MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • ஜெயலலிதா முதல் விஜய் வரை.! ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் வேட்பாளர் யார்?

ஜெயலலிதா முதல் விஜய் வரை.! ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் வேட்பாளர் யார்?

How Many Constituencies Can a Candidate Contest in India? : ஒரு வேட்பாளர் எத்தனை தொகுதிகளில் போட்டியிடலாம்? இதற்கு முன் முதல்வர் வேட்பாளர்களாக இருந்தவர்கள் எத்தனை தொகுதிகளில் போட்டியிட்டார்கள்? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ramprasath S
Published : Mar 30 2026, 03:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஒரு வேட்பாளர் இரு தொகுதிகளில் போட்டியிட முடியுமா?
Image Credit : stockPhoto

ஒரு வேட்பாளர் இரு தொகுதிகளில் போட்டியிட முடியுமா?

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் களம் தற்போது சூடு பிடித்துள்ளது. ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ள நிலையில் ஏப்ரல் 6ஆம் தேதி வேப்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வேட்பு மனு தாக்கல் செய்யத் தொடங்கி இருக்கின்றனர். 

புதிதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் பெரம்பூர், மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார். இந்த நிலையில் ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக எத்தனை தொகுதிகளில் போட்டியிட முடியும்? என்கிற கேள்வி அனைவருக்கும் எழுந்துள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

25
ஒரு வேட்பாளர் எத்தனை தொகுதிகளில் போட்டியிடலாம்?
Image Credit : Gemini AI

ஒரு வேட்பாளர் எத்தனை தொகுதிகளில் போட்டியிடலாம்?

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 33(7) படி ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக இரண்டு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும். 1996 ஆம் ஆண்டிற்கு முன்னர் ஒருவர் எத்தனை தொகுதிகளில் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்கிற நிலை வந்தது. ஆனால் இதில் பல சிக்கல்கள் எழுந்ததால், தேர்தல் ஆணையம் இந்த சட்டத்தில் சீர்திருத்தத்தை கொண்டு வர முடிவெடுத்தது. 

அதை தொடர்ந்து 1996 ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக இரண்டு தொகுதிகளில் போட்டியிட முடியும் என்கிற நிலை ஏற்படுத்தப்பட்டது. இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் ஏதேனும் ஒரு தொகுதியை 14 நாட்களுக்குள் ராஜினாமா செய்ய வேண்டும் என்கிற சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

Related Articles

Related image1
திமுகவும், அதிமுகவும் அதிகபட்சம் எத்தனை தொகுதிகளில் ஜெயிச்சு இருக்காங்க தெரியுமா? சுவாரஸ்ய தகவல்.!
Related image2
ஜெ.வை எதிர்த்து கட்சி தொடங்கி ஜெ.வுடனே கூட்டணி வைத்த மூப்பனார்.! தாமாக பின்னர் என்ன ஆனது? சுவாரஸ்ய கதை.!
35
4 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்த ஜெயலலிதா
Image Credit : Getty

4 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்த ஜெயலலிதா

தமிழ்நாடு மற்றும் இந்திய அரசியலில் முக்கிய தலைவர்கள் பலர் பாதுகாப்பு கருதியோ அல்லது கட்சியின் செல்வாக்கை நிரூபிக்கவோ, இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டுள்ளனர். 2001 ஆம் ஆண்டு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சட்டமன்ற தேர்தலில் நான்கு தொகுதிகளில் களமிறங்க முடிவு செய்தார். ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி, புவனகிரி மற்றும் புதுக்கோட்டை ஆகிய நான்கு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்தார். 

ஆனால் சட்டப்படி இரண்டுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட முடியாது என்பதால் அவரது அனைத்து மனுக்களும் நிராகரிக்கப்பட்டது. எனவே 2001 ஆம் ஆண்டு தேர்தலில் அவரால் போட்டியிட முடியவில்லை. பின்னர் இடைத்தேர்தல் மூலம் வெற்றி பெற்று அவர் முதலமைச்சரானார்.

45
இந்தியாவில் இரு தொகுதிகளில் போட்டியிட்ட தலைவர்கள்
Image Credit : Narendra Modi Rahul Gandhi FB

இந்தியாவில் இரு தொகுதிகளில் போட்டியிட்ட தலைவர்கள்

இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜய், வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இந்தியாவைப் பொறுத்தவரை 2014 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி உத்திரபிரதேசத்தில் உள்ள வாரணாசி மற்றும் குஜராத் மாநிலத்தில் உள்ள வதேரா ஆகிய இரண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார். அதே போல் 2019 ஆம் ஆண்டு ராகுல் காந்தி உத்தரப்பிரதேசம் மாநிலம் அமேதி மற்றும் கேரளாவின் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

55
இரண்டு தொகுதிகளில் போட்டியிடாத ஒரே தலைவர்
Image Credit : X/Twitter

இரண்டு தொகுதிகளில் போட்டியிடாத ஒரே தலைவர்

இந்திய தேர்தல் சட்டத்தின் படி ஒரே தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெறும் பட்சத்தில் இரண்டு தொகுதிகளில் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும். தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட 10 நாட்களுக்குள் வேட்பாளர் தான் எந்த தொகுதியை ராஜினாமா செய்யப் போகிறோம் என்பதை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டும். ஒருவேளை 10 நாட்களுக்குள் அறிவிக்காவிட்டால் இரண்டு தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் நடைபெறும்.

தமிழகத்தில் ஐந்து முறை முதல்வராக இருந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதி தனது நீண்ட கால அரசியல் வரலாற்றில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசியல்
அரசியல்ல சாதாரணமப்பா!

Latest Videos
Recommended Stories
Recommended image1
மீண்டும் விசிலடிக்கும் குக்கர்..! அமமுக-விற்கு பொதுச் சின்னம் ஒதுக்கீடு: தொண்டர்கள் உற்சாகம்.
Recommended image2
ஒரே ஃபேமிலியில் இருந்து களம் காணும் 3 வேட்பாளர்கள்... 2026 தேர்தலில் இப்படி ஒரு குடும்ப அரசியலா?
Recommended image3
சீமானுக்கு வெற்றி உறுதியாம்.! ரகசிய சர்வேயால் கதிகலங்கும் எதிர்க்கட்சிகள்.! அப்போ கோட்டையில் சம்பவம் இருக்கு.!
Related Stories
Recommended image1
திமுகவும், அதிமுகவும் அதிகபட்சம் எத்தனை தொகுதிகளில் ஜெயிச்சு இருக்காங்க தெரியுமா? சுவாரஸ்ய தகவல்.!
Recommended image2
ஜெ.வை எதிர்த்து கட்சி தொடங்கி ஜெ.வுடனே கூட்டணி வைத்த மூப்பனார்.! தாமாக பின்னர் என்ன ஆனது? சுவாரஸ்ய கதை.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved