MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தொடர் விடுமுறை! சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட அரசு போக்குவரத்துக் கழகம்! பயணிகள் கொண்டாட்டம்!

தொடர் விடுமுறை! சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட அரசு போக்குவரத்துக் கழகம்! பயணிகள் கொண்டாட்டம்!

தொடர் விடுமுறையையொட்டி சென்னை கிளாம்பாக்கம் மற்றும் கோயம்பேட்டில் இருந்து பல்வேறு பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இது குறித்து முழு விவரங்களை பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar r
Published : Nov 19 2025, 08:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
வார விடுமுறை
Image Credit : our own

வார விடுமுறை

தமிழ்நாட்டில் வார இறுதி நாட்களில் சென்னை கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பெங்களூரு, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் வரும் 21ம் தேதி (வெள்ளிக்கிழமை), 22ம் தேதி (சனிக்கிழமை) மற்றும் 23ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வார விடுமுறை மற்றும் முகூர்த்த தினங்கள் வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

24
சிறப்பு பேருந்துகள் இயக்கம்
Image Credit : our own

சிறப்பு பேருந்துகள் இயக்கம்

அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 21/11/2025 (வெள்ளிக்கிழமை) அன்று 340 பேருந்துகளும், 22/11/2025 (சனிக்கிழமை) 350 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு! எத்தனை நாட்கள் விடுமுறை! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Related image2
2026ம் ஆண்டில் எந்த மாதத்தில் அதிக விடுமுறை! ஜனவரியில் கொண்டாட்டம், ஜூன் மாதத்தில் காத்திருக்கும் அதிர்ச்சி!
34
பெங்களூரு, கோவை
Image Credit : our own

பெங்களூரு, கோவை

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 21/11/2025 வெள்ளிக் கிழமை அன்று 55 பேருந்துகளும் 22/11/2025 சனிக்கிழமை அன்று 55 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இதேபோல் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 100 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

முன்பதிவு மும்முரம்

மாதாவரத்திலிருந்து 21/11/2025 மற்றும் 22/11/2025 ஆகிய நாட்களில் 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 9,556 பயணிகளும் சனிக்கிழமை 3,732 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 9,635 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.

44
எப்படி முன்பதிவு செய்வது?
Image Credit : Asianet News

எப்படி முன்பதிவு செய்வது?

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம். இந்த சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
விடுமுறை
விடுமுறைக்கால சிறப்பு பேருந்து
டிஎன்எஸ்டிசி
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்.! விடுமுறை தொடர்பான சூப்பர் அறிவிப்பு வெளியானது!
Recommended image2
1000, 2000 இல்ல ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10000..! பழனிசாமி ஜாக்பாட் அறிவிப்பு..
Recommended image3
தவெக கூறுவது அத்தனையும் பொய்! விதியை மீறிய விஜய் மீது நடவடிக்கையா? உண்மையை புட்டு புட்டு வைத்த காவல்துறை
Related Stories
Recommended image1
அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு! எத்தனை நாட்கள் விடுமுறை! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Recommended image2
2026ம் ஆண்டில் எந்த மாதத்தில் அதிக விடுமுறை! ஜனவரியில் கொண்டாட்டம், ஜூன் மாதத்தில் காத்திருக்கும் அதிர்ச்சி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved