- Home
- Politics
- அரசு பள்ளி ஆசிரியர்களிடம் உறுதியளித்த திமுக அரசு..! விரைவில் அன்பில் மகேஷ் வெளியிடப்போகும் அறிவிப்பு..!
அரசு பள்ளி ஆசிரியர்களிடம் உறுதியளித்த திமுக அரசு..! விரைவில் அன்பில் மகேஷ் வெளியிடப்போகும் அறிவிப்பு..!
பழைய பென்ஷன் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிக் கொண்டு வருகிற அரசு பள்ளி ஆசிரியர்களை தேர்தல் சமயத்தில் கூலாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், அவர்களது வேலையை காப்பாற்றித் தருகிற உறுதிமொழியை கோட்டை வட்டாரம் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

தொடரும் ஆசிரியர்களின் போராட்டம்
பள்ளிக்கல்வித்துறையால் அறிவிக்கப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டதில் அரசியல் பின்னணி இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் அரசு பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் தொடர்புடைய அமைப்புகள் தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளுக்காக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஓய்வூதியம், சம்பள உயர்வு, பணியிட பாதுகாப்பு, சம வேலைக்கு சம ஊதியம், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீட்டெடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன் வைத்து 2025 ஆம் ஆண்டில் இத்தகைய போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
உச்ச நீதிமன்ற டெட் தேர்வு தீர்ப்பு
இது ஒருபுறமி்ருக்க, இப்போது பணியில் இருக்கிற அரசு பள்ளி ஆசிரியர்கள் வேலையில் தொடர்வதற்கு டெட் எனச் சொல்லப்படும் ஆசிரியர் தேர்வு கட்டாயம் என்றும் அந்தத் தேர்வில் வெற்றிபெற்றால் மட்டுமே வேலையில் இருக்க முடியும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இதற்கான சிறப்பு தேர்வு நடத்த 19ஆம் தேதி பள்ளி கல்வித்துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
அமைச்சர் அன்பில் மகேஷுக்கு தெரியாமல் இந்த அறிவிப்பு வெளியானதால் அமைச்சர் தரப்பினர் கொதித்துப்போய் விட்டனர். அரசு பள்ளி ஆசிரியர்களுக்காக மட்டுமே ஒரு சிறப்பு டெட் தேர்வு நடத்துகிற மாதிரி அமைச்சர் தரப்பு திட்டமிட்டு இருந்தது. ஆனால் இதை புரிந்து கொள்ளாத சில முக்கிய அதிகாரிகள் வெளியிட்ட அறிவிப்பால் குழப்பம் ஏற்பட, அறிவிப்பு வெளியான உடனே அது ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
ஆசிரியர்களுக்கு உறுதியளித்த அரசு வட்டாரம்
தனியார் பள்ளி ஆசிரியர்கள் உட்பட யாரும் பங்கேற்காத வகையிலும் அரசு பள்ளி ஆசிரியர்கள் மட்டுமே பங்கேற்கு விதத்திலும் டெட் தேர்வுக்கு விரைவில் ஒரு அறிவிப்பு வெளியாக இருக்கிறது. ஏற்கனவே பழைய பென்ஷன் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிக் கொண்டு வருகிற அரசு பள்ளி ஆசிரியர்களை தேர்தல் சமயத்தில் கூலாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், அவர்களது வேலையை காப்பாற்றித் தருகிற உறுதிமொழியை கோட்டை வட்டாரம் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
