- Home
- Politics
- விஜய் வாக்குகளால் கதிகலங்கும் திமுக..! கடைசியில் கனிமொழியை நம்பி இருக்கும் மு.க.ஸ்டாலின்..!
விஜய் வாக்குகளால் கதிகலங்கும் திமுக..! கடைசியில் கனிமொழியை நம்பி இருக்கும் மு.க.ஸ்டாலின்..!
சுற்றிச் சுற்றி நெருக்கடிகள் இருக்க, இவை எல்லாவற்றையும் சமாளிக்க கூடிய வகையில் புதிய ரூட்டை எடுத்து இருக்கிறார் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்.

தங்களுடைய வலுவான வாக்கு வங்கியாக இருந்தவர்களே இன்னொரு பக்கம் எதிர்த்து போராட்ட அரசியலை முன்னெடுத்து இருக்கிறார்கள். கூட்டணி கட்சியினரே குடைச்சல் கொடுக்கவும் தொடங்கி இருக்கிறார்கள். இப்படி சுற்றிச் சுற்றி நெருக்கடிகள் இருக்க, இவை எல்லாவற்றையும் சமாளிக்க கூடிய வகையில் புதிய ரூட்டை எடுத்து இருக்கிறார் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின். அந்த வகையில் திமுக துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழிக்கு கூடுதல் பொறுப்புகளையும் கொடுத்திருக்கிறார் ஸ்டாலின். அதில் முக்கியமாக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை உருவாக்கி, அதற்கு தலைமை பொறுப்பையும் கனிமொழிக்கு கொடுத்திருக்கிறார்.
இந்த குழுவில் அமைச்சர்கள் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா, கார்த்திகேய சிவ சேனாபதி உள்ளிட்ட பல முக்கியமானவர்கள் இடம் பிடித்திருக்கிறார்கள். இளைஞர்கள், பெண்கள், சிறுபான்மையினர், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இப்படி எல்லோருடைய பிரச்சினைகளையும் தீர்க்கக் கூடிய வகையில் திட்டங்களை தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறது இந்த டீம். இதையொட்டி மாவட்டம் தோறும் பலதரப்பட்டவர்களை சந்திக்க இந்த டீம் முடிவு எடுத்து இருக்கிறது. பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் அமைப்பினர், தொழிலாளர்கள் அமைப்பினர், மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர், சமூக ஆர்வலர்கள், வாகன போக்குவரத்து சங்கத்தினர் என எல்லோரையும் சந்தித்து, அவர்களிடம் கருத்துக்களை கேட்டு, அவர்களுடைய பிரச்சனைகள் எல்லாம் என்ன? எனக் கேட்டு வாக்குறுதிகளை தயாரிக்கவும் திட்டமிட்டு இருக்கிறார்கள்.
ஆனால், அதில்தான் பெரிய தலைவலியை இருக்கிறது. ஏற்கனவே பல வாக்குறுதிகளை 2021 கொடுத்ததை நீங்கள் நிறைவேற்றலை என கேள்வி மேல் கேள்விகள் வந்து கொண்டிருக்கிறது. அந்த கேள்விகளை அதிகப்படுத்த வேண்டும் என திட்டமிட்டு எதிர்க்கட்சிகள் செயல்பட்டுட்டு கொண்டிருக்கிறார்கள். ஆகையால் மக்களை சந்திக்கிறபோது பல கேள்விகள் வரும். நீங்க இதை செய்தீர்களா? அதை செய்தீர்களா? என அந்த கேள்விகளை எல்லாம் சமாளித்து நாங்கள் செய்திருக்கோம் என்கிற அந்த பட்டியலையும் கொடுக்க வேண்டும். அதே நேரத்தில் தொடர்ந்து ஆதரவு கொடுங்கள். அடுத்த கட்டமாக இவை எல்லாவற்றையும் நிறைவேற்றுவோம் என மக்களுடைய நம்பிக்கையும் பெறவேண்டும். இது ரொம்ப கஷ்டமான ஒரு டாஸ்க். அதை புரிந்து கொண்டுதான் அந்த முக்கியமான பொறுப்பை கனிமொழி அதை சமாளிப்பார் என்று அவஎ தலைமையில் கொடுத்து இருக்கிறார்கள் ஸ்டாலின் என்கிறார்கள் திமுக சீனியர்கள்.
அது மட்டுமில்லாமல் திருப்பூரில் டிசம்பர் 29ஆம் தேதி மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு, கனிமொழி தலைமையில் நடக்க இருக்கிறது. மேற்கு மண்டலத்தில் சமீபட்தில் விஜய், எடப்பாடி பழனிச்சாமி நடத்தினார்கள். இப்போது அங்கேயும் டார்கெட் செய்கிறது திமுக. இதில் முக்கியமாக இந்த தேர்தலில் வெற்றிய முடிவு செய்யக்கூடிய முக்கியமான வாக்குகள் என்றால் வெற்றி தோல்வி தீர்மானிப்பதில் பெண்களுடைய வாக்குகள், இளைஞர்களுடைய வாக்குகள், குடும்பத்தினருடைய வாக்குகள். மகளிர் உரிமைத்தொகை, கட்டணமில்லா பேருந்து பயணம் இப்படி பல விஷயங்களை ஆளும் கட்சி முன்னெடுத்திருந்தாலும் அது முழுமையாக மக்களிடம் போய் சேர்ந்திருக்கிறதா? அதை முழுமையாக மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். வாக்குகளாக மறுபடியும் மாற்ற வேண்டும். அதற்காகத்தான் இந்த முக்கிய பொறுப்பை கனிமொழியிடம் கொடுத்து இருக்கிறார்கள்.
இந்த வாக்குகள் வந்தால்தான் ஆட்சி தொடரும். இதுதான் அவங்களுக்கு வந்திருக்கக்கூடிய ரிப்போர்ட். அதை நோக்கி நகர்கிறார்கள் ஆளும் தரப்பினர். இந்த வாக்குறுதிகளிலும் அடுத்த கட்டமாக பெண்களுக்கு, இளைஞர்களுக்கு, குடும்பத்தினருக்கு அவர்களை கவர்கிற மாதிரி நிறைய திட்டங்களை வகுக்க வேண்டும் என ஆலோசனை செய்து இருக்கிறார்கள். ஆகையால் இந்த தேர்தலை பொருத்தவரை ஆளும் தரப்புக்கும் ஒரு கடினமான டாஸ்க் தான். நிச்சயமா இந்த டாஸ்கை நாங்கள் ஜெயிப்போம் என தெரிவிக்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தினர்.
