- Home
- Politics
- ஆண்டுக்கு ரூ.12,000 கொடுத்துவிட்டு ரூ.38,900 பிடுங்கும் திமுக அரசு..! டேட்டாவோடு புட்டுப் புட்டு வைக்கும் எஸ்.ஜி.சூர்யா..!
ஆண்டுக்கு ரூ.12,000 கொடுத்துவிட்டு ரூ.38,900 பிடுங்கும் திமுக அரசு..! டேட்டாவோடு புட்டுப் புட்டு வைக்கும் எஸ்.ஜி.சூர்யா..!
திமுக ஆட்சியில் ஓராண்டுக்கு ரூ.12,000 கொடுத்துவிட்டு ஆறு விஷயங்களில் மட்டுமே வருடத்திற்கு ஒரு குடும்பத்திற்கு 38,900 ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டிருக்கிறது.

25 மாதங்களே கொடுக்கப்பட்ட மகளிர் உரிமை தொகை
ஓராண்டுக்கு ரூ.12,000 கொடுத்துவிட்டு 38 ஆயிரத்து 900 ரூபாயை ஒவ்வொரு குடும்பங்களிடம் இருந்தும் பிடுங்கக்கூடிய ஆட்சி தான் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது’’ என பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா ஒரு கணக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘‘2021 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆட்சிக்கு வந்தால் அனைத்து மகளிர்க்கும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை கொடுப்போம் என திமுக ஒரு வாக்குறுதி கொடுத்து, வாக்குகளைப் பெற்று ஆட்சி அமைத்தார்கள். ஆட்சிக்கு வந்த அடுத்த மாதத்தில் இருந்தே ஆயிரம் ரூபாய் கொடுப்போம் சொன்னவர்கள், 35 மாதங்களுக்கு பிறகு தான் இந்த திட்டத்தை கொண்டு வந்தார்கள். அப்படியானால் 25 மாதங்கள்தான் ஐந்து ஆண்டுகளில் உங்களுக்கு அந்த பணம் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டது.
அனைத்து மகளிருக்கும் கொடுக்கிறோம் எனச் சொல்லிவிட்டு இவர்கள் நிறைய கட்டுப்பாடுகளை விதித்து கொண்டு வந்து இவர்கள் சொன்ன இரண்டரை கோடி பெண்களுக்கு கொடுக்கவில்லை. ஒரு கோடி மகளிர்க்கு மட்டும்தான் இந்த ஆயிரம் ரூபாய் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் பாஜக அரசு மத்திய பிரதேச மாநிலத்தில் முதன் முதல் அமல்படுத்திய ஒரு திட்டம். அதை பார்த்து இவர்கள் அமல்படுத்தினார்கள் என்பது நாம் எல்லாருக்குமே தெரியும். ஆனால் இந்த ஆயிரம் ரூபாயை மக்களிடம் கொடுத்துவிட்டு இந்த நான்கரை ஆண்டுகளில் திமுக ஆட்சி ஒவ்வொரு குடும்பத்திடமும் இருந்து எவ்வளவு பணம் பிடுங்கிக்கொண்டு இருக்கிறார்கள் என ஒரு சின்ன ஒரு கணக்கு போட்டு பார்த்ததை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
2 முறை 100% உயர்த்தப்பட்ட மின் கட்டணம்
அது சரியா? தவறா? என நீங்களே சொல்லுங்கள். முதலில் எலெக்ட்ரிசிட்டி. அதாவது மின் கட்டண உயர்வு. இரண்டு முறை 100% கட்டணங்கள் உயர்வை கடந்த நான்கு ஆண்டுகளில் திமுக அரசாங்கம் செய்திருக்கிறார்கள். அப்போது ஒரு நடுத்தர குடும்பத்தில் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை 750 ரூபாய் கடந்த ஆட்சியில் கட்டியிருந்தார்கள் என்றால், இன்றைக்கு 1500 ரூபாய் கட்ட வேண்டிய ஒரு அவலம் ஏற்பட்டுள்ளது. இப்போது 750 ரூபாய் இரண்டு மாதத்திற்கு என எடுத்துக் கொண்டீர்களானால், ஆறு முறை மின்கட்டணம் கட்டுவதால் ஒரு வருடத்திற்கு ரூ.4,500 கூடுதல் செலவு நமக்கு ஏற்படுகின்றது.
அதேபோன்று பாலு. பால் அத்தியாவசியமான ஒரு விஷயம். அனைத்து வீடுகளிலும் பயன்படுத்தக்கூடிய ஒரு விஷயம். ஆவின் பால் கடந்த ஆட்சியில் 48 ரூபாய் ஒரு லிட்டர் இருந்தது. இன்றைக்கு 60 ரூபாயாக உயர்ந்துள்ளது.ஒரு நாளைக்கு 12 ரூபாய் நமக்கு கூடுதல் செலவு. 365 நாட்களுக்கு எடுத்துக் கொண்டீர்களானால் கூடுதல் செலவு 4,380 ரூபாய்.
