MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • திமுகவும், அதிமுகவும் அதிகபட்சம் எத்தனை தொகுதிகளில் ஜெயிச்சு இருக்காங்க தெரியுமா? சுவாரஸ்ய தகவல்.!

திமுகவும், அதிமுகவும் அதிகபட்சம் எத்தனை தொகுதிகளில் ஜெயிச்சு இருக்காங்க தெரியுமா? சுவாரஸ்ய தகவல்.!

DMK vs AIADMK Highest Seats History : தமிழக அரசியல் களம் பல்வேறு திருப்புமுனைகளையும், சுவாரஸ்யங்களையும் சந்தித்துள்ளது. அந்த வகையில் மிக திருப்புமுனையை ஏற்படுத்திய சில தேர்தல்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ramprasath S
Published : Mar 25 2026, 05:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தமிழக தேர்தல் சுவாரஸ்யங்கள்
Image Credit : Asianet News

தமிழக தேர்தல் சுவாரஸ்யங்கள்

இந்திய நாட்டில் மிக முக்கியமான மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. தமிழ்நாட்டில் நடக்கும் அரசியல் நகர்வுகள், சட்டமன்றத் தேர்தல்கள் ஆகியவை மற்ற மாநிலங்களாலும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. திராவிட இயக்கங்கள் உருவான பிறகு தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஒரு கட்சி அதிக இடங்களை பிடித்ததும், அதே கட்சி படுதோல்வியை சந்தித்ததும் தமிழக அரசியல் வரலாற்றில் நடைபெற்றுள்ளது. அந்த சுவாரஸ்ய நிகழ்வுகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

25
184 இடங்களில் வென்ற கருணாநிதி
Image Credit : Getty

184 இடங்களில் வென்ற கருணாநிதி

1969 ஆம் ஆண்டு அண்ணா மறைந்த பின்னர் 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையிலான திமுக தனித்து 184 தொகுதிகளில் வெற்றி வரலாற்று சாதனை படைத்தது. கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து மொத்தம் 205 இடங்களை வென்ற திமுக, கருணாநிதி தலைமையில் அரியணை ஏறியது. காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட பிளவு, அண்ணாவின் மறைவு ஆகியவை திமுகவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. அதன் பிறகு திமுகவால் தொடர்ந்து இரண்டாவது முறை ஆட்சியை தக்க வைக்க முடியவில்லை.

Related Articles

Related image1
மகளிர் வாக்கு அதிகம் உள்ள 10 தொகுதிகள்.! இந்த தொகுதிகளில் திமுக கிளியர் ஸ்வீப் பண்ணப்போறாங்க.!
Related image2
திமுகவுக்கு சவாலாக இருக்கும் 10 தொகுதிகள்.! இந்த தொகுதிகளில் தலைகீழா நின்னாலும் திமுகவால் ஜெயிக்கவே முடியாது.!
35
1996-ல் திமுக 173 இடங்களில் வெற்றி
Image Credit : our own

1996-ல் திமுக 173 இடங்களில் வெற்றி

ராஜீவ் காந்தி படுகொலையின் போது 1991 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக மிகப் பெரும் தோல்வியை சந்தித்தது. கருணாநிதி மற்றும் பரிதி இளம்வழுதி ஆகிய இரண்டு பேர் மட்டுமே திமுக வெற்றி பெற்றிருந்தனர். ஆனால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நடைபெற்ற 1996 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக 173 இடங்களில் தனித்து வெற்றி பெற்று மீண்டும் வலுவான ஆட்சியை அமைத்தது. அதிக இடங்களை பிடித்து இரண்டு முறை ஆட்சி அமைத்த கட்சி என்கிற சாதனையை திமுக படைத்தது. 1996 இல் அதிமுக நான்கு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. ஜெயலலிதா பர்கூர் தொகுதியில் தோல்வி அடைந்திருந்தார். 1991 ஆம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதா அதிகபட்சமாக 164 இடங்களில் வெற்றி பெற்றிருந்தார். இதுவே அவர் வெற்றி பெற்ற அதிகபட்ச தொகுதிகளாகும்.

45
இரண்டாவது முறை ஆட்சியமைத்த ஜெயலலிதா
Image Credit : Getty

இரண்டாவது முறை ஆட்சியமைத்த ஜெயலலிதா

1989 ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழக அரசியல் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சி புரிந்து வந்தன. 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஜெயலலிதா, தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்றிருந்தார். கடந்த 50 ஆண்டுகால தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு கட்சி இரண்டாவது முறை ஆட்சியைப் பிடித்திருந்தது 2016 ஆம் ஆண்டு மட்டுமே. அதன் பின்னர் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக 125 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருந்தது. இது திமுகவுக்கு மீள் வெற்றியாக பார்க்கப்பட்டது.

55
திமுக சாதனை புரியுமா?
Image Credit : Asianet News

திமுக சாதனை புரியுமா?

2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக மீண்டும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக தனித்து வென்ற 184 என்கிற எண்ணிக்கை இன்றுவரை எந்த கட்சியாலும் முறியடிக்க முடியாத சாதனையாக இருக்கிறது. தற்போது வரை இது பல கட்சிகளுக்கும், ஏன் திமுகவிற்கே எட்டா கனியாகவே இருக்கிறது. வருகிற 2026 ஆம் ஆண்டு திமுக தனது பழைய வரலாற்றை முறியடித்து தொடர்ந்து இரண்டாவது முறையாக அரியணை ஏறுமா? எத்தனை தொகுதிகளை வெல்லப்போகிறது என்கிற ஆர்வம் தமிழக மக்களிடையே எழுந்துள்ளது.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசியல் சுவாரஸ்யம்
அரசியல்
அரசியல்ல சாதாரணமப்பா!
திமுக
Latest Videos
Recommended Stories
Recommended image1
30 ஆண்டுகளாக அதிமுகவுக்கு தண்ணீர் காட்டும் ஒற்றை தொகுதி..! சக்கரபாணியின் 'சிக்ஸர்' சாதனை..
Recommended image2
அதிமுக கூட்டணியில் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
Recommended image3
தமிழ்நாட்டில் ரெக்கார்டு பிரேக்கிங் வாக்குப்பதிவை கண்ட தேர்தல் பற்றி தெரியுமா?
Related Stories
Recommended image1
மகளிர் வாக்கு அதிகம் உள்ள 10 தொகுதிகள்.! இந்த தொகுதிகளில் திமுக கிளியர் ஸ்வீப் பண்ணப்போறாங்க.!
Recommended image2
திமுகவுக்கு சவாலாக இருக்கும் 10 தொகுதிகள்.! இந்த தொகுதிகளில் தலைகீழா நின்னாலும் திமுகவால் ஜெயிக்கவே முடியாது.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved