- Home
- Politics
- ஒவ்வொரு குப்பை தொட்டியிலும் ரூ. 60000 கொள்ளை..! கோடி கோடியாய் குவிக்கும் திமுக அமைச்சர்கள்..!
ஒவ்வொரு குப்பை தொட்டியிலும் ரூ. 60000 கொள்ளை..! கோடி கோடியாய் குவிக்கும் திமுக அமைச்சர்கள்..!
சிவகங்கை மாவட்டத்தில், 521 கிராமங்களுக்கு ஒரு ஊராட்சிக்கு 3 குப்பை தொட்டிகள் முதல் 10 குப்பை தொட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு தொட்டிக்கு, 60,000 ஆயிரம் ரூபாய் இழப்பு என்றால், குறைந்த பட்சம் 500 குப்பை தொட்டிகளுக்கு ரூ.3 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

நகராட்சி நிர்வாகத் துறையில் பணி நியமனத்தில் நடந்த ஊழல் பற்றி விசாரிக்க சொல்லி அமலாக்கத்துறை தமிழக, பொறுப்பு டிஜிபிக்கு கடிதம் எழுதி இருப்பது அமைச்சர் கே.என்.நேரு தரப்பை அதிர வைத்துள்ளது. இதே போன்ற ஊழல் கூட்டுறவுத் துறையிலும் நடந்திருப்பதாகவும், அதற்கான ஆதாரங்கள் வெளியில் கசிய தொடங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக கூட்டுறவுத் துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப கோடிக்கணக்கான பணத்தை வசூலிப்பதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பனின் நேர்முக உதவியாளர் மீது புகார் எழுந்து அடுத்த பரபரப்பு கிளப்பி உள்ளது. நேர்முக உதவியாளரான சரவணன் தான் வசூலிப்பதைவிட மிகவும் குறைவாகவே கணக்கு காட்டி வருவதாக குற்றச்சாட்டுகள் எழும்பியுள்ளன.
கூட்டுறவுத் துறையில் பேக்கர் வேலைக்கு சென்னையில் மட்டும் 310 பணி இடங்களுக்கு தலா ரூ.80 லட்சத்தை வாங்கிக்கொண்டு பணி நியமனம் கொடுத்துள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. சென்னை தவிர தமிழ்நாட்டில் உள்ள பிற 700 காலி பணியிடங்களுக்கு அடுத்த வசூல் வேட்டை ஆரம்பித்து விட்டதாகவும், கூட்டுறவு வங்கிகளில் இளநிலை உதவியாளர்கள் பணிக்கும் பல கோடிகளுக்கு பேரம் பேசி வருவதாகவும் அத்துறையினரே புகார் கிளப்புகிறார்கள். கூட்டுறவு துறை அமைச்சரின் நேர்முக உதவியாளரான சரவணன் மீது ஏற்கெனவே பணி நியமன ஊழல் விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவு போட்டிருந்தாலும், அதையும் தாண்டி வசூல் நடத்தி வருதாகக் கூறப்படுகிறது. இந்த வசூல் அமைச்சர் பெரியகருப்பனுக்கு தெரிந்து பாதி, தெரியாதது மீதி என்கிறார்கள் கூட்டுறவுத்துறை அதிகாரிகள்.
இது ஒருபுறமிருக்க, இப்போது குப்பைத் தொட்டி விவகாரம் சிவகங்கை மாவட்டத்தில் பிரளயத்தைக் கிளப்பி இருக்கிறது. சிவகங்கை மாவட்டத்தில் 521 ருவாய் கிராமங்கள் உள்ளன. அந்த ஊராட்சிகளுக்கு கொள்முதல் செய்யப்பட்ட குப்பை தொட்டியால், பல கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக பகீர் கிளம்பி உள்ளது.
இதுகுறித்து ஊராட்சி செயலாளர்கள் கூறுகையில், ‘‘இரு ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஊராட்சிகளுக்கு தேவையான தெருவிளக்குகள், குப்பை தொட்டிகள் உள்ளிட்ட பொருட்களை ஊராட்சி நிர்வாகங்களே கொள்முதல் செய்து வந்தன. தற்போது, மாவட்ட அளவிலான அதிகாரிகள், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளுக்கு தெருவிளக்கு, குப்பை தொட்டி ஆகியவற்றை சப்ளை செய்யும் ஆர்டர்களை, சிலருக்கு மட்டுமே வழங்க வேண்டும் என வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளனர்.
