- Home
- Politics
- நீதிபதி செந்தில் குமாரின் குற்றச்சாட்டுகளால் தவெக-வுக்கு பேரிழப்பு..! உச்சநீதிமன்றத்தில் வேதனை..!
நீதிபதி செந்தில் குமாரின் குற்றச்சாட்டுகளால் தவெக-வுக்கு பேரிழப்பு..! உச்சநீதிமன்றத்தில் வேதனை..!
சென்னை நீதிமன்றம் உயர்நீதிமன்றம் எங்களுக்கு எந்த வாய்ப்பையும் வழங்காமல் எங்கள் மீதான குற்றச்சாட்டுகளை எழுப்பி இருக்கிறது. இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசியல் ரீதியாக எங்களுக்கு மிகப் பெரிய பாதிப்பையும், சேதத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

சிறப்பு விசாரணை குழுவுக்கு எதிர்ப்பு
தமிழக வெற்றிக் கழகம் சிறப்பு விசாரணை குழுவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்து வருகிறது.
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், விஜய்க்கு தலைமை பண்பே இல்லை என்று கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். அதோடு கரூர் சம்பவம் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணை குழுவை அமைத்து உத்தரவிட்டார்.
தவெக தரப்பிலும் காரசார வாதங்கள்
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக தவெக தேர்தல் பரப்புரை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் எஸ்.ஐ.டி குழு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் என்.வி.அஞ்சாரியா அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பிலும், தவெக தரப்பிலும் காரசார வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அரசுத் தரப்பில், மக்கள் உயிரிழந்த பின் விஜய் கரூருக்கு சென்று பார்க்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
எதிர்மனுதாரர்களாகக் கூட சேர்க்கப்படவில்லை
இதற்கு நீதிபதிகள் விஜய் கரூர் சென்றாரா? இல்லையா என்பது இந்த வழக்கிற்கு தொடர்பில்லாதது என கூறினர். தொடர்ந்து தவெக தரப்பில், ‘சம்பவம் நடந்த அன்று விஜய் கரூரில் இருந்தால் மேலும் அசம்பாவிதங்கள் ஏதேனும் நேரிடலாம் என்பதால், காவல்துறையினர்தான், அங்கிருந்து கிளம்ப சொன்னார்கள். காவல்துறை உதவியுடன் தான் அங்கிருந்து விஜய் வெளியேறினார். பாதிக்கப்பட்டவர்களையும் தவெகவினர் பார்க்க அனுமதிக்கப்படவில்லை.
சென்னை நீதிமன்றம் உயர்நீதிமன்றம் எங்களுக்கு எந்த வாய்ப்பையும் வழங்காமல் எங்கள் மீதான குற்றச்சாட்டுகளை எழுப்பி இருக்கிறது. இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசியல் ரீதியாக எங்களுக்கு மிகப் பெரிய பாதிப்பையும், சேதத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. எங்களுக்கு எதிராக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் நாங்கள் எதிர்மனுதாரர்களாகக் கூட சேர்க்கப்படவில்லை. இந்நிலையில், நிலையில் எங்கள் மீது நீதிபதி செந்தில்குமார் பல குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார் என வேதனை தெரிவித்துள்ளனர்.
மாநில அரசின் அதிகாரிகள் SIT-க்கு எதிர்ப்பு
நாங்கள் வளர்ந்து வரும் கட்சி என்பதால், நியாயமான விசாரணை வேண்டும். எஸ்.ஐ.டி விசாரணை வேண்டாம். முன்னாள் நீதிபதி கண்காணிப்பில் உச்ச நீதிமன்றமே ஒரு விசாரணை குழுவை அமைக்க வேண்டும். சிறப்பு புலனாய்வு குழுவை எதிர்க்கவில்லை. மாநில அரசின் அதிகாரிகள் மட்டும் உள்ள SIT விசாரணையை தான் எதிர்க்கிறோம்’ என்று வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இன்று பகல் 12 மணிக்கு விசாரணை தொடங்கிய நிலையில், மீண்டும் 2ணிக்கு ஒத்தி வைக்கப்பட்டன.