- Home
- Politics
- பணத்தை பெரிதாக நினைக்காமல் தியாக வாழ்க்கை வாழும் ஸ்டாலின்- உதயநிதி..! நெஞ்சு புடைக்க புகழும் கருணாஸ்..!
பணத்தை பெரிதாக நினைக்காமல் தியாக வாழ்க்கை வாழும் ஸ்டாலின்- உதயநிதி..! நெஞ்சு புடைக்க புகழும் கருணாஸ்..!
அவர் எதைச் சார்ந்து வருகிறார், எந்த உள்நோக்கத்துடன் வருகிறார். 200 கோடியை இழந்து நான் வருகிறேன் என்றால் நான் சொல்கிறேன் 2 லட்சம் கோடி சம்பாதிப்பதற்காக வருகிறார் விஜய்.

‘‘நீங்கள் வாழ்க்கையில் ஏதாவது பாவம் செய்ய வேண்டும் என நினைத்தீர்கள் என்றால் பாஜகவுக்கு ஓட்டு போடுங்கள்’’ எனத் தெரிவித்துள்ளார் நடிகரும், அரசியல்வாதியுமான கருணாஸ்.
இதுகுறித்து பேசிய அவர், ‘‘நமக்கு மோடி சொந்தக்காரன் எல்லாம் கிடையாது. அவர் எந்த ஊர்க்காரர் என்பது தெரியாது. அவர் பேசுவது நமக்கு புரியாது. நான் பேசுவது அந்தாளுக்கும் புரியாது. ஆகையால் இங்கு பிரச்சனை எதுவுமே கிடையாது. எனக்கு நீங்கள் முக்கியம் என்று நான் நினைக்கிறேன். நான் சாப்பிட்டது, போட்டிருக்கிற சட்டை முதற்கொண்டு நான் நடித்து, பாடி அதன் மூலம் கிடைத்த காசு. அப்போ அந்த காசை கொடுத்தது நீங்கள் தானே. அதற்காகச் சொல்கிறேன். அது என்னைப் போன்ற சின்ன நடிகனுக்கு இருக்கிறது. 200 கோடி சம்பளம் வாங்குகின்ற பெரிய நடிகருக்கு இருக்க வேண்டும் அல்லவா? அந்த உணர்வு இருக்க வேண்டும். இன்றைக்கு அந்த சித்தாந்தத்திற்கு எதிராகவே, தமிழர்களுக்கு எதிராகவே, தமிழர்களுக்கு கொள்கைக்கு எதிராகவே ஒரு மக்களால் உருவாக்கப்பட்ட, மக்களால் வளர்ந்த தன்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்த பிறகு எல்லோரும் சொல்லிக் கொள்கிறார்கள்.
எந்திரன் படம் எப்போது வந்தது? ரஜினி சாரோட படம் எந்திரன். அந்த படத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், ஏ.ஆர்.ரகுமான், சங்கர் அப்புறம் ஒரு ஹிந்தி நடிகர். அதற்கடுத்து பெரிய சம்பளம் வாங்கிய நடிகன் நான். அந்த படத்தில் ஆறாவது பெரிய சம்பளம் வாங்கியவன் நான் தான். ஆனால், அப்பொழுதுதான் நான் சார்ந்த மக்களுடைய அடிப்படை உரிமைகள், மறுக்கப்படுகின்ற உரிமைகள், மக்கள் தொகையின் அடிப்படையில் என் மக்களுக்கான இட ஒதுக்கீடு பெறுகின்ற நிலையை வரையறுத்து அதற்காகத்தான் நான் இந்த முக்குலத்தோர் புலிப்படை கட்சியை ஆரம்பித்தேன்.
இப்போது நான் பொருளாதார ரீதியாக அதற்கு பின்னால் கீழே தான் விழுந்திருக்கிறேன். ஆனால் ஏதோ ஒரு பத்து பேருக்காவது உண்மையாக வேலை செய்து கொண்டிருக்கிறேன் என்கிற சந்தோஷம் என் மனதிற்குள் இருக்கிறது. இப்போது 200 கோடி ரூபாய் வருமானத்தை விட்டுவிட்டு ஒரு நடிகர் வருகிறார். ஏற்கனவே தான் உன்னிடம் 2000 கோடி ரூபாய் இருக்கிறதே. இருந்தால் என்ன? இல்லாட்டி என்ன? ஒரு அக்கவுண்ட் நம்பர் தான் எச்டிஎப்சி பேங்கில் எனக்கு இருக்கிறது. என் போனை எடுத்து ஓபன் செய்து பாருங்கள். அதில் குறைந்தபட்சம் ஒரு 50 ஆயிரம் ரூபாய் இருந்தால் பெரிய விஷயம். ஐம்பதாயிரம் கூட சேவிங்கில் நான் வைத்துக் கொண்டதில்லை. 200 கோடி வாங்குபவரை எதிர்த்து பேசுகிறேன் என எத்தனை பேர் கேட்டிருப்பார்கள். காசு இன்றைக்கு இருக்கும், நாளைக்கு போய்விடும். அது இங்கு பிரச்சனை இல்லை.
200 கோடி இழந்த விஜய் ஒரு சங்கி. இது ஒரு பெரிய விளையாட்டு. இன்றைக்கு இந்த தமிழ்நாட்டிற்குள் தமிழர்களை பிரித்தாண்டு பாஜக ஏதாவது உருவத்தில் தமிழகத்தில் தன்னுடைய காலை பதிக்க வேண்டும் என்று நினைக்கிறது. அது சத்தியமாக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கும் வரை, அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் இருக்கும் வரை, என்னை போன்ற மனிதநேயம், மதத்தின் பெயரால் மக்களை பிரிக்கின்ற அந்த பாசிச சக்தியை எதிர்கின்ற, கடைசி உயிர் இருக்கும் வரை உங்களால் தமிழகத்திற்குள் காலூன்ற முடியாது. அது நயினராக இருக்கட்டும் அது அவரது நைனாவாக இருக்கட்டும். யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். அதற்கு வாய்ப்பை நாம் கொடுத்து விடக்கூடாது. நீங்கள் வாழ்க்கையில் ஏதாவது பாவம் செய்ய வேண்டும் என நினைத்தீர்கள் என்றால் பாஜகவுக்கு ஓட்டு போடுங்கள்.
இந்த நிலையில் அவர் வருகிறார், இவர் வருகிறார், எவர் வேண்டுமானாலும் வரலாம் போகலாம். அது பெரிதல்ல. அவர் எதைச் சார்ந்து வருகிறார், எந்த உள்நோக்கத்துடன் வருகிறார். 200 கோடியை இழந்து நான் வருகிறேன் என்றால் நான் சொல்கிறேன் 2 லட்சம் கோடி சம்பாதிப்பதற்காக வருகிறார் விஜய். ஆனால் இங்கு எத்தனை கோடியும் பெரிதல்ல என்று நினைத்து வாழக்கூடிய, தியாக வாழ்க்கை வாழக்கூடிய, மக்களுக்காக வாழ்க்கை வாழக்கூடிய தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவருடைய மகன் துணை முதல்வராக இருக்கக்கூடிய உதயநிதி ஸ்டாலின் வருகின்ற பொழுதுதான் நமது உரிமைகள், நமது எதிர்கால சந்ததிகள் இந்த தமிழ்நாட்டிற்கான பாதுகாப்பு, இந்த மாநிலத்தினுடைய சுயாட்சி சட்ட ரீதியாக பாதுகாக்கப்படும்’’ எனப்பேசினார் கருணாஸ்.