அவர்கள் ஊராட்சிகளுக்கு நேரடியாக குப்பைத் தொட்டிகளை கொடுத்து விட்டு, ஆன்லைன் மூலமாகவோ, காசோலையாகவோ பெற்றுச் செல்கின்றனர். அந்த குப்பைத் தொட்டிகளுக்கான தொகையை சந்தை விலையைவிட மிக அதிகமாக பெற்று வருகின்றனர். ஊராட்சிகளுக்கான தேவை இருக்கிறதா, இல்லையா என்றெல்லாம் பார்ப்பதில்லை. நான்கு அடி நீளம், நான்கு அடி அகலம், நான்கு அடி உயரம் உள்ள இரும்பு தகரத்தால் இந்த குப்பை தொட்டி செய்யப்பட்டுள்ளது. முன்புறம் குப்பையை எடுக்க கதவுகள்கூட அமைக்கப்படவில்லை. கீழ் பகுதியில் நான்கு சிறிய சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. எந்த பேப்ரிகேஷன் ஒர்க் ஷாப்பில் கேட்டாலும், இதன் மதிப்பு, 10 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சம் 25 ஆயிரம்கூட தேறாது என்கிறார்கள்.
ஆனால், ஊராட்சிகளுக்கு சப்ளை செய்யபவர்கள், ஒரு குப்பை தொட்டிக்கு, ஒரு தொட்டிக்கு, ரூ.86,000 வரை கணக்கு காட்டுகிறார்கள். பெரும்பாலான ஊராட்சிகளுக்கு குறைந்தது, 3 முதல் 10 குப்பை தொட்டிகள் வரை வழங்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டத்தில், 521 கிராமங்களுக்கு இந்த குப்பை தொட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு தொட்டிக்கு, 60,000 ஆயிரம் ரூபாய் இழப்பு என்றால், குறைந்த பட்சம் 500 குப்பை தொட்டிகளுக்கு ரூ.3 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது’’ என்கிறார்கள்.
மாவட்ட திட்ட அலுவலர்கள் இதுகுறித்துக் கூறுகையில், ' குப்பைத் தொட்டிகளின் அளவு, தரம் சரியாக உள்ளதா? என்று மட்டுமே நாங்கள் பார்ப்போம். சம்பந்தப்பட்ட துறைகளை சேர்ந்த அமைச்சர்கள் இவர்களுக்கு ஆர்டர் கொடுங்கள் என வாய்மொழி உத்தரவிடுகிறார்கள்'' என்கிறார்கள்.
ஊரக வளர்ச்சித்துறை மூலம் இந்த குப்பைத் தொட்டிக்கான ஆர்டர்கள் அந்தந்த மாவட்ட பொறுப்பு அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த அமைச்சர் தரப்பில் அவர்களது பினாமிகள் இந்த ஆர்டர்களை பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் ஆரம்பித்துள்ள இந்த குப்ப்பைத்தொட்டி விநியோகம், அடுத்தடுத்து பிற மாவட்டங்களிலும் நடைமுறைக்கு வர உள்ளது. சிவகங்கை மாவாட்டத்தில் மட்டுமே குப்பைத்தொட்டியில் இவ்வளவு கோடி சம்பாதிக்கிறார்கள் என்றால் தமிழகம் முழுவதும் எத்தனை கோடி ரூபாயை கல்லாக்கட்ட இருக்கிறார்களோ’’ என வயிற்றில் அடித்துக் கொள்கிறார்கள் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள்.
இதனை அடுத்து குப்பைத் தொட்டி ஊழலை பாஜக வட்டாரம் தோண்டி துருவ ஆரம்பித்துவிட்டதாக தகவல். ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தொடங்கி சம்மந்தப்பட்ட அனைத்து அமைச்சர்கள் நோக்கி விரைவில் அமலாக்கத்துறை பாய இருப்பதாக பாஜகவினர் கூறுகின்றனர். குப்பை தொட்டியில் ஊழல் செய்தவர்கள் செந்தில்பாலாஜி போல பல மாதங்கள் சிறையில் இருக்கப்போவது நிச்சயம் எனக் கூறுகிறார்கள் இந்தமுறை, அமைச்சர்களோடு, அதிகாரிகளும் அமலாக்கத்துறை வலையில் சிக்கப் போவது உறுதி என்கிறார்கள் இதனை நோட் போட்டு டெல்லி மேலிடத்துக்கு தகவலை அனுப்பி வரும் பாஜக நிர்வாகிகள்.
