- Home
- Politics
- லெப்டில் Ex எம்பி... ரைட்டில் எம்.எல்.ஏ..! கலக்கும் செங்கோட்டையன்... கதிகலங்கும் எடப்பாடி..!
லெப்டில் Ex எம்பி... ரைட்டில் எம்.எல்.ஏ..! கலக்கும் செங்கோட்டையன்... கதிகலங்கும் எடப்பாடி..!
அதிருப்தியில் இருந்து வந்த சத்தியபாமா செங்கோட்டையனின் விசுவாசியாக மாறிவிட்டார். இப்படி எடப்பாடி பழனிசாமியால் ஓரங்கட்டபட்ட, ஒதுங்கி இருந்த முக்கியப்பிரமுகர்களும் செங்கோட்டையனின் பின்னால் திரண்டு வருவதால் எடப்பாடியார் தரப்பு திகிலடைந்து கிடக்கிறது.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர் கொடி தூக்குவதும், பிறகு சமாதான கொடி பறக்க விடுவதுமாக இருந்த செங்கோட்டையன் இந்த முறை புயலாக சீறிவிட்டார். இந்த முறை அதிமுக தலைமை மீது அதிருப்தியாக இருக்கக்கூடிய எம்.எல்.ஏ.,க்களையும், சீனியர்களையும் தனது பக்கம் வளைத்துக் கொண்டிருக்கிறார் செங்கோட்டையன். அதிமுகவில் இருந் பிரிந்தவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும். சசிகலா, ஓ.பி.எஸ், போன்றவர்களை மீண்டும் கட்சியில் தாமதப்படுத்தாமல் இணைத்துக் கொள்ள எடப்பாடி பழனிசாமி முன்வர வேண்டும். இல்லையென்றால் அவர்களை ஒருங்கிணைக்கும் பணியில் தாமே இறங்கி செயல்படுத்துவேன் என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார் செங்கோட்டையன். இது அதிமுகவில் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ள பலரும் இப்போதே செங்கோட்டையன் பக்கமாக அணி திரண்டு வருகின்றனர். இன்று கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்து மனம் விட்டு செங்கோட்டையன் பேசும்போது அவரது அருகில் இடமும், வலமுமாக அதிமுக முன்னாள் எம்.பி, சத்தியபாமாவும், எம்.எல்.ஏ பண்ணாரியும் அமர்ந்திருந்தது எடப்பாடி பழனிசாமி தரப்பை கதிகலங்க வைத்துள்ளது.
செங்கோட்டையனின் இன்றைய செய்தியாளர் சந்திப்புக்கு முன்பே கோபிசெட்டிபாளையத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பவானிசாகர் எம்.எல்.ஏ பண்ணாரியும் கலந்து கொண்டார். அவர் செங்கோட்டையன்ப் பக்கம் சாய்வதற்கு காரணம், இவருக்கு மீண்டும் சீட் உறுதி என சொன்ன அதிமுக தலைமை இப்போது வேறு ஒருவருக்கு சீட்டு கொடுப்பதாக முடிவு செய்துள்ளது.
இதனை தெரிந்து கொண்டு செங்கோட்டையனுக்கு ஆதரவு கொடுத்து இருக்கிறார் பண்ணாரி. டி.டி.வி.தினகரன் ஆதரவாளராக இருந்து அதிமுகவுக்கு வந்த ஈரோடு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் எஸ்.ஆர்.எஸ் செல்வமும், செங்கோட்டையனுக்கு ஆதரவு தெரிவித்து கோபிசெட்டிபாளையத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா. நீலகிரி மாவட்ட மகளிர் அணி செயலாளராகவும், உதகமண்டலம் நகர மன்றத் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர். 2015-ஆம் ஆண்டு அதிமுகவின் செயற்குழு உறுப்பினர்கள் பட்டியலில் அவரது பெயர் இடம்பெற்றிருந்தது.
சத்தியபாமா திருப்பூர் தொகுதியில் இருந்து 2014 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக வெற்றி பெற்று எம்.பி.யாக பதவி வகித்தவர். 2018-ல், அவரது கணவர் வாசு, சத்தியபாமாவை கத்தியால் குத்த முயன்றதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது தனிப்பட்ட வாழ்க்கையில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலா அணி, ஓ.பி.எஸ் அணி என இரண்டாகப் பிரிந்தது. அப்போது நியாயம் கேட்டு ஓ.பி.எஸ் ஜெயலதாவின் நினைவிடத்தில் தியானம் மேற்கொண்டார். பல எம்.எல்.ஏக்களும், எம்.பி-க்களும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் ஓ.பி.எஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
பி.ஆர்.சுந்தரம், கே.அசோக்குமார், ஆர்.வனரோஜா, ஜெய்சிங் தியாக ராஜ் நட்டர்ஜி, ஆர்.பி.மருதராஜா, பி.செங்குட்டுவன், எஸ்.ராஜேந் திரன், பார்த்திபன் ஆகிய 9 மக்களவை உறுப்பினர்கள், ஆர்.லட்சு மணன், வி.மைத்ரேயன் ஆகிய 2 மாநிலங்களவை உறுப்பினர்கள் என 11 எம்.பி.க்கள் ஓபிஎஸ்-ஐ நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். அந்த 11 மக்களவை எம்.பி.க்களில் ஒருவராக இருந்தவர் சத்தியபாமா.
.மீண்டும் ஓ.பி.எஸ் அதிமுகவில் ஒருங்கிணைந்த போது சத்தியபாவு வந்து இணைந்தார். ஆனால், ஓ.பி.எஸ் உடன் சென்றவர் என்பதால் சத்தியபாமாவுக்கு எடப்பாடி பழனிசாமி எணந் முக்கியத்துவமோ, பொறுப்போ கொடுக்கவில்லை. இதனால், அதிருப்தியில் இருந்து வந்த சத்தியபாமா செங்கோட்டையனின் விசுவாசியாக மாறிவிட்டார். இப்படி எடப்பாடி பழனிசாமியால் ஓரங்கட்டபட்ட, ஒதுங்கி இருந்த முக்கியப்பிரமுகர்களும் செங்கோட்டையனின் பின்னால் திரண்டு வருவதால் எடப்பாடி பழனிசாமி தரப்பு திகிலடைந்து கிடக்கிறது.