய உதவியாளர்களான டி.ரமேஷ், செல்வமணி, கவி பிரசாத், கே.என்.மணிவண்ணன், கே.என்.ரவிச்சந்திரன் ஆகியோரை அணுகியுள்ளனர். ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை பணம் வசூலிக்கும் தொகையை நிர்ணயித்து, அந்த நபர்களை பணிக்கு தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளனர்.
கவி பிரசாத், நேருவின் நெருங்கிய உதவியாளராகவும், மோசடியில் முக்கியமானவராக அமலாக்கத்துறையால் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர், வேலை தேடுபவர்களை அணுகி, பணம் வசூலித்து, தேர்வு செயல்முறையை ரிங் செய்ய உதவியதாகக் கூறப்படுகிறது. வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி, போலி சான்றிதழ்கள் வழங்கி, பல நூறு கோடிகளை மோசடி செய்ததாக அதிரடியான குற்றச்சாட்டுகளை கவி பிரசாத் மீது சுமத்தியுள்ளது அமலாக்கத்துறை. நேருவின் குடும்பத்தினர் நடத்தும் தொழில்கள், வியாபாரங்கள், அரசு பணிகளில் தலையீடு என ஏஜெண்டாகிப்போனார் கவி பிரசாத்.
டிவிஹெச்சில் ரெய்டு முடிந்தபின் கவி பிரசாத் பல்வேறு கம்பெனிகளிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் பெயரை சொல்லி ரகு மூலமாக பணம் பறித்து மிரட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மத்திய அரசாங்கத்தால் நிதி ஒதுக்கப்படாத ஒகனேக்கல் ஜல் ஜீவன் மிஷன் பேஸ் II ஒப்பந்தத்தை தருகிறோம் என்று சொல்லி இதுவரை 8 கம்பெனிகளிடம் தல 5 கோடி விகிதம் 40 கோடி பணத்தை 2021-ல் ஆட்சிக்கு வந்ததுமே கவி பிரசாத், தீபக் மூலமாக செல்வமணி வசூல் செய்து துபாய்க்கு ஹவாலாமூலம் அனுப்பிவிட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. இப்போது தேர்தல் நெருங்குவதால் கொடுத்த பணத்தை கேட்டு காண்ட்ராக்டர்கள் டிவிஹெச் நிறுவனத்துக்கு படையெடுத்து வருகின்றன. செல்வமணி-கவி பிரசாத் ஆகியோரிடம் பணம் கொடுத்து ஏமாந்த கம்பெனிகளின் பட்டியல் வெகுவிரைவில் வெளிவருமெனெ எதிர்பார்க்கப்படுகிறது. ரகுவின் போனில் கவி பிரசாத் அனைவரிடமும் பேசுவதுபோல், செல்வமணி, தீபக்கின் போனில் இருந்தும் அனைவரிடமும் பேசியுள்ளார் கவி பிரசாத். அதன்படி தீபக்கும் கவி பிரசாத்தும் பணத்தை வாங்குவார்கள். அடுத்த 1 மணி நேரத்தில் செல்வமணியின் மகன் வசிக்கும் துபாய்க்கு ஹவாலாவில் பணம்போய் சேர்ந்துவிடும். ராகுல் & ஆர்பிட் என்ற ஹவாலா ஏஜெண்ட்கள் இதை கையாள்வது வழக்கம். இப்படி பல கோடிகளை பங்குபோட்டுள்ளார் கவி பிரசாத் என அதிர்ச்சிக் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
‘ ’செல்வமணியும், கவி பிரசாத்தும் பணத்தை ஹவாலா மூலம் வெளிநாட்டுக்கு கொண்டு சென்றதை மட்டுமே விசாரிக்காமல் ரங்கூன் திரைப்பட புகழ் உபாஷனாவின் ஸ்ரீஷா அப்பேரல்ஸ், தாசஷயா அண்ட் கம்பெனி நிறுவனங்களையும், காஸாகிராண்ட் மாடலும், செம்பருத்தி சீரியல் நடிகையும், சென்னை பெருமாநகராட்சியில் பல்வேறு டெண்டர்கள் மூலம் கமிஷன் பெற்று கோடிகளில் செழிக்கும் ஜனனி அசோக்குமாரின் வீட்டிலும் சோதனையிடுங்கள். ஊழல் பணமெல்லாம் கோச், லூயிவிட்டான் பைகளாக, ஈசிஆர் பங்களா வீடுகளாக, ஈரோடு மெஸ் கிளைகளாக, ஆடை நிறுவனங்களாக, ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனங்களாக உருமாறி உள்ளது.
இப்படி மாட்டுவோம் என தெரிந்தே சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கவேண்டிய ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனியின் நிறுவனர் உபாஷனா ஐயர், அனைத்து சோஷியல் மீடியா பக்கங்களையும் மூடிவிட்டு “எடுத்தேன் பாரு ஓட்டம்” என்ற தோரணையில் ஓடி விட்டார்’’ என்கிறார்கள் இந்த விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வரும் நபர்கள்.