பல ஆண்டு வருடமாக முன்னோர்கள் தீபம் ஏற்றி வந்த திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற கூடாது என முஸ்லீம்கள் சொன்னபோது மதகலவரம் இல்லை, இந்துக்கள் அமைதியான முறையில் தீபம் ஏற்ற போனால் அது கலவரமா?

‘‘பல ஆண்டு வருடமாக முன்னோர்கள் தீபம் ஏற்றி வந்த திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற கூடாது என முஸ்லீம்கள் சொன்னபோது மதகலவரம் இல்லை, இந்துக்கள் அமைதியான முறையில் தீபம் ஏற்ற போனால் அது கலவரமா?’’ என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனுக்கு பலரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பாரம்பரியமிக்க திருப்பரங்குன்றம் மலை கடந்த சில மாதங்களாக சர்ச்சைக்குரிய மலையாக மாறி உள்ளது. இதனிடையே ராமரவிக்குமார் என்ற நபர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “கார்த்திகை தீபத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுவது வழக்கம். ஆனால் ஆங்கிலேயர் காலத்தில் இரண்டாம் உலகப்போர் சமயத்தில் இந்த நிகழ்வு நிறுத்தப்பட்டது. இதனால் இந்த தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்க வேண்டும் என்று கோரப்பட்டது.

மனுவை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில், “பாரம்பரியமாக உச்சிப்பிள்ளையார் கோவில் தீபத்தூணில் தான் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. ஆகையால் ரவிக்குமார் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி திருப்பரங்குன்றம் மலையில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதன் தொடர்ச்சியாக வெளியான தீர்ப்பில் சிக்கந்தர் தர்காவுக்கு அருகே அமைந்துள்ள தீப தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்றலாம் என்று உத்தரவிட்டார். நீதிபதியின் இந்த தீர்ப்பை பாஜக, இந்துதுவா அமைப்புகள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

இந்நிலையில் தீர்ப்பு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், “கார்த்திகை தீபத்தை கலவர தீபமாக மாற்ற மதவெறி சக்திகள் எல்லாவகையிலும் முயலுகிறார்கள். மதவெறி அரசியலை எந்த நாற்காலியில் அமர்ந்து அமல்படுத்தினாலும் அதை முறியடிக்கும் வலிமை தமிழ்நாட்டின் மதச்சார்பற்ற சக்திகளுக்கு உண்டு. இந்துத்துவா மதவெறி அரசியலை எதிர்கொள்ள குன்றென நிமிர்ந்து நிற்போம்” என்று தெரிவித்து இருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா, "கார்த்திகை தீபம் என்பது மங்களத்தின் அடையாளம். அதை கலவரத் தீபம் என்று அழைப்பதா? உயர்நீதிமன்றமே அனுமதித்த பிறகும், திருப்பரங்குன்றத்தில் விளக்கு ஏற்றுவதைக்கூட கலவரம் என்று கொச்சைப்படுத்துவது நீதிமன்ற அவமதிப்பு செயல். உங்கள் கட்சி ஆளும் கேரளாவில், ஐயப்ப பக்தர்கள் மீது தடியடி நடத்தி விரட்டினீர்கள். அங்கே இந்துக்களை ஒடுக்குவதும், இங்கே வந்து மதச்சார்பின்மை வேஷம் போடுவதும் உங்கள் இரட்டை நிலைப்பாடு இல்லையா? அமைதி காக்கும் பக்தர்களைப் கலவரக்காரர்கள் என்று பழிசுமத்துவதை நிறுத்துங்கள். முருகப்பெருமானின் சன்னிதியில் எரியும் தீபம், உங்கள் ஹிந்து விரோத அரசியலை நிச்சயம் பொசுக்கும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

சு.வெங்கடேஷன் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள பலரும், ‘‘திருப்பரங்குன்றத்தில் அசைவம் தின்று கலவரத்தை ஏற்படுத்த முயன்றபோது ஊரில் இல்லையா? அல்லது ஓட்டுப்பிச்சைக்காக அமைதி காத்தீர்களா? அந்த மலையை சிக்கந்தர் மலை என்று சொல்லி கலவரமாக்க முயன்றபோது வராத கவலை, இப்போது வருகிறது என்பதே உங்களுடைய மதவெறியை காட்டுகிறது.

பல ஆண்டு வருடமாக முன்னோர்கள் தீபம் ஏற்றி வந்த திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற கூடாது என முஸ்லீம்கள் சொன்னபோது மதகலவரம் இல்லை, இந்துக்கள் அமைதியான முறையில் தீபம் ஏற்ற போனால் அது கலவரமா? இந்துக்கள், இந்து கடவுளுக்கு கோவிலில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது மதக் கலவரமாக? உங்களை மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுத்த மதுரை மக்களுக்கு நல்லா பேசுறீங்க. ஆனால் அங்கே போய் ஆடு பலியிட்டால் மத நல்லிணக்கம் அப்படி தானே?’’ என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.