50% சொத்து வரியால் அதிகரித்த வாடகைக் கட்டணம்
அடுத்தது நெய். எல்லோர் வீட்டிலும் பயன்படுத்தறதுதான். குறைந்தபட்ச அளவாகவெ எடுத்துக்கொண்டு மாதத்திற்கு ஒரு கிலோ நெய் ஒரு நடுத்தர குடும்பத்தில் பயன்படுத்துகிறார்கள் என வைத்துக் கொள்வோம். ஆனால் ஆவின் நெய் 515 ரூபாய் இருந்தது கடந்த ஆட்சிக்காலத்தில். இன்றைக்கு எவ்வளவு உயர்வு செய்திருக்கிறார்கள் என்றால் 40% விலை உயர்வு. 700 ரூபாய் வந்துவிட்டது. அப்படியானால் 12 மாதத்திற்கு 12 கிலோ நெய் வாங்குகிறோம் என்றால் ஒரு மாதத்திற்கு 185 ரூபாய் விலையேற்றம் ஒரு கிலோவிற்கு. 12 மாதத்திற்கு கணக்கு போட்டீர்கள் என்றால் ரூ. 2220 நெய் விலை கூடி இருக்கின்றது.
அதேபோன்று கடந்த நான்குரை ஆண்டுகளில் சொத்து வரி கிட்டத்தட்ட 50% உயர்ந்திருக்கின்றது. இதனால் அனைத்து பகுதிகளிலும் வாடகைகள் ஏற்றப்பட்டு இருக்கின்றன. இது நடுத்தர குடும்பத்தினருக்கு அது மிகப்பெரிய சுமையாக இருக்கின்றது. உதாரணமா ஒரு வீட்டுக்கு ரூ.1000, அல்லது ரூ.2000 வரைக்கும் வாடகைக்கு உயர்வு இருந்தாலும் குறைந்தபட்சம் 500 ரூபாய் உயர்வு செய்திருந்தாலும் கூட இந்த சொத்து வரி உயர்வால் 12 மாதங்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் கூடுதல் சுமையாக ஒரு ஆண்டுக்கு வந்து விடுகிறது.
இதைவிட ஒரு முட்டாள்தனம் உலகத்தில் எதுவுமே இல்லை
அதேபோன்று தண்ணீர் வரி 200 சதவீதமாக உயர்த்தப்பட்டிருக்கின்றது. குறைந்தபட்சமாக ஒரு மாதத்திற்கு 250 ரூபாய் கூடுதல் கட்டணம் தண்ணீருக்காக மட்டும் ஒரு நடுத்தர குடும்பத்தில் செலவிடும்போது அது 12 மாதத்திற்கு 3 ஆயிரம் ரூபாயாக வந்து விடுகிறது. இவை அனைத்தையும்விட அதிர்ச்சிகரமான ஒரு விஷயம். அனைத்து குடும்பத்தையும் குடிக்க வைப்பதில் திமுக அரசு உறுதியாக இருக்கிறது. அதாவது ஒரு நாளுக்கு டாஸ்மாக் கடைகளில் ஒரு கோடி பாட்டில்கள் விற்பனையாகிறது. இதன் மூலமாக ஒரு வருடத்திற்கு ஒரு குடும்பம் 24 ஆயிரத்து 800 ரூபாய் மதுக்கடைகளுக்கு செலவு செய்கிறது என்கிற கணக்கு நமக்கு கிடைத்திருக்கிறது. இது குறைந்தபட்ச செலவுதான். அதிகமாக குடித்துக் கொண்டே இருக்கக்கூடியவர்கள் பல ஆயிரம், லட்சங்கள் கூட செலவு செய்து கொண்டிருக்கிறார்கள்.
மாதம் ஆயிரம் ரூபாய் என்றால் ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய். இன்னும் பல கட்டங்களில் விலை உயர்வு ஏற்பட்டிருந்தாலும் குறைந்தபட்சமாக இந்த ஐந்து, ஆறு விஷயங்களை மட்டுமே நாம் எடுத்திருக்கிறோம். இந்த திமுக ஆட்சியில் இந்த ஆறு விஷயங்களில் மட்டுமே ஒரு வருடத்திற்கு ஒரு குடும்பத்திற்கு 38,900 ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டிருக்கிறது. ஓராண்டுக்கு ரூ.12,000 கொடுத்துவிட்டு 38 ஆயிரத்து 900 ரூபாயை உங்களிடம் இருந்து பிடுங்கக்கூடிய ஒரு திமுக ஆட்சி தான் இங்கே நடந்து கொண்டிருக்கின்றது. அதனால் இந்த ஆயிரம் ரூபாயை கொடுத்து விட்டார்கள் என்பதால் இவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என நீங்கள் நினைத்தீர்கள் என்றால் அதைவிட ஒரு முட்டாள்தனம் இந்த உலகத்தில் எதுவுமே இல்லை என்பதை தாய்மார்கள் புரிந்து கொள்ள வேண்டும்’’ என எச்சரித்துள்ளார் எஸ்.ஜி.சூர்யா.
