அடிச்சது ரூ.1000 கோடி...! வைகோ மீது நாஞ்சில் சம்பத் பகீர் குற்றாசாட்டு..!
வைகோ நேர்மையின் நெருப்பும் கிடையாது, நாணயத்தின் கவசமும் கிடையாது. 1998-ம் ஆண்டு அடல் பிகாரி வாஜ்பாயுடன் கூட்டணி வைத்து அவரது ஆட்சியை 13 நாட்களில் ஜெயலலிதா கவிழ்த்து விட்டார்.

சொத்துக்களை குவித்த வைகோ
‘‘1998 -ம் ஆண்டில் அடல் பிகாரி வாஜ்பாயுடன் கூட்டணி வைத்து அந்த ஆட்சியை 13 நாட்களில் ஜெயலலிதா கவிழ்த்து விட்டார். அப்போது வைகோ, அடல் பிகாரி வாஜ்பாயிடம் அடித்ததே ஆயிரம் கோடி இருக்கும்’’ என பரபரப்பை கிளப்பியுள்ளார் மூத்த அரசியல்வாதி நாஞ்சில் சம்பத்.
மதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட மல்லை சத்தியா சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘‘ரூ.5 கோடி மதிப்பில் மிகப்பெரிய நட்சத்திர விடுதியை பல ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கினார் வைகோ. தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் 10 கிரவுண்டில் மிகப்பெரிய அரண்மனை போன்ற வீட்டை கட்டியுள்ளார். அரண்மனை போன்ற வீடு குறித்த செய்தி வெளியே வரக்கூடாது என ரகசியமாக புதுமனை புகு விழா நடத்தினார்.
வைகோவில் ரூ.250 கோடி சொத்து
வைகோவின் உறவினர் நடத்தும் மதுபான ஆலையால் வைகோ குடும்பத்திற்கு கோடிக்கணக்கில் வருமானம் வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் ரூ.250 கோடிக்கு வைகோ குடும்பத்துக்கு சொத்து இருக்கிறது. அதை வைத்து தான் இந்த வீட்டை அவர் கட்டியுள்ளார். வைகோ உறவினர் மதுபான ஆலை நடத்தி வரும் நிலையில், மதுவிற்கு எதிராக வைகோ நடைபயணம் செல்கிறார். துரை வைகோவிற்கு மத்திய அமைச்சர் ஆக வேண்டும் என்கிற எண்ணம் உள்ளது. அதனால் பாஜகவுடன் இணைந்து செயல்பட நினைக்கிறார் வைகோ’’ என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைடதத்திருந்தார் மல்லை சத்தியா. இதனை மறுத்த வைகோ ‘‘நான் நேர் நேர்மை நெருப்பு நாணயத்தின் கவசம்’’ என மறுத்து இருந்தார்.
வாஜ்பாயிடம் அடித்ததே ரூ 1000 கோடி
வைகோவின் இந்த மறுப்பு குறித்து வெளிப்படையாக பேசியுள்ள, அவருடன் நீண்ட காலமாக மதிமுகவில் நெருக்கமாக, அடுத்த கட்ட தலைவராக, மன்சாட்சியாக இருந்த நாஞ்சில் சம்பத், ‘‘வைகோ நேர்மையின் நெருப்பும் கிடையாது, நாணயத்தின் கவசமும் கிடையாது. 1998-ம் ஆண்டு அடல் பிகாரி வாஜ்பாயுடன் கூட்டணி வைத்து அவரது ஆட்சியை 13 நாட்களில் ஜெயலலிதா கவிழ்த்து விட்டார். சுப்பிரமணிய சாமியும், அந்த அம்மாவும் சேர்ந்து வாஜ்பாய் ஆட்சியை கவிழ்த்து விட்டார்கள். அப்போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதை ஒருங்கிணைக்கிற பொறுப்பை அண்ணன் வைகோவிடம் தான் கொடுத்தார் அடல் பிகாரி வாஜ்பாய். அப்போது அடித்ததே ஆயிரம் கோடி இருக்கும் என்கிறார்கள். அப்போதே என்னிடம் சொன்னார்கள்.
பண விஷயத்தில் வைகோ குறியாக இருப்பார்
நமக்கு 2000 ரூபாய் தான் பீஸ். அப்போது நமக்கு 2000 இருந்தால் போதும் என்கிற மனம் தான். நான் அதை ஒரு ட்விட்டரில் கூட பகிர்ந்து இருந்தேன். நான் சொல்வது ‘‘உடுப்பவை இரண்டு... மனி உடுத்துகிற மன்னரானாலும், மண்குடிசையில் இருக்கிற ஏழையானாலும் அவ்வளவுதான் வாழ்க்கை’’ என்று விட்டுவிட்டேன். நிறைய பேர் என்னிடம் சொன்னார்கள், நல்லா இருக்கட்டும். எங்கள் தலைவர் தானே.. நல்லா இருக்கட்டும்’’ என்று விட்டுவிட்டேன். ஆகையால் பண விஷயத்தில் வைகோ குறியாக இருப்பார். அவர் மீது மல்லை சத்தியா சொல்லக்கூடிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மைதான்’’ எனக்கூறியுள்ளார் நாஞ்சில் சம்பத்.